For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்ப காலத்தில் பெண்கள் மல்லாந்து படுத்தால் குழந்தை இப்படிதான் பிறக்குமாம்... அப்போ எப்படி படுக்கணு

பெண்கள் கர்ப்ப காலத்தில் எப்படி தூங்க வேண்டும் என்பது பற்றி இந்த பகுதியில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இது பற்றிய மிக முக்கியமான பதிவு தான் இது.

By Mahibala
|

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் மல்லாந்து படுக்கக் கூடாது. சில குறிப்பிட்ட மாதங்கள் மட்டும் கிடையாது. கரு உருவானது முதல் குழந்தை பிறக்கும் வரை கர்ப்பிணிப் பெண்கள் மல்லாந்து படுக்கக் கூடாது. பிறகு எப்படி தான் படுப்பது என்று நீங்கள் கேட்கலாம்.

Pregnancy

கர்ப்பிணிகள் எப்போதும் பக்கவாட்டில் திரும்பி தான் படுக்க வேண்டும். அதற்கான காரணங்களும் மல்லாந்து படுத்தால் என்ன மாதிரியான பிரச்சினைகள் வரும் என்பது பற்றியும் மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்என்பது பற்றி இந்த கட்டுரையில் மிக விளக்கமாகப் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிவியல் காரணம்

அறிவியல் காரணம்

கர்ப்ப காலத்தில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. அதில் முதன்மையானது தான் அவர்கள் தூங்கும் முறை. கட்டாயம் மல்லாந்து படுத்து தூங்கக் கூடாது. பக்கவாட்டில் தான் தூங்க வேண்டும். இது ஏதோ காலங்காலமாக நம்முடைய முன்னோர்கள் பின்பற்றும் முறை மட்டும் அல்ல. அதையும் தாண்டி இதில் நிறைய அறிவியல் காரணங்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி பார்க்கலாம்.

MOST READ: ஆபாச படங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போது விந்து உற்பத்தி நடக்குமா? ஹார்மோன் அதிகரிக்குமா?

முதல் மூன்று மாதங்கள்

முதல் மூன்று மாதங்கள்

கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதங்களில் எந்தவித பிரச்சினையும் இருக்காது. அவ்வப்போது மல்லாந்து உட்காருவதோ படுக்கவோ செய்யலாம். ஆனால் நான்காவது மாதத்தில் இருந்து தான் தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் தொப்புள் கொடி கொஞ்சம் கொஞ்சமாக வலிமை பெற்றிருக்கும்.

கொடி சுற்றுதல்

கொடி சுற்றுதல்

குழந்தை கொடி சுற்றிப் பிறந்தது என்று சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். அது எப்படி என்றால் தாய் எப்போதாவது மல்லாந்து படுத்து தூங்கியிருப்பார். அப்படி மல்லாந்து படுக்கிற பொழுது கருப்பையில் இருக்கும் குழந்தை நீருக்குள் தானே மிதந்து கொண்டிருக்கும். அந்த குழந்தைக் கருவின் மீது தொப்புள் கொடி சுற்றிக் கொள்வதற்கு அதிக வாய்ப்பு உண்டு.

MOST READ: கர்ப்பமாக இருக்கும்போது கத்திரிக்காய் சாப்பிடவே கூடாது... ஏன் என்கிற காரணம் தெரியுமா?

அஜீரணக் கோளாறு

அஜீரணக் கோளாறு

கரு உருவாகி நான்கு மாதங்களுக்குப் பிறகு குழந்தையினுடைய எடை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கும். அந்த சமயத்தில் மல்லாந்து படுத்தால் தாயின் குடல் பகுதி மீது அது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக அஜீரணக் கோளாறுகளும் அசௌகரியமும் உருவாக வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

ரத்த ஓட்டம்

ரத்த ஓட்டம்

குழந்தையின் எடை அதிகரிக்க அதிகரிக்க அதிக எடையானது குழந்தையின் வயிற்றுப் பகுதியில் இருக்கும் நிலையில் மேலே பார்த்தபடி படுத்தால் இடுப்பு மற்றும் முதுகுப் பகுதியில் உள்ள எலு்புகளிலும் அழுத்தம் உண்டாகும். இதனால் தாயினுடைய உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்காது.

MOST READ: கண்ணாடி போடற தழும்பு மூக்குமேல இருக்கா? இதுல ஏதாவது ஒன்ன தடவினாலே போயிடுமே

பக்கவாட்டில் படுத்தால்?

பக்கவாட்டில் படுத்தால்?

இதுவே தாய் பக்கவாட்டில் படுத்துத் தூங்கும் போது வயிற்றில் குழந்தை அசைந்து விளையாடும். நடமாடும் போதும் கூட அசைவின்றி இருக்கும். ஏனென்றால் பக்கவாட்டில் படுக்கும்போது குழந்தை விளையாட நிறைய இடம் கிடைக்கும். ஆனால் இதுவே மல்லாந்து படுத்தாலோ அதிக நேரம் நின்று கொண்டிருந்தாலோ கருப்பையானது சுருங்கி இடுப்பு எலும்பில் தாங்கியபடி தான் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Sleep Women During Pregnancy

Research has shown that in the third trimester (after 28 weeks of pregnancy) going to sleep on your back increases your risk of stillbirth. As the link has now been shown in four separate research trials, our advice is to go to sleep on your side in the third trimester because it is safer for your baby.
Story first published: Saturday, March 16, 2019, 13:26 [IST]
Desktop Bottom Promotion