For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நோய் பாதிப்பு அதிகம் இருக்கும் நாடுகளில் குழந்தைகளின் ஐகியூவுக்கு கடும் பாதிப்பு-ஆய்வு

By Mayura Akilan
|

மனிதர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பது அவர்களின் நுண்ணறிவுத்திறனே. தங்களின் அறிவுத்திறனை பயன்படுத்தி அவர்கள் பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வுகாண்பதன் மூலமே அவர்களால் எளிதில் வெற்றிபெற முடிகிறது. இந்த நுண்ணறிவுத் திறனுக்கு உடல் ஆரோக்கியம் அவசியம் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

மனிதர்களின் சிறந்த நுண்ணறிவுத் திறனுக்கு (ஐ க்யூ) அவரது கல்வியை விட, நல்ல ஆரோக்கியமே முக்கிய பங்கு வகிக்கிறது என்று அந்த ஆய்வில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோய்களால் பாதிப்பு

அமெரிக்காவின் நியூமெக்சிகோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்களின் குழு, அமெரிக்கா முழுவதும் பரவலாக, மக்களின் நுண்ணறிவுத் திறனை(IQ) சோதித்ததில், தொற்று நோய்கள், IQ திறன்களை பாதிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன என்று தெரிவிக்கின்றனர்.

மனிதர்கள், குறிப்பாக குழந்தைகள், தங்களின் மூளை இயங்குவதற்கு, அதிகளவிலான ஆற்றலை செலவழிக்கின்றனர். ஆனால், தொற்றுநோய் போன்ற வியாதிகள் தாக்கும்போது, இந்த ஆற்றல் பெருமளவில் உறிஞ்சப்பட்டு, நுண்ணறிவு மேம்பாடு தடைபெறுகிறது.

இந்த தொற்றுநோய்கள்தான், உலகின் பல்வேறு பகுதிகளில், மனிதனின் IQ வேறுபட்டிருப்பதற்கான காரணம். இது எங்கே அதிகமாக இருக்கிறதோ, அங்கே IQ குறைவாகவே இருக்கும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

நுண்ணறிவுத்திறன் விகிதம்

ஒரு மனிதன் தனது பூர்வீக இருப்பிடத்தை விட்டு, வாழ்வதற்காக வேறிடம் சென்று குடியேறும்போது, புதிய சூழலை பழகிக்கொள்வதற்காக மூளையானது சிறப்பாக தயாராகிறது. இதனால், அத்தகைய மனிதர்களின் IQ அதிகமாக உள்ளன என்று முந்தைய ஆய்வுகள் தெரிவித்தன. ஆனால், அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வானது, அந்த கருத்தினை பொய்யாக்கி விட்டது. ஏனெனில், அமெரிக்காவில் ஒரே நிலையிலுள்ள பல மாநிலங்களில் நுண்ணறிவுத் திறன் விகிதங்கள் மாறுபட்டு இருந்தன.

ஐ க்யூ விகிதங்கள் குறைந்திருந்த மாநிலங்களில், தொற்றுநோய் பிரச்சினைகள் இருந்தன. ஐ க்யூவிகிதம் அதிகமிருந்த மாநிலங்களில் அந்த பிரச்சினைகள் இல்லை. மற்றபடி, அந்த மக்களுக்கும், மாநிலங்களுக்கும் வித்தியாசங்கள் எதுவுமில்லை. அதேசமயம், நுண்ணறிவுத் திறன் சிக்கலானது, ஜீன் தொடர்புடையதாக இருந்தால், அதை மாற்றுவது கடினம் என்றும் அந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

English summary

Lower IQs found in disease-rife countries, scientists claim | குழந்தைகளின் 'ஐகியூ'வை பாதிக்கும் நோய்கள்!

People who live in countries where disease is rife may have lower IQs because they have to divert energy away from brain development to fight infections, scientists in the US claim.The controversial idea might help explain why national IQ scores differ around the world, and are lower in some warmer countries where debilitating parasites such as malaria are widespread, they say.
Story first published: Tuesday, October 25, 2011, 14:52 [IST]
Desktop Bottom Promotion