Latest Updates
-
சனிப்பெயர்ச்சியால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
வெயிலுக்கு ஏற்ற ஜில்லென்ற நன்னாரி பால் சர்பத் ரெசிபி - செஞ்சு பாருங்க, குளுகுளுனு சூப்பரா இருக்கும் -
கேரளா ஸ்டைல் தக்காளி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க, இட்லி, தோசைக்கு வேற லெவலில் இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடீஸ்வர யோகத்தைப் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விவாகரத்து விகிதம் குறைவு என்பது பெருமையா? குடும்ப கௌரவத்திற்காகத் தம்பதிகள் அனுபவிக்கும் மௌனமான சித்திரவதை இதுதானா? -
திருமண உறவில் வரதட்சணை கொடுமை! உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு உங்கள் பாதுகாப்பிற்கு எவ்வளவு முக்கியம் தெரியுமா? -
சாணக்கிய நீதி படி பெண்கள் அவர்களின் கணவரிடம் எப்போதும் மறைக்கும் 5 ரகசியங்கள் என்னென்ன தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, ஹோட்டலில் சாப்பிடுவதை விட செமையா இருக்கும் -
வெயில் கொளுத்துதா? இந்த வாஸ்து செடிகளை வீட்ல வைங்க… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தானா வரும்! -
June 2026 Horoscope: ஜூன் மாதத்தில் பெரும் நஷ்டத்தையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள்
சுகாதாரம் பற்றி குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்க!

குளிப்பது, பற்களை சுத்தமாக வைத்துக்கொள்வது குறித்து குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கும் பெற்றோர்கள் உணவு உண்ணும்போது கை கழுவியபின்பே சாப்பிடவேண்டும் என்பதை குழந்தைகளுக்கு அறிவுறுத்தவேண்டும்.
இந்தியாவில், கைகளை ஒழுங்காக கழுவாமல் சாப்பிடுவதால் உண்டாகும் வயிற்றுப்போக்கு நோயால் வருடத்திற்கு 5 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இதே காரணத்திற்காக உலக அளவில் 29 லட்சம் குழந்தைகள் இறப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. இதனால் வளரும் நாடுகள் மற்றும் பின்தங்கிய நாடுகளில் கை கழுவுதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
சுகாதாரமான பழக்கங்கள்
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அடிக்கடி உண்டாகும் வயிற்றுப்போக்கு, ஜலதோஷம், வாந்தி, மயக்கம், குடல்புண் போன்ற பல நோய்களுக்கு அடிப்படைக் காரணம் அவர்கள் கைகளை ஒழுங்காக சுத்தம் செய்யாமல் இருப்பதே. ஸ்டெபைலோகாக்கஸ் ஆரியஸ் (Staphylococus Aureus) என்ற கிருமி நகங்களின் இடுக்குகளில் ஒட்டிக்கொண்டு உணவருந்தும் சமயம் உட்சென்று குடலில் பல்கிப் பெருகி நோயைத் தோற்றுவிக்கிறது.
குழந்தைகள் மணலில் விளையாடும் போதும், மலம் கழித்துவிட்டு வரும்போதும், கை கால்களில் பாக்டீரியாக்கள் ஒட்டிக்கொள்கின்றன. இவற்றை சரியான முறையில் கை, கால்களை சுத்தம் செய்வதால் மட்டுமே அழிக்க முடியும்.
கைகழுவ கற்றுக்கொடுங்க
காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். பிறகு தான் பல் துலக்க வேண்டும். எந்த வேலை செய்தாலும், உடனே கைகழுவுதல் வேண்டும். சமைத்த பின்பு கூட பெண்கள் கைகளை கழுவுவது நல்லது.
குழந்தைகளுக்கு எந்த ஒரு உணவு கொடுப்பதற்கு முன்பும், அவர்களது கைகளை நன்கு சுத்தமாக கழுவிய பின்பே கொடுக்க வேண்டும். இந்த பழக்கத்தை அவர்கள் சீராக கடைப்பிடிக்கும்படி செய்ய வேண்டும்.
மலம் கழித்தபின் சோப்பு போட்டு கைகளை கழுவுவது நல்லது. கைகளை அவசர அவசரமாக 2-3 வினாடிகளில் கழுவக் கூடாது. குறைந்தது 30 வினாடியாவது கை கழுவுவதற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். கைகளை நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். நக இடுக்குகளில் தண்ணீர் விட்டு கழுவ வேண்டும். இந்த முறைகளைக் கடைப்பிடித்து வந்தாலே, நோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம் என்கின்றனர் குழந்தைநல மருத்துவர்கள்.



Click it and Unblock the Notifications