Latest Updates
-
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும்
சிறந்த மாற்றுத் தந்தையாக இருக்க வேண்டுமா? அப்ப இத ஞாபகத்துல வெச்சுக்கோங்க...
நீங்கள் மாற்றுத் தந்தையாக இருக்கும் நிலை ஏற்படுவது ஒரு மிகப்பெரிய முன்னேற்றம் தான். மாற்றுத் தந்தையாக இருப்பதென்பது ஒரு புதிய குழந்தையை பெற்றெடுத்து தந்தையாக மாறுவதில் இருந்து முழுவதும் மாறுபட்டதாகும். நீங்கள் தந்தையாக இருப்பதை விட இதில் சந்திக்கும் சவால்கள் அதிகம். புதிதாக பிறந்த குழந்தையை ஒரு தந்தையாக வளர்க்கும் போது, அந்த உறவு இயல்பாகவும், சுமூகமாகவும் இருக்கும். ஆனால், நீங்கள் ஒரு மாற்றுத் தந்தையாக வேறு ஒருவரின் இடத்தை பூர்த்தி செய்ய முயலும் போது, இதுவரையிலும் தங்கள் தந்தையுடன் இருந்து வந்த, குழந்தைகளை கணிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.
நீங்கள் குழந்தைகளை மிகவும் கவனத்துடன் அணுக வேண்டும் மற்றும் அவர்களுடைய உண்மையான தந்தையுடனான உறவை மதிக்க வேண்டும். அவர்கள் ஏற்றுக் கொள்ளும் வரையிலும் பொறுமையாக இருக்க வேண்டும். சில சமயங்களில் விரைவில் இது நடந்து, நிலைமை சாதகமாகி விடும். எனினும், பெரும்பாலான நேரங்களில், இந்த மாற்றத்திற்கு காலம் ஆகும் மற்றும் சற்றே அதிக காலம் கழித்து தான் உங்களை தங்களுடைய மாற்றுத் தந்தையாக ஏற்றுக் கொள்வார்கள். இவையனைத்தும் புதியதாகவும் மற்றும் ஒரு புதிய மனிதனை தங்களுடைய உள் வட்டத்திற்குள் கொண்டு வருவது அவர்களுக்கு கடினமாகவும் இருக்கும்.
மாற்றுத் தந்தையாக இருப்பதிலிருந்து முழுமையான தந்தையாக மாறும் போது நம்மை பிரிக்கும் விஷயமாக குழந்தைகளுக்கு தந்தையர்கள் இருப்பது இருக்கிறது. தந்தைகளை, அவர்கள் மிகவும் விரும்புவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளது. அவர்களுடைய ஆதிக்கம் உங்களுடையதை விட நன்றாக உருவாகி இருக்கும். நீங்கள் என்ன செய்தாலும், அந்த வளையத்திற்குள் நுழைய வேண்டாம். உங்களுக்கு சொந்தமாக ஒரு இடத்தை உருவாக்குங்கள் மற்றும் அதன் வழியாக குழந்தைகளுடன் உறவை கொண்டு வாருங்கள். ஆவர்களுடைய இடத்தை கொடுங்கள் மற்றும் மிகவும் அதிகமான ஆதிக்கம் செலுத்த வேண்டாம்.

பொறுமை தேவை
பொதுவாகவே தங்களுடைய உண்மையான அப்பா, அம்மா மற்றும் தங்களுடைய உண்யைமான குடும்பம் உடைந்ததால் குழந்தைகள் காயம் பட்டிருப்பார்கள். பெரும்பாலான குழந்தைகளை புதிய உறவுகளை உருவாக்காமல் பயப்படுத்தும் விஷயம் இதுதான். குhலம் தான் இதற்கு சரியான மருந்தாகும். ஆனாலும், உங்களால் முடிந்த போதெல்லாம் சுறுசுறுப்பாகவும், பாஸிட்டிவ் ஆகவும் அந்த குழந்தையுடன் இருந்து அவளுக்கு அல்லது அவருக்கு உதவி செய்யுங்கள்.

நேரம் கழித்தல்
பள்ளி வேலைகளை முடிக்கவும், ப்ராஜக்ட் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளில் அல்லது ஸ்கவுட் போன்ற கிளப்களில் கலந்து கொள்ளவும் அவர்கள் விரும்பினால், நீங்கள் அவர்களுடைய முயற்சிகளுக்கு கைகொடுங்கள். நீங்கள் எவ்வளவு அதிகமாக இதில் ஈடுபடுகிறீர்களோ, அவ்வளவு விரைவில் குழந்தை உங்களை மாற்றுத் தந்தையாக ஏற்றுக் கொள்வார். மேலும், நீங்கள் அவளுடைய வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருப்பதற்கு நன்றியுடையவளாக இருப்பாள்.

குழந்தைகளின் நேரம்
உங்களுக்கும் குழந்தைகள் இருந்தால், அவர்களை உங்களுடைய மாற்றுக்-குழந்தைகளுடன் கலந்து பேசவும் மற்றும் நன்கு நேரம் கழிக்கவும் வழி செய்து கொடுங்கள். இது போன்று அவர்களை ஒன்றாக இருக்கச் செய்யும் நேரங்கள் அவர்களிடையே உறவை ஏற்படுத்தவும் மற்றும் உறவை துரிதப்படுத்தவும் உதவும். மேலும், அவர்கள் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானவர்கள் என்றும் மற்றும் அவர்களுடைய நலனில் நீங்கள் கொண்டுள்ள சம அளவிலான அக்கறையையும் காட்டும்.

தொடர்பு கொள்ளுங்கள்
உங்களுடைய மாற்றுக் குழந்தை விரும்பும் நேரங்களில் பேசுவதற்கு நீங்கள் இருக்கிறீர்கள் என்ற நிலையை அவளுக்குத் தெரியப்படுத்துங்கள் மற்றும் அவள் சொல்வதை நல்ல படியாக கேளுங்கள். திறந்த மனதுடன் இருங்கள் மற்றும் வேறுபாடுகளை ஏற்றுக் கொள்ளுங்கள். குழந்தை உங்களிடம் வருவதற்கு முன்னர் அவளுடைய அனுபவங்கள் மாறுபட்டு இருந்திருக்கும். எனவே, தொடர்பு கொள்வது என்பது குழந்தையுடன் நெருக்கத்தை வரவழைக்க உதவும் வழிகளில் மிகச்சிறந்த வழியாகும்.

தனிமை வேண்டும்
நீங்கள் குழந்தைகளுடன் எவ்வளவு தான் ஆர்வமாகவும் மற்றும் தொடர்பு கொள்ளவும் விரும்பினாலும், அவர்களுடைய தனிமை மற்றும் இடத்தை மதித்திருக்க வேண்டியது அவசியமாகும். அவர்களுடைய விஷயத்தில் தலையிட விரும்பினால் அமைதியாக மற்றும் அன்பாக நீங்கள் அனுமதி கோர வேண்டும். அவர்களுடைய வாழ்வில் நீங்கள் எவ்வளவு பெரிய பாத்திரத்தை எடுத்துக் கொண்டிருந்தாலும் சரி, அவர்களுக்கென்று உண்மையான தந்தையொருவர் இருக்கிறார், அவரையே அவர்கள் முதன்மையாக பின்பற்றவும் விரும்பலாம்.

ஆதரவாக இருங்கள்
சிறந்த மாற்றுத் தந்தையாக இருப்பதற்கு இது ஒரு சிறந்த வழியாகும். அவர்களுடைய வாழ்க்கை மற்றும் விருப்பங்களில் நீங்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இது அவர்களுடைய வாழ்க்கை மற்றும் அவர்களுடைய வழிமுறைகளை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. ஒரு சிறந்த மாற்றுத் தந்தையாக நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவர்ளுடைய செயல்களை ஆதரிக்கவும் மற்றும் ஊக்கப்படுத்தவும் செய்வது தான்.



Click it and Unblock the Notifications
