For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளுக்கு சிறந்த நண்பர்களை அறிமுகப்படுத்துங்கள்!

By Mayura Akilan
|

Best Friend Benefits Childs Mind, Body
சிறந்த நண்பர்கள் கிடைத்தால் உங்கள் குழந்தைக்கு நேர்மறை எண்ணங்கள் ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

குழந்தைகளின் நடத்தைகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கான்கார்டியா பல்கலைக்கழகத்தின் மனிதவள மேம்பாட்டுப் பிரிவுத்துறை ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 5ஆம் வகுப்பு, 6ம் வகுப்பு மாணவர்களை கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. 55 மாணவர்கள், 48 மாணவிகள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

அவர்களின் மன அழுத்தம் குறித்தும், உணர்வுகள் குறித்தும் பரிசோதிக்கப்பட்டது. தனியாக இருக்கும் குழந்தைகளை விட நண்பர்களுடன் இருக்கும் குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசோல் ஹார்மோன் குறைவாக சுரந்தது.

அதேபோல் மாணவர்களுக்கு உமிழ்நீர் சுரப்பும் பரிசோதனை செய்யப்பட்டது. நல்ல நண்பர்கள் மூலம் ஏற்படும் உற்சாகமான விளையாட்டுக்கள், மாணவர்களின் எதிர்மறை எண்ணங்களை நீக்கி நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்தியது தெரியவந்தது. குழந்தைப் பருவத்தில் கிடைக்கும் நல்ல நட்பானது உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் அவர்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary

Best Friend Benefits Child's Mind, Body | குழந்தைகளுக்கு சிறந்த நண்பர்களை அறிமுகப்படுத்துங்கள்!

A best friend can help children deal with negative experiences, a new study suggests.
Story first published: Wednesday, May 2, 2012, 13:47 [IST]
Desktop Bottom Promotion