For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் குழந்தை எப்பப் பாத்தாலும் சேட்டை பண்றானா.. அவனோட ஜாதகம் இங்க இருக்கு படிங்க

|

துறுதுறுவென இருக்கக்கூடிய குழந்தைகளை அடக்கி ஆளுவது என்பது அசாதரண காரியமல்ல. இது ஆரம்பகாலங்களில் ரசிக்கத் தக்கதாக இருந்தாலும் போகப் போக பெரிய பிரச்சினைகளை உண்டாக்கிவிடும்.

Childs Psychology

24 மணிநேரமும் கண்களில் விளக்கெண்ணெயை ஊற்றிக் கொண்டு அவனை சந்திக்க வேண்டியதாக இருக்கும். அதே சமயத்தில் ஆக்டிவாகவே இல்லாமல் இருப்பது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும். இவர்களின் உளவியலை புரிந்துக் கொள்வது மட்டுமே இதற்கானத் தீர்வாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குழந்தைள் எவ்வாறு இயக்கப்படுகிறார்கள்

குழந்தைள் எவ்வாறு இயக்கப்படுகிறார்கள்

குழந்தைகள் தங்களுக்குள் இருக்கிற உள்ளுணர்வால் முதலில் இயக்கப்படுகிறார்கள். அதை எப்படி பயன்படுத்த வேண்டும் அல்லது கட்டுப்படுத்த வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் இந்த சுயநலத் தூண்டல்களிருந்து வெளிவர நாம் தான் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். நமது அறிவுரைகள் அவனை அதிலிருந்து வெளிக்கொணரும்.

Most Read: கர்ப்பகாலத்தில் அதிமதுரமா வேணவே வேணாம் ? கருச்சிதைவுக்கு நீங்களே காரணம் ஆகாதீர்கள்

சிறந்த பெற்றோர்

சிறந்த பெற்றோர்

பெற்றோர் என்பதற்கு எந்தக் கல்லூரியிலும் பட்டமெல்லாம் கிடையாது. அது நமது சமூக கட்டமைப்பின் தவிர்க்க இயலாத ஒரு கடமை. அப்பறம் எப்படி சிறந்த பெற்றோராக திகழ்வது என்று கேட்பீர்கள்? இதோ சில வழிகள் இருக்கின்றன

தெரிந்து கொள்வோம்

தெரிந்து கொள்வோம்

உங்கள் குழந்தைக்கு பிடிப்பது என்ன பிடிக்காதது என்ன?

உங்கள் குழந்தையை எந்தச் செயல் சிரிக்க வைக்கும் எந்தச் செயல் அழவைக்கும்

உங்கள் குழந்தையை எது புத்துணர்ச்சியூட்டும் எது துயரத்திற்கு அழைத்துச் செல்லும்

போன்ற அடிப்படைகளைத் தெரிந்து வைப்பவரே சிறந்த பெற்றோராக இருக்க முடியும்.

குழந்தைகளின் உளவியல்

குழந்தைகளின் உளவியல்

குழந்தைகளின் உளவியல் வளர்ச்சிக்கான உளவியலாகப் பார்க்கப்படுகிறது. நடக்க ஆரம்பித்தலிருந்து இளமைப் பருவத்தை அடையும் வரை மொழித்திறன், சமூக மாற்றம் உணர்ச்சியில் வளர்ச்சி ஆகியவற்றைக் கண்காணிப்பது தான் குழந்தைகளுக்கான உளவியலாகும். இந்தத் தருணங்களில் அவனது நிலைப்பாட்டைக் கவனித்து அவனுக்குரிய உரிய பண்பாடுகளை பயிற்றுவிக்க வேண்டும்.

ஏன் குழந்தைகள் உளவியலை புரிந்துக் கொள்ள வேண்டும்

ஏன் குழந்தைகள் உளவியலை புரிந்துக் கொள்ள வேண்டும்

பணம் சம்பாதிப்பதற்காக ஓடும் பெற்றோர்களால் குழந்தைகளின் உளவியல் மிக மோசமாகப் பாதிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்று தெரிந்து கொள்ளும் போது தான் அவர்களுக்குத் தேவையானதை சம்பாரிக்க முடியும்.

நாசமாகும் குழந்தைகளின் வாழ்வு

நாசமாகும் குழந்தைகளின் வாழ்வு

குழந்தைகளின் உளவியலை சரியாகப் புரிந்துக் கொள்ளாத பெற்றோர்களால் தான் எண்ணற்ற குழந்தைகளின் எதிர்கால கனவுகள் சுக்கு நூறாகப் போகின்றன. அப்படி என்ன முக்கியமா குழந்தைகளின் உளவியலை புரிந்து கொள்வது? அப்பிடின்னு கேள்வி கேக்குறவங்க அதுக்கான காரணத்தை கீழே படிங்கள்.

#1 குழந்தைகளை கவனியுங்கள்

#1 குழந்தைகளை கவனியுங்கள்

குழந்தைகளை கவனிப்பது தான் அவர்களது உளவியலை தெரிந்து கொள்வதற்கான பிரத்யேகமான வழியாகும். ஒவ்வொரு குழந்தைக்கும் தனித் தன்மை உண்டு. அது தான் அவனது வாழ்நாள் முழுமைக்கும் கூட வரபோகிற ஒரு விசயம் எனவே ஒரு போதும் பிற குழந்தைகளோடு ஒப்பிட்டுப் பேசாதீர்கள்.

Most Read: சிசேரியனுக்கு பிறகு டயட் எடுத்துக்கனுமா ?ஊட்டச்சத்துகளில் எது சாப்பிடலாம் எது சாப்பிடக்கூடாது

குழந்தையை புரிந்து கொள்வதற்கான கேள்விகள்

குழந்தையை புரிந்து கொள்வதற்கான கேள்விகள்

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான செயல்பாடு எது?

ஒரு விசயம் பிடித்தது என்றால் எப்படி வினையாற்றுவான். பிடிக்க வில்லை என்றால் எப்படி வினையாற்றுவான். அது காய்கறி, சீக்கிரமாக தூங்குதல், வீட்டுப்பாடம் செய்தல் இப்படி என்னவாக வேண்டுமானல் இருக்கலாம்.

சமூகத்தோடு அவன் எப்படி ஒத்து வாழ்கிறான். பிறரோடு விசயங்களை பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறானா? புதிய விசயங்களை செய்ய விரும்புகிறானா?

இந்தக் கேள்விகளை உங்களுக்குள் கேட்டுக் கொள்ளுங்கள். அவர்களை மதிப்பிடாதீர்கள் . மாறாக தெரிந்து கொண்டு விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்.

#2 குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள்

#2 குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள்

குழந்தைகளோடு நேரமெல்லாம் செலவிடாமல் இருப்போமா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உங்கள் அகராதியில் இருக்கிற குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு போய் விடுவது, பள்ளியிலிருந்து அழைத்து வருவது, சாப்பிடும் போது நாலு வார்த்தைகளை பற்றி விசாரிப்பது மட்டும் போதுமானதல்ல.

வேறு எப்படி செலவிடுவது

வேறு எப்படி செலவிடுவது

உங்கள் குழந்தைகளின் உரிமைகளை அவர்களையே பாதுகாப்பாக வைத்திருக்க உதவச் சொல்லிக் கொடுங்கள். அவர்களின் பிடித்தமான தொலைக்காட்சி நிகழ்சிகளைப் பற்றிப் பேசுங்கள். அவனிடம் அதன் கதைகளை உள்வாக்குங்கள். அவரோடு பேசிக் கொண்டே விளையாடுங்கள்.

குழந்தைகளுக்கு மறைக்க தெரியாது மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லி விடுவார்கள். இது எந்த அழுக்குகளையும் அவன் மனதில் சுமக்க விடாது.

#3 அவனுக்கான செலவிப்படும் நேரம் அவனுக்காக மட்டுமே

#3 அவனுக்கான செலவிப்படும் நேரம் அவனுக்காக மட்டுமே

வண்டி ஓட்டும் போதோ சமைக்கும் போதோ அல்லது இன்னொரு வேலையைச் செய்துக் கொண்டோ அவனைப் பற்றி கேட்பது தவறு. அவனுக்கான தனிப்பட்ட நேரத்தை அவன் எதிர்பார்ப்பான். அப்போது மட்டும் தான் அவன் வாய் திறப்பான். 5 அல்லது 10 நிமிடமோ முழுமையாக அவனுக்கு மட்டும் நேரம் ஒதுக்குங்கள்.

#4 குழந்தைகளின் சுற்றுப்புறத்தை ஆராயுங்கள்

#4 குழந்தைகளின் சுற்றுப்புறத்தை ஆராயுங்கள்

குழந்தைகள் அவர்களைச் சுற்றி என்ன நடக்கிறதோ அதைப் பொறுத்து தான் அவரது செயல்பாடுகளும் அமைகின்றன. அவனிடம் பேசுவோர் எத்தகைய கருத்தை திணிக்கிறார்களோ அது தான் அவன் மனதில் ஆழமாகப் பதிகிறது. ஒருவன் அதிகமாக சேட்டை செய்கிறான் அல்லது சமூகத்தில் இருந்து விலகி இருக்கிறான் என்றால் சுற்றுப்புறமே காரணம். அதைக் கண்டறிந்தாலே இந்தப் பிரச்சினைகளை தவிடு பொடியாக்கி விடலாம்.

Most Read: பிறந்த குழந்தைகளுக்கு கொசுவிரட்டிகள் பாதுகாப்பானதா ? இதையெல்லாம் பயன்படுத்தாதீங்க

#5 குழந்தையின் மூளையின் செயல்பாடுகளை கவனியுங்கள்

#5 குழந்தையின் மூளையின் செயல்பாடுகளை கவனியுங்கள்

குழந்தையின் உளவியலை புரிந்துக் கொள்ளும் பெற்றோர்கள் கூட இதில் கோட்டை விடுகிறார்கள். அதனால் தான் இன்றைய கால குழந்தைகளுக்கு தற்கொலை என்பது சாதரணமான விசயமாக மாறிவிட்டது. பிரச்சினைகளுக்கான தீர்வு, எதிர்கொள்ளல் போன்றவற்றை சரியாக செய்கிறானா என்பதை ஆராயுங்கள்.

#6 அவர்களது கதைகளை கூற வாய்ப்பளியுங்கள்

#6 அவர்களது கதைகளை கூற வாய்ப்பளியுங்கள்

இன்பமோ துன்பமோ யாரிடமாவது சொல்ல வேண்டும் என்பது அனைவருக்கும் பொதுவானது. எனவே குழந்தைகளின் அனுபவங்களை பகிர அனுமதியளியுங்கள்.

கவனிக்க வேண்டியது.

கவனிக்க வேண்டியது.

வார்த்தைகளை சொல்லும் போது எந்தத் தொணியில் பேசுகிறான் என்பதை கவனிக்க வேண்டும்.

பேசும் போது அவனது முகப்பாவனைகளை உற்று நோக்குங்கள். அங்கு அவன் எதற்கு பயப்படுகிறான். எதை விரும்புகிறான் என்கிற ஜாதகம் கிடைத்துவிடும்.

அவனது உடல் மொழியை கவனியுங்கள். அவன் கண் எதைக் கவனிக்கிறது. கை கால் அசைவுகள் எதை உணர்த்துகிறது. போன்ற எல்லாவற்றையும் கவனியுங்கள்.

#7 உணர்வுகளை பல வழிகளில் வெளிப்படுத்துவார்கள்

#7 உணர்வுகளை பல வழிகளில் வெளிப்படுத்துவார்கள்

குழந்தைகள் தங்களது உணர்வுகளை பல வழிகளில் வெளிப்படுத்துவார்கள். அது ஓவியமாக இருக்கலாம். அல்லது இசையாக இருக்கலாம் அந்த திறனை வளர்க்க உந்துதலாக இருங்கள். ஆரம்பத்தில் குறுகிய வட்டத்தில் அணுகாதீர்கள். அவனுடைய விருப்பத்தை அவனே தேர்வு செய்ய வாய்ப்பளியுங்கள்

#8 அனுமானிக்க வேண்டாம்

#8 அனுமானிக்க வேண்டாம்

உங்கள் குழந்தைகள் சந்தோசமாக இருக்கிறார்கள் என்று அனுமானிக்க வேண்டாம். அந்த நினைப்பு அப்பறம் சந்தோஷ் சுப்பரமனியம் படத்தில் ஜெயம் ரவி பிரகாஷ் ராஜிடம் பேசும் வசனம் போன்ற அனுபவத்தை உங்களுக்கு அளித்துவிடும்.

Most Read : தாய்ப்பாலூட்டும் தாய்களுக்கு குடம்புளி பாதுகாப்பானதா? உங்கள் சுயநலம் குழந்தைகளுக்கு பேராபத்து

#9 மற்ற குழந்தைகள பாருங்கள்

#9 மற்ற குழந்தைகள பாருங்கள்

இது ஏதும் பலன் அளிக்கவில்லை என்றால் உங்கள் குழந்தை மீது தவறில்லை. நீங்கள் அணுகிய விதத்தில் தவறு இருக்கலாம். எனவே ஒத்த வயதில் இருக்கிற மற்ற குழந்தைகளையும் கண்காணியுங்கள். நீங்கள் செய்த தவறு புரிவதற்கான வாய்ப்பாக கூட அது மாறலாம். ஆனால் அதை அப்படியே உங்கள் குழந்தையிடம் பதிவிடாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips To Understand Your Child's Psychology Better

Child psychology, a key part of developmental psychology, is vast and one of the most commonly studied types of the subject. This specialized branch focuses on the psychological processes of children from birth to adolescence. It takes note of the psychological changes that occur from infancy.
Story first published: Saturday, August 3, 2019, 15:51 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more