Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது.. -
குருபகவான் அஸ்தமன நிலையில் இருப்பதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் புளி சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
இந்த 3 சின்னங்களில் ஒன்று உங்கள் கையில் இருந்தாலும் நீங்க மிகப்பெரிய துரதிர்ஷ்டசாலியாம் - ஜாக்கிரதை -
ருசியான வெஜ் பாயா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
பொலிவிழந்து இருக்கும் முகத்தை பளிச்சுன்னு மாத்தணுமா? அப்ப காபித் தூளை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
ஜூலை 25-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சியால் வெற்றிகளைக் குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆகஸ்ட் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகுது!
பால் பற்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 8 தகவல்கள்!!!
குழந்தை என்றாலே அழகு தான். அதற்கு ஈடு எதுவுமே கிடையாது. அதுவும் பொக்கை வாயுடன் ஒரு குழந்தை சிரிக்கும் அழகை காண இரண்டு கண்கள் போதாது. அதேப்போல் அதற்கு முதல் முறையாக முத்து போல் வளர்ந்த பற்களை காண்பதும், சமமான அழகை ஏற்படுத்தும். ஒரு நொடியில் உங்கள் குழந்தைக்கு அனைத்து பால் பற்களும் வளர்ந்துவிடும்.
இருப்பினும் அவை நிரந்தர பற்கள் அல்ல என்ற காரணத்தினால் பல பெற்றோர்கள் அதற்கு அதிக முக்கியத்துவத்தை அளிப்பதில்லை. அதனால் அதனை பற்றிய பல விஷயங்கள் அவர்களுக்கு தெரிவதில்லை. தெரிந்து கொள்ளவும் முயற்சி செய்வதில்லை. ஆனால் அதனை பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். அதனால் பால் பற்களை பற்றிய சில தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.

தகவல் 1
குழந்தைகளுக்கு 20 பால் பற்கள் இருக்கும். இவை குழந்தை பிறந்து 6 மாதத்திலிருந்து ஒரு வயதிற்குள் வளர தொடங்கிவிடும். குழந்தைக்கு 3-4 வயதாகும் வரை, இந்த பற்களின் வளர்ச்சி நீடிக்கும்.

தகவல் 2
பால் பற்களுக்கு கீழ் உள்ள நிரந்தர பற்கள் வளரத் தொடங்கும் நேரத்தில் தான் பால் பற்கள் விழத் தொடங்கிவிடும். அதிலும் கீழ் இருக்கும் முன் இரண்டு பற்களும் 6 வயதாகும் நேரம் பார்த்து விழுந்து விழும். அதிலிருந்து ஒவ்வொரு வருடமும் தோராயமாக 2 முதல் 4 பால் பற்கள் வரை விழும். 10 முதல் 13 வயதிற்குள் அனைத்து பால் பற்களும் விழுந்துவிடும்.

தகவல் 3
குழந்தைக்கு முதல் பால் பல் முளைக்கும் வேளை அல்லது ஒரு வயது நிறைவு அடையும் தருவாயில், பல் மருத்துவரை சந்திக்கலாம். இந்த நேரத்தில் வாயை தூய்மையாக வைத்துக் கொள்ளும் வழிமுறைகளை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அதனோடு குழந்தையின் உணவு பழக்கங்களையும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இது குழந்தை பருவத்தில் பற்களில் பிரச்சனைகள் ஏற்பட்டு விடாமல் தடுக்கலாம்.

தகவல் 4
குழந்தைகளுக்கு பால் பற்கள் விழும் நேரத்தில் ஈறுகளில் புண்கள், வாயில் நீர் ஊறுதல், பசியின்மை மற்றும் தூக்கம் கெடுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவ்வேளை அவர்களுக்கு ஈறுகளில் எரிச்சல் ஏற்படும். அதிலிருந்து விடுபட பொம்மைகளை அல்லது கைகளை மெல்வது அவர்களது வாடிக்கையாகும். சுத்தமில்லாத பொருட்கள் அல்லது விரல்களை மெல்லும் போது, வயிற்றுப் போக்கு மற்றும் காய்ச்சல் உண்டாகலாம். அதனால் குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்றால் மருத்துவரை அணுகுங்கள்.

தகவல் 5
எவ்வளவு சீக்கிரம் குழந்தையின் பற்களை சுத்தம் செய்ய ஆரம்பிக்கிறீர்களோ, அவ்வளவு நல்லதாகும். குழந்தை பிறந்து ஒரு வயதாகும் வரை, அதன் ஈறுகள் மற்றும் பற்களை துணியை கொண்டு துடைத்து எடுக்கவும். ஒரு வருடம் கடந்த பின் மென்மையான பிரஷை பயன்படுத்தி, அவர்களின் பற்களை துலக்கிவிடுங்கள்.

தகவல் 6
குழந்தைகளுக்கான ஃப்ளோரைடு டூத் பேஸ்ட்டை (500 பி.பி.எம் - பார்ட்ஸ் பெர் மில்லியன்) குழந்தைக்கு 2 வயது முடிவடைந்தவுடன் பயன்படுத்தலாம். அதிலும் குழந்தை வாய் கொப்பளித்து துப்புவதற்கு பழகியவுடன், 1000 பி.பி.எம் கொண்ட ஃப்ளோரைடு டூத் பேஸ்ட்டை பயன்படுத்துங்கள். குறிப்பாக இதனை ஃப்ளோரைடு அல்லாத தண்ணீருடன் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. இந்தியாவிலுள்ள நகராட்சி வழங்கும் நீரில் ஃபுளோரைடு இருப்பதில்லை. ஃப்ளோரைடு கலந்த தண்ணீர் வரும் வட்டாரத்தில் குடியிருந்தால், குழந்தைக்கு 6 வயாதாகும் போது ஃப்ளோரைடு டூத் பேஸ்ட்டை பயன்படுத்துங்கள்.

தகவல் 7
குழந்தை பால் குடிக்கும் போது, தூங்கிவிட்டால் அதன் வாயில் தேங்கியிருக்கும் பால் அங்கேயே இருக்கும். இது பற்களை சுற்றி கொண்டு, அதனை சொத்தையாக்கிவிடும். அதில் மேல் உள்ள முன் பற்களும், கடைவாய் பற்களும் தான் அதிகமாக பாதிப்படையும்.

தகவல் 8
வருடத்திற்கு இரண்டு முறை பற்களை பரிசோதித்து கொள்ளுங்கள். சீரான முறையில் பரிசோதித்து கொண்டால் பற்கள் சிதைவுகளில் இருந்து குழந்தைகளை காக்கலாம். சில குழந்தைகளுக்கு பற்கள் சொத்தையாவது, முறையில்லாத பற்களின் வளர்ச்சி அல்லது மோசமான பற்களின் ஆரோக்கியம் ஆகிய பிரச்சனைகள் இருக்கும். அவர்கள் அடிக்கடி மருத்துவரை அணுக வேண்டியிருக்கும்.



Click it and Unblock the Notifications