Latest Updates
-
அக்டோபர் 17-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட் ரெசிபி - உருளைக்கிழங்கை இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
100 ஆண்டுகள் கழித்து நவராத்திரியில் உருவாகும் பல ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரர்கள்! -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பணத்தாசை கொண்டவர்களாம் - இவங்களுக்கு பணம்தான் முக்கியமாம் -
உங்கள் கையில் விதி ரேகை இல்லாமல் இருப்பது அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? உண்மை என்னனு தெரிஞ்சிக்கோங்க -
வாஸ்துப்படி இந்த 5 சிலைகளை வீட்டுல வாங்கி வையுங்க.. வீட்டில் பணப்பிரச்சனையே வராது.. -
தலையணைக்கு அடியில் இந்த 5 பொருட்களில் ஒன்றை வைத்து தூங்குவது உங்களுக்கு சகல நன்மைகளையும் கொடுக்குமாம் -
1 கப் அவலும், 1 வாழைப்பழமும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
2 முட்டை இருந்தா இந்த மாதிரி அவிச்ச முட்டை ஆம்லெட் ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா வேற லெவலில் இருக்கும் -
உங்க தலைமுடி வறண்டு தேங்காய் நார் போல் இருக்கா? அப்ப வீட்டிலேயே இந்த கெரட்டின் ஹேர் மாஸ்க்கை போடுங்க..
குழந்தைகளுக்கு மனஅழுத்தம் வராமல் இருக்க வேண்டுமா?

குழந்தைகளது மனஅழுத்தத்தை குறைக்க...
1. முதலில் குழந்தைகளுடன் பெற்றோர்கள் நண்பர்கள் போன்று பழக வேண்டும். மேலும் குழந்தைகளது கஷ்டத்தையும், சந்தோஷத்தையும் பகிர்ந்து கொள்ளும் ஒரு நல்ல நண்பர்களாக வேண்டும். அவர்கள் படிக்கும் போது அவர்களோடு உட்கார்ந்து, உங்களுக்கு தெரிந்த முறையில் அவர்கள் மனதில் பதியும் வகையில் ஈஸியாக சொல்லித்தரலாம். வீட்டில் இருக்கும் போது ஏதேனும் பாட்டை போட்டுவிட்டு அவர்களோடு நீங்களும் ஆடலாம். மேலும் அவர்களோடு விளையாடலாம்.
2. குழந்தைகளுக்கு போதுமான அளவு தூக்கமானது இருக்க வேண்டும். நிம்மதியான தூக்கம் அவர்களுக்க மனஅழுத்தம் ஏற்படாமல் பாதுகாக்கும்.மேலம் குழந்தைகளுக்கு குறைந்தது 9 10 மணிநேரமாவது தூங்க வைக்க வேண்டும். குழந்தைகள் மனநிலையானது பாதிப்படைய போதிய தூக்கம் இல்லாததே என்றும் சொல்லலாம்.
3. குழந்தைகளை ஏதேனும் ஒரு விளையாட்டில் ஈடுபடுத்தலாம். அதற்காக உங்களது கனவான விளையாட்டுகளை துன்புறுத்தி விளையாட வைக்கக் கூடாது. குழந்தைகளுக்கு பிடித்த விளையாட்டிலேயே அதிகமாக ஈடுபட வைக்க வேண்டும். இதனால் அவர்களது மனஅழுத்தத்தை குறைக்கலாம்.
4. வாரத்திற்கு ஒரு முறை அவர்களை எங்கேனும் அழைத்துச் செல்லலாம். இதனால் அவர்கள் சந்தோஷமாக இருப்பதோடு, அவர்களது மனமும் மகிழ்ச்சியாக இருக்கும். அவ்வாறு அழைத்துச் செல்லும் இடமானது, அவர்களுக்கு பயன்படக்கூடிய வகையில் இருந்தால், மேலும் அது அவர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாகவும் இருக்கும்.
5. குழந்தைகளுக்கு ஆசனத்தில் ஒரு பயிற்சியான, மூச்சை உள்ளிழுத்து வெளிவிடும் பயிற்சியை சொல்லிக் கொடுக்கவும். இதனால் எப்போதெல்லாம் உங்கள் குழந்தைகள் கோபமாக அல்லது மனமானது அழுத்தத்துடன் இருப்பது போல் இருக்கிறார்களோ, அப்போது அவர்களை மூச்சை உள்ளிழுத்து வெளிவிடச் சொல்லுங்கள். அதனால் பல நன்மைகள் இருக்கிறது. இவ்வாறு செய்வதால் அவர்கள் டென்சன் மற்றும் மனஅழுத்தம் குறையும்.
6. மேலும் அவர்கள் வருத்தமாகவோ அல்லது கஷ்டத்துடனோ இருக்கும் போது அவர்களுக்கு ஏதேனும் சாக்லெட் அல்லது அவர்களுக்கு பிடித்த பொருளைக் கொடுத்து அவர்களை சந்தோஷப்படுத்தலாம். ஏனெனில் குழந்தைகளுக்கு அவர்கள் எதிர்பார்க்காததை செய்யும் போது அனைத்தையும் மறந்து சந்தோஷப்படுவர்.
மேற்கூறியவாறு செய்து பாருங்கள், குழந்தைகள் சந்தோஷமாக இருப்பதோடு, உங்களின் மீது இருக்கும் அன்பும் அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications
