For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தை பிறப்பதை தடுக்கும் நவீன முறைகள்

குழந்தை பிறப்பதை தடுக்க இப்போது பல வழிகள் வந்துவிட்டது, ஆனால் அதில் எது சிறந்த வழி என்று கண்டுபிடிப்பதே மிகவும் கடினமான ஒன்று. ஏனெனில் அனைத்துமுறைகளிலுமே நிறைகளும், குறைகளும் இருக்கும்.

|

இன்றைய காலகட்டத்தில் குழந்தை பிறப்பதை தடுக்க பல புதிய வழிகள் வந்துவிட்டது. கருத்தடை மாத்திரைகளில் இருந்து கருத்தடை அறுவைசிகிச்சை முறை வரை ஏராளமான

வழிகள் உள்ளன. இப்போது பிரச்சினை என்னவென்றால் எந்த கருத்தடை முறையை பயன்படுத்துவது என்பதுதான்.ஏனெனில் ஒவ்வொரு முறையிலும் சில சாதகங்களும், சில

பாதகங்களும் இருக்கும்.

Pregnancy

குறிப்பாக பிறப்பு கட்டுப்பாடு பாலியல் மூலம் பரவும் தொற்றுநோய்களை தடுக்குமா, நிரந்தர பிறப்பு கட்டுப்பாடு நல்லதா அல்ல தற்காலிக பிறப்பு கட்டுப்பாடு நல்லதா என்று பல

கேள்விகள் எழும். எந்த பிறப்பு கட்டுப்பாடு முறையுமே 100% கச்சிதமாக வேலை செய்யும் என்று கூற இயலாது, ஆனால் அதனை பயன்படுத்தும் முறையை பொறுத்துதான் அதன் பலன்கள்

இருக்கும். இங்கே பிறப்பு கட்டுப்பாடு முறைகளையும் அதன் சாதக, பாதங்களை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குடும்ப கட்டுப்பாடு

குடும்ப கட்டுப்பாடு

அனைத்து பிறப்பு கட்டுப்பாடு முறைகளுக்கும் சாதனங்கள் இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. இயற்கை குடும்ப கட்டுப்பாடு அல்லது பெண்ணின் கருவுறுதல் தன்மையை

அறிந்துகொண்டால் போதும். பெண்ணின் கருவுறும் தன்மை குறைவாக இருக்கும் நேரத்தில் உடலுறவில் ஈடுபடுவது குழந்தை பிறப்பை எளிதில் தடுக்கும். ஒரு பெண் பாதுகாப்பற்ற

உடலுறவு கொள்ளும்போதுதான் கர்ப்பமடைகிறார். உடலின் வெப்பநிலை, மற்றும் கர்ப்பப்பையை கவனிப்பதன்மூலம் பெண் எப்போது கருமுட்டையை வெளியே தள்ளுகிறார் என்று

கண்டறியலாம். இந்த முறை பிறப்பு கட்டுப்பாடு 76% சதவீதம் பலனளிக்க கூடியது.

சாதகங்கள்

1. செலவு இல்லாத முறை

2. மாத்திரைகள் உட்கொள்ள தேவையில்லை

பாதகங்கள்

1. பாலியல் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது

2. உங்கள் மாதவிடாய் சுழற்சியை கணக்கிடுவது அவசியம்

3. குறைந்த செயல் திறன்

விந்தணுக்கொல்லி

விந்தணுக்கொல்லி

விந்தணுகொல்லிகள் விந்தணுக்களின் வீரியத்தை குறைத்து அவை கரு உருவாகுவதை தடுக்கிறது. இவை க்ரீம், ஜெல்லி போன்ற பல வடிவங்களில் கிடைக்கிறது. இது

பெண்ணுறுப்புக்குள் அதிக ஆழத்தில் வைக்கப்பட வேண்டும். எனவே விந்தணுக்கள் செல்லும்போது இது அவற்றை தடுத்து விந்தணுக்கள் கருமுட்டையை அடைவதை தடுக்கிறது. இந்த

முறையின் செயல்திறன் 72% ஆகும்.

சாதகங்கள்

1. குறைந்த விலை

2. எளிமையான உபயோகம்

3. வாங்குவது எளிது

4. இதனை முன்விளையாட்டாகவும் செய்யலாம்

பாதகங்கள்

1. பாலியல் தொற்று அபாயம்

2. பிறப்புறுப்பில் எரிச்சல் ஏற்படலாம்

3. குறைந்த செயல் திறன்

ஆணுறை

ஆணுறை

இது அனைவருக்கும் தெரிந்த ஒரு முறையாகும். இப்போது இதில் பல வகைகளும் வர தொடங்கிவிட்டது. இது விந்தணுக்கள் கருமுட்டையை அடையாமல் பாதுகாக்கும் தடுப்பு சுவராக

செயல்படுகிறது. ஆனால் இவை விலங்குகளின் சவ்வு, சிலிக்கான் அல்லது செயற்கை மூலக்கூறுகள் போன்றவற்றால் தயாரிக்கப்டுகின்றன. உடலுறவின் போது விந்தணுக்களை தாங்கி

அவை பெண்ணுறுப்புக்குள் நுழைய முடியாத அளவிற்கு இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.காலாவதி தேதி முடிந்த ஆணுறைகளை ஒருபோதும் உபயோகப்படுத்தக்கூடாது. இதன்

செயல்திறன் 82% ஆகும்.

சாதகங்கள்

1. பாலியல் தொற்றிலிருந்து பாதுகாப்பு

2. வாங்குவது மிக எளிது

3. விலை மிகவும் குறைவு

4. உபயோகிப்பது எளிது

5. மற்ற பிறப்பு கட்டுப்பாடு முறைகளுடனும் இதனை பயன்படுத்தலாம்

பாதகங்கள்

1. ஒருமுறைதான் உபயோகிக்க முடியும்

2. ஒவ்வொரு முறை உடலுறவு கொள்ளும்போதும் பயன்படுத்த வேண்டும்

3. மற்ற முறைகளை அளவிற்கு செயல் திறன் இல்லை

பெண் ஆணுறை

பெண் ஆணுறை

உங்கள் தாம்பத்ய வாழ்க்கையை அதிகரிக்க மிகவும் பாதுகாப்பான முறை என்றால் அது இதுதான். உடலுறவுக்கு முன் பெண்ணுடைய பிறப்புறுப்புக்குள் வைக்கப்படும் பிளாஸ்டிக்கால்

ஆன சாதனம்தான் இது. இது அதிக நெகிழ்வு தன்மையுடையது. இதனை உடலுறவுக்கு 8 மணி நேரத்திற்கு முன்பிருந்தே பயன்படுத்தலாம். எவ்வளவு ஆழத்திற்கு பெண்ணுறுப்புக்குள்

இதனை பொருத்த முடியுமோ அவ்வளவு தூரம் பொருத்திக்கொள்ளுங்கள். உடலுறவின் போது இது அடிக்கடி நகர்வதை நினைத்து கவலை கொள்ள தேவையில்லை. இதன் செயல்திறன்

79% ஆகும்.

சாதகங்கள்

1. பாலியல் தொற்று அபாயமில்லை.

2. வாங்குவது எளிது

3. பாதுகாப்பானது மற்றும் வசதியானது

4. விலை குறைவு

5. முன்விளையாட்டாக பயன்படுகிறது

பாதகங்கள்

1. மற்ற முறைகள் அளவிற்கு சிறந்தது அல்ல

2. உறுப்புகளில் எரிச்சல் ஏற்படலாம்

3. முழுமையான இன்பம் இருக்காது

4. உடலுறவின் போது சத்தத்தை ஏற்படுத்தலாம்

டயாப்ரஹம்

டயாப்ரஹம்

இது மற்ற முறைகள் அளவிற்கு பிரபலமானதல்ல, ஆனால் கரு உருவாவதை தடுப்பதற்கு இது சிறந்த வழியாகும். உடலுறவிற்கு முன் இதனை பெண்ணின் பிறப்புறுப்புக்குள் பொருத்த

வேண்டும். இது உள்ள இருக்கும்போது கருமுட்டையானது வெளியே வர இயலாது அதே சமயம் விந்தணுவும் அண்டத்தை அடைய இயலாது. இது ஆணுறைகளை அணிவது போன்று

எளிமையானதல்ல ஆனால் தொடர்முயற்சி நல்ல பலனையளிக்கும். இதை பொருத்துவற்கு முன் கைகளை நன்கு சுத்தம் செய்து விட்டு சிறிது விந்தணு கொல்லிகளை இதில்

ஊற்றிக்கொள்ளவும். பின் கருப்பையை நன்கு மூடும்படி இதை பிறப்புறுப்புகள் வைக்கவும். உடலுறவு கொண்ட பிறகு ஆறு மணி நேரம் வரை இது உள்ளே இருக்கலாம் ஆனால் 24 மணி

நேரத்திற்கு மேல் இது உள்ளே இருக்கக்கூடாது. வெளியே எடுத்தபின் மென்மையான சோப்பை போட்டு கழுவவும். இதன் செயல் திறன் 88%

சாதகங்கள்

1. குறைவான விலை

2. உடனடி பலன்

3. உங்கள் துணையால் கண்டறிய இயாலாது

4. மீண்டும் உபயோகிக்கலாம்

பாதகங்கள்

1. பாலியல் தொற்று அபாயம்

2. மருத்துவரின் உதவி தேவை

3. மாதவிடாயின் போது உபயோகப்படுத்த இயலாது

4. ஒவ்வொரு முறை உடலுறவுக்கு முன்னும் பொருத்த வேண்டும்

வேசெக்டமி

வேசெக்டமி

இது ஆண்களுக்கான நிறைந்த பிறப்பு கட்டுப்பாடு முறை ஆகும். வாஸ்க்டெமி என்பது வாஸ் டிரேரென்சினை அறுவைசிகிச்சை மூலம் மூடுவது ஆகும். இது விந்தணுக்களை வெளியே

வரவிடாமலே ஆண்களுக்கு உச்சகட்டத்தை உணர வைக்கும். இதன் செயல் திறன் 100% ஆகும்.

சாதகங்கள்

1. அதிக செயல் திறன்

2. நிரந்தரமானது

பாதகங்கள்

1. பாலியல் தோற்று அபாயம்

2. செலவு அதிகமாகும்

3. அறுவைசிகிச்சை தேவை

4. மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப இயலாது

குழல்சார் கட்டு(Tubal Ligation)

குழல்சார் கட்டு(Tubal Ligation)

இது பெண்களுக்கான நிரந்தர பிறப்பு கட்டுபாடு முறையாகும். எதிர்காலத்தில் குழந்தை வேண்டாமென நினைக்கும் பெண்கள் இதனை செய்துகொள்ளலாம். இது பெண்களின்

பாலோபியன் குழாயில் செய்யப்படும் அறுவைசிகிச்சையாகும். எனவே கருப்பையிலிருந்து முட்டைகள் விந்தணுக்களுடன் இணையும் இடம் தடுக்கப்படும். இதன் செயல் திறன் 100%

ஆகும்.

சாதகங்கள்

1. நிரந்தரமானது

2. அதிக செயல் திறன்

பாதகங்கள்

1. பாலியல் தொற்று அபாயம்

2. அறுவைசிகிச்சை தேவை

3. விலை அதிகம

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: pregnancy குழந்தை
English summary

Merits and demerits of various birth control methods

Selecting which type of birth control to use can be very confusing. Before starting to use any method we should know about their merits and demerits. Vasectomy, Tubal Ligation is somepermanent birth control methods.
Desktop Bottom Promotion