For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெற்றோர்களே! உங்க டீன் ஏஜ் பிள்ளை மோசமான உறவில் இருந்தா... நீங்க என்ன செய்யணும் தெரியுமா?

பல இளம் பதின்ம வயதினர், அவர்கள் இன்னும் வளர்ந்து வருவதால், ஆரோக்கியமான மற்றும் நச்சு உறவுக்கு இடையேயான வித்தியாசத்தை புரிந்து கொள்ளவில்லை. காதல் மற்றும் உடைமைத்தன்மை ஆகியவற்றுக்கு இடையே உள்ள மெல்லிய கோட்டை அவர்களால் அடைய

|

டீன் ஏஜ் என்றாலே, யார் சொல்வதையும் கேட்காமல், அவர்கள் விருப்பத்திற்கு நடப்பது போல பிள்ளைகள் செயல்படுவார்கள். அந்த வயதில் டீன் ஏஜ் பிள்ளைகளை கட்டுப்படுத்துவது என்பது பெற்றோர்களுக்கு மிகவும் சவாலான பணி. தற்போது 2கே கிட்ஸ் டீன் ஏஜ் வயதிலே ஒரு உறவில் அல்லது திருமண உறவிற்குள் செல்கிறார்கள். உங்கள் பதின்ம வயது பிள்ளையின் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்வது, அவர்களுடன் நட்பு கொள்வது எவ்வளவு முக்கியமோ, அவர்களின் கடினமான காலங்களில் அவர்களுக்கு வழிகாட்டுவதும் ஆதரவளிப்பதும் மிக முக்கியமானது. அவர்கள் தங்கள் வாழ்க்கையின் மற்றொரு கட்டத்தில் அடியெடுத்து வைக்கும் போது, ​​புதிய மற்றும் உற்சாகமான உணர்ச்சிகள் உயிர்ப்பிக்கப்படுகின்றன. அவர்கள் தங்களை யார் என்று அடையாளம் காணத் தொடங்குகிறார்கள்.

signs-your-teen-is-in-a-toxic-relationship-in-tamil

பல இளம் பதின்ம வயதினர், அவர்கள் இன்னும் வளர்ந்து வருவதால், ஆரோக்கியமான மற்றும் நச்சு உறவுக்கு இடையேயான வித்தியாசத்தை புரிந்து கொள்ளவில்லை. காதல் மற்றும் உடைமைத்தன்மை ஆகியவற்றுக்கு இடையே உள்ள மெல்லிய கோட்டை அவர்களால் அடையாளம் காண முடியாது. இதனால், அவர்கள் காலப்போக்கில் குழப்பத்தில் தொலைந்து போகலாம். பெற்றோராக, உங்கள் டீன் ஏஜ் வயது பிள்ளைகள் நச்சுத்தன்மையுள்ள, ஆரோக்கியமற்ற உறவில் இருக்கிறார்கள் என்பதற்கான சில அறிகுறிகள் மற்றும் நீங்கள் அவர்களை எப்படி அணுக வேண்டும் என்றும் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பழகுவதை கட்டுப்படுத்தலாம்

பழகுவதை கட்டுப்படுத்தலாம்

டீன் ஏஜ் பருவத்தில் உள்ள குழந்தைகள் தங்கள் குடும்பத்தை விட்டு விலகி இருப்பது பொதுவானது. இது மிகவும் பொதுவானது என்றாலும், அவர்கள் உறவில் ஈடுபட்ட பிறகு அதைச் செய்தால், அது ஒரு எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். உங்கள் பிள்ளையின் டீன் ஏஜ் பங்குதாரர் மிகவும் பொறாமை கொண்டவராகவும் மற்றும் கட்டுப்படுத்துபவராகவும் இருக்கும்போது இது நிகழலாம். அவர்கள் உங்கள் டீன் பிள்ளையை மிகவும் கட்டுப்படுத்தி, அவர்களது நண்பர்களுடன் மட்டும் நெருங்கி பழகுவதை மட்டுமின்றி உங்களிடமிருந்தும் பழகுவதை கட்டுப்படுத்தலாம்.

சுயமரியாதை குறைபாடு

சுயமரியாதை குறைபாடு

பெரும்பாலும் பதின்வயதினர் நச்சு உறவில் இருக்கும்போது, ​​அவர்கள் தங்கள் சொந்த முடிவுகளை எடுப்பது, தங்கள் கருத்தை வெளிப்படுத்துவது மற்றும் தங்கள் கருத்துக்களை முன்வைப்பது போன்ற இயல்பான தன்னம்பிக்கையைக் காட்டத் தவறிவிடுகிறார்கள். இது பெரும்பாலான டீன் ஏஜ் உறவுகளில் நிகழ்கிறது. ஏனெனில் உங்கள் பிள்ளையின் டீன் ஏஜ் பங்குதாரர் உங்கள் குழந்தையின் குறிக்கோள்கள் மற்றும் லட்சியங்களுக்கு மதிப்பு கொடுப்பதில்லை. இது அவர்களின் சுயமரியாதையை பாதிக்கும்.

எப்பொழுதும் மன்னிப்பு கேட்பது

எப்பொழுதும் மன்னிப்பு கேட்பது

தவறுக்கு மன்னிப்பு கேட்பது என்பது மிகவும் நல்ல குணம். ஆனால் உங்கள் டீன் ஏஜ் பிள்ளை எல்லாவற்றிற்கும் தன் துணையிடம் மன்னிப்பு கேட்பதை நீங்கள் பார்த்தால், அது சிவப்புக் கொடியாக இருக்கலாம். 'மன்னிக்கவும்' என்று மீண்டும் மீண்டும் சொல்வது சார்புநிலையின் அடையாளமாக இருக்கலாம். ஆதவாது உங்கள் பிள்ளை அவரை மட்டுமே சார்ந்து இருப்பதாக அர்த்தம். உங்கள் டீன் ஏஜ் பிள்ளை தங்கள் துணையை இழக்க விரும்பாததால் தான், அவர்கள் மீது தவறில்லையென்றாலும், எப்போதும் மன்னிப்பு கேட்கிறார்கள்.

மனநிலை மாற்றங்கள்

மனநிலை மாற்றங்கள்

பெற்றோர்களே! உங்கள் பதின்ம வயது பிள்ளையின் மனநிலையில் அல்லது அவர்களின் ஆளுமையில் ஏதேனும் மாற்றம் இருப்பதைக் கவனிக்க வேண்டியது அவசியம். ஒரு நச்சுத்தன்மையுள்ள நபருடன் உறவில் இருப்பது ஒருவர் தன்னைப் பற்றி எப்படி நடந்துகொள்கிறார் அல்லது உணருகிறார் என்பதை மாற்றுகிறது. அவர்கள் தங்கள் துணையைப் பிரியப்படுத்த தங்களால் இயன்றவரை முயற்சி செய்யலாம் என்றாலும், அவர்களை நேசிக்கும் நபர்களிடம் அவர்கள் முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையைக் கொண்டிருக்கலாம். ஆளுமையில் ஏற்படும் எந்த மாற்றமும் கட்டுப்படுத்தப்பட்ட அல்லது சிறுமைப்படுத்தப்பட்டதன் பிரதிபலிப்பாகும்.

விவரிக்கப்படாத காயங்கள்

விவரிக்கப்படாத காயங்கள்

உணர்ச்சித் தாக்கத்தைத் தவிர, விவரிக்கப்படாத காயங்கள் போன்ற உடல் மாற்றங்கள் நச்சு உறவைக் குறிக்கலாம். உடல் ரீதியாக துன்புறுத்துவதை ஒருபோதும் அனுமதிக்கூடாது. அது மிக இளம் வயதிலேயே தொடங்குவது உங்கள் பிள்ளையை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் பாதிக்கும். உங்கள் டீன் ஏஜ் பிள்ளை உங்களிடமிருந்து உடலை மறைத்துவிட்டால் அல்லது அவர்களின் உடலின் ஒரு பகுதியை மறைக்க முயன்றால், அங்கு ஒரு சிவப்புக் கொடி இருக்கலாம்.

எப்படி உதவுவது?

எப்படி உதவுவது?

உங்கள் பிள்ளையின் விருப்பங்களைப் பற்றி குற்ற உணர்வை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, அவர்கள் சொல்வதைக் கேட்டு அவர்களுக்கு ஆதரவை வழங்குங்கள். உங்கள் பிள்ளை சொல்வதை ஏற்றுக்கொள்ளுங்கள். ஆனால் அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் நீங்கள் கண்டிப்பாக வழங்க வேண்டும். அவர்கள் மீது அக்கறை காட்டுங்கள். ஆனால், எச்சரிக்கைகளைத் தவிர்க்கவும். பிரச்சினைகளை ஒன்றாகத் தீர்ப்பது குறித்து முடிவு செய்யுங்கள். அவர்களின் கருத்துக்களை கேட்டு அவர்களுக்கு எது சிறந்தது என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

இறுதி குறிப்பு

இறுதி குறிப்பு

மிக முக்கியமாக, ஒரு உறவு ஆரோக்கியமற்றதாக இருக்கும்போது உங்கள் டீன் ஏஜ் பிள்ளை அடையாளம் காணட்டும். உதாரணமாக, பயனற்ற தகவல்தொடர்பு நச்சு உறவுகளின் பல அறிகுறிகளில் ஒன்றாகும். இதில் செவிசாய்க்காமல் இருப்பது, தற்காத்துக் கொள்வது, மற்றவர்கள் உங்கள் கருத்தையும் உணர்ச்சிகளையும் உள்ளுணர்வாகப் பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பது மற்றும் மோதல்களைத் தவிர்ப்பது ஆகியவை அடங்கும். கூடுதலாக, ஒருவர் தனது செயல்களையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தக்கூடாது. பொறாமை மற்றும் உடைமைத்தன்மை மிகவும் எதிர்மறையான பண்புகளாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Signs Your Teen Is In A Toxic Relationship in tamil

Here we are talking about the Signs Your Teen Is In A Toxic Relationship in tamil.
Story first published: Monday, October 10, 2022, 19:00 [IST]
Desktop Bottom Promotion