For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பமாக இருக்கும்போது தொண்டையில் வலி வந்தால் என்ன அர்த்தம்? உடனே என்ன செய்யவேண்டும்?

|

கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு பல வித உடல் உபாதைகள் வந்து வந்து செல்லும். அவற்றுள் ஒன்று தொண்டை வலி. கர்ப்பகாலத்தில் தொண்டை வலி ஏற்படுவதற்கான காரணங்கள் நிறைய உண்டு. கிருமி தொற்று அல்லது பக்டீரியா தொற்று காரணமாக அல்லது காய்ச்சல் மற்றும் சளி காரணமாக தொண்டையில் உண்டாகும் அழற்சியால் தொண்டை வலி உண்டாகிறது. எதுக்கலித்தல், ஒவ்வாமை, தொண்டை தசையில் வலி, சைனஸ், ரசாயனம் அல்லது மாசு போன்றவற்றின் வெளிப்பாடு போன்றவற்றின் காரணமாக இந்த தொண்டை வலி ஏற்படலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிகுறிகள்

அறிகுறிகள்

கீழே குறிப்பிட்டுள்ளவற்றில் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட அறிகுறிகள் உங்களுக்கு தொண்டை வலி ஏற்பட்டுள்ளதை உணர்த்தும், அவை,

. தொண்டையில் அரிப்பு

. தொண்டையில் வலி

. டான்சில் வீக்கம்

. தொண்டை கரகரப்பு

. விழுங்குவதில் சிரமம்

. காதுவலி

MOST READ: ஆணுறுப்பு விறைப்பு குறையறதுக்கு உண்மையான காரணம் என்ன? எதெல்லாம் கட்டுக்கதை?

ஹார்மோன்

ஹார்மோன்

கர்ப்பகாலத்தில், ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்ட்ரோன் ஆகியவற்றில் மாறுபாடு தோன்றுவதன் காரணமாக மற்ற பாதிப்புகளான குமட்டல், தலைவலி ஆகியவற்றுடன் இணைந்து தொண்டை வலியும் உண்டாகலாம். கர்ப்பகாலத்தில் உண்டாகும் தொண்டை வலி அடுத்த 7 நாட்களில் தானாக மறைந்து விடும் , அதைப் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை. தொண்டை வலியால் ஒரு சிறு எரிச்சல் மட்டுமே உண்டாகும். வேறு எந்த ஒரு பெரிய பாதிப்பும் ஏற்படாது.

உப்பு நீரில் கொப்பளிப்பது

உப்பு நீரில் கொப்பளிப்பது

1. ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 1/2 ஸ்பூன் உப்பு சேர்க்கவும்.

2. அந்த நீரை நன்றாகக் கலந்து கொள்ளவும்.

3. ஒரு நிமிடம் முழுவதுமாக இந்த ஒரு கப் நீரை வாயில் ஊற்றி தொண்டையில் படுமாறு கொப்பளிக்கவும்.

4. தினமும் ஒரு நாளில் மூன்று முறை இதனை செய்து வருவதால் தொண்டை வலியிலிருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

ஆவி பிடிப்பது

ஆவி பிடிப்பது

நீராவி உட்செலுத்துதலால் சளி சவ்வுகளில் ஈரப்பதம் அதிகரித்து தொண்டை வலிக்கு விரைந்து நிவாரணம் கிடைக்கிறது. இதனால் உங்களால் எளிதில் மூச்சு விட முடிகிறது, மேலும் சௌகரியமாக தூங்க முடியும். இதனால் உடல் எளிதில் குணமாகும்.

செய்முறை

1. ஒரு பெரிய பாத்திரத்தில் நீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

2. பிறகு அந்த பாத்திரத்தில் நீர் கொதித்தவுடன் அந்த நீரில் சில துளிகள் பெப்பெர்மின்ட் எண்ணெய் அல்லது தைல எண்ணெய் போன்றவற்றை சேர்த்து கலக்கவும்.

3. தலையில் ஒரு போர்வையை போர்த்தி உங்களை முழுவதும் மூடிக் கொண்டு, உங்கள் முகத்தை மட்டும் இந்த நீரில் மேல் வைத்து அந்த நீரை நுகரவும்.

4. நீரில் இருந்து வெளிப்படும் ஆவியை மூச்சுக்குள் இழுத்து வெளியே விடவும்.

5. 5-10 நிமிடம் இதனை தொடர்ந்து செய்து வரவும். இதே முறையை ஒரு நாளில் 2 அல்லது 3 முறை பின்பற்றவும்.

இஞ்சி

இஞ்சி

நெஞ்செரிச்சல் அல்லது எதுக்கலித்தல் காரணமாக உண்டாகும் தொண்டை வலிக்கு , இஞ்சி ஒரு சிறந்த தீர்வைத் தருகிறது.

கர்ப்பகாலத்தில் உண்டாகும் அசிடிட்டியைத் தடுக்க இஞ்சி ஒரு சிறப்பான மருந்தாக செயல்படுகிறது. பீனோலிக் கூறுகள் மற்றும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் ஆகிய சிறந்த கூறுகளைக் கொண்ட இஞ்சி வயிற்றில் உள்ள அமிலங்களை சமநிலையில் வைக்க உதவுகின்றன.

அசிடிட்டியுடன் கூடிய குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவற்றையும் கட்டுப்படுத்த இஞ்சி உதவுகிறது. கர்ப்பகாலத்தின் போது குமட்டல் மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இஞ்சி ஒரு பாதிப்பில்லாத மற்றும் சாத்தியமான பயனுள்ள மாற்று விருப்பமாக கருதப்படுகிறது என்று 2014ம் ஆண்டு ஊட்டச்சத்து இதழில் வெளியான ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

MOST READ: ஷேவிங் க்ரீம் தீர்ந்துபோச்சா?... இதோ இந்த 7-ல ஏதாவது ஒன்னு வெச்சு சூப்பரா ஷேவ் பண்ணலாம்

வீட்டில் தயாரித்த சிக்கன் சூப்

வீட்டில் தயாரித்த சிக்கன் சூப்

வெதுவெதுப்பாக எதாவது பருகுவதால் உங்கள் தொண்டை சற்று இதமான உணர்வைப் பெரும். அதற்கு ஏற்ற ஒரு பானம், வீட்டில் தயாரிக்கப்பட்ட சிக்கன் சூப்.

வீட்டில் தயார் செய்த சிக்கன் சூப், அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டது. மேலும் அதில் வைட்டமின், மினரல் ஆகியவை இருப்பதால், தொண்டை வலியை உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்து போராட உதவுகிறது. கூடுதலாக, சிக்கன் சூப் பருகுவதால் கிடைக்கும் ஊட்டச்சத்துகள் காரணமாக உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் சக்தி பெற்று, மேலும் கிருமிகள் உள்ளே நுழைந்து உடலுக்கு தீமை செய்ய விடாமல் பாதுகாக்கிறது.

மேலும், வீட்டில் தயார் செய்த சிக்கென் சூப் ஒரு கப் பருகுவதால் சளி கரைந்து வெளியேறுகிறது.

ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினிகர்

பதனிடப்படாத, வடிகட்டாத ஆப்பிள் சிடர் வினிகர் பயன்படுத்தி கர்ப்பகால தொண்டை வலியை போக்கலாம்.

ஆப்பிள் சிடர் வினிகர் உடலில் அமில உருவாக்கத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அமிலம் அதிகம் உருவாகாத இடத்தில கிருமிகள் வளர்வதில்லை. மேலும் ஆப்பிள் சிடர் வினிகரில் நல்ல பாக்டீரியாக்கள் இருப்பதால் இது தொற்றை எதிர்த்து போராடுகிறது.

மஞ்சள் சேர்த்த வெதுவெதுப்பான பால்

மஞ்சள் சேர்த்த வெதுவெதுப்பான பால்

வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் சேர்த்து பருகுவதால், வீக்கம் மற்றும் அழற்சி அடைந்த சவ்வுகள் இயல்பு நிலைக்கு திரும்புவதால், தொண்டை வலிக்கு இது ஒரு இதமான மருந்தாக செயல்புரிகிறது . கூடுதலாக, மஞ்சளில் வலி குறைக்கும் பண்பு இருப்பதால் தொண்டையின் வலியைக் குறைக்க இது உதவுகிறது. தொற்று எதிர்ப்பு மற்றும் நோயெதிர்ப்பு தன்மை அதிகரிப்பு ஆகிய பண்புகளும் இதற்கு உண்டு.

செய்முறை

1. ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலில் ஒரு ஸ்பூன் மஞ்சள் மற்றும் ஒரு சிட்டிகை இடித்த மிளகு தூள் ஆகியவற்றை சேர்க்கவும்.

2. இனிப்பு சுவைக்கு சிறிதளவு தேன் சேர்க்கவும்.

3. குணமடையும் செயல்பாடு விரைந்து நடக்க, இந்த மஞ்சள் கலந்த பாலை இரண்டு முறை பருகவும்.

MOST READ: பெண்களோட அந்த இடத்துல வர்ற அரிப்புக்கு ஆப்பிள் சீடர் வினிகரை எப்படி பயன்படுத்தணும்?

போதுமான அளவு ஓய்வு

போதுமான அளவு ஓய்வு

தொண்டை வலியால் கர்ப்பகாலத்ல் அவதிப்படும்போது, உங்கள் தொண்டைக்கு ஓய்வு கொடுக்கும் விதமாக பேசுவதைக் குறைத்துக் கொள்ளவும். மேலும், கர்ப்பகாலங்களில் உங்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் காரணத்தினால் , கிருமிகள் மற்றும் பாக்டீரியாவுடன் போராட உங்கள் உடல் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ஆகவே உங்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு உதவ ஓய்வு மிகவும் அவசியம். இதனால் உங்க உடலுக்கு ஆற்றல் அதிகம் கிடைத்து விரைந்து உடல் குணமாகும்.

1. ஒரு நாளில் இரண்டு முதல் மூன்று முறை ஒரு குட்டித் தூக்கம் போட்டு, நல்ல ஓய்வு எடுத்துக் கொள்வதால் உங்கள் உடல் தானாகவே குணமடையும்.

2. தினமும் இரவு உணவை சீக்கிரமாக எடுத்துக் கொண்டு உறங்கச் செல்வதால், நீண்ட நேரம் தூங்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies For Sore Throat During Pregnancy

Throat infections can be a major source of pain and discomfort during pregnancy. Though there are medicines to treat the infection, it is advisable to avoid medication as far as possible.
Story first published: Tuesday, March 12, 2019, 11:50 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more