கருச்சிதைவு ஏற்படுவதற்கான அறிகுறிகள் இப்படியும் இருக்கலாம்!

Posted By:
Subscribe to Boldsky

கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு மிகவும் அச்சத்தரக்கூடிய விஷயங்களில் ஒன்று கருக்கலைபு,ஏராளமான கனவுகளை சுமந்து கொண்டு வாழ்க்கையில் புதிய அத்தியாமாய் தாய்மையடைப்போகும் பெண்களுக்கு இந்த வார்த்தை கேட்கவே கொஞ்சம் பயங்கரமானதாக தோன்றலாம்.

முதல் மூன்று மாதங்கள் நிலையில்லாத காரணத்தால் தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்பதையே சொல்லாமல் மறைத்து ஐந்தாம் மாதம் ஆரம்பித்த பிறகே சிலர் பகிர்வதும் உண்டு. கர்ப்பமாக இருக்கும் போது திடீரென்று எப்படி கருக் கலைந்திடும்? அப்போது உடல் ரீதியாக என்ன மாற்றங்கள் நிகழும் என்பது தொகுப்பாக இந்தக் கட்டுரை வந்திருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மிஸ் கேரேஜ் :

மிஸ் கேரேஜ் :

குழந்தை உருவாகி இருபது வாரங்கள் கழித்தே முழு உடல் வளர்ச்சியைப் பெறும் அதற்கு இடைப்பட்ட காலத்திற்குள்ளாக அந்த கரு கலையவும் அதிக வாய்ப்புண்டு. இந்த மிஸ் கேரேஜ் பெரும்பாலும் க்ரோமோசோம் சரிசமமாக இல்லாதது அல்லது அளவுகள் வேறு பாட்டுடன் இருப்பது தான் காரணியாக சொல்லப்படுகிறது.

வகைகள் :

வகைகள் :

இந்த மிஸ்கேரேஜில் பல வகைகள் இருக்கின்றன. சில நேரங்களில் மிஸ் கேரேஜ் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு என்று எச்சரிக்கப்படுவதற்கு கூட மிஸ்கேரேஜ் என்று தான் அழைக்கப்படுகிறது. இவற்றில் வேறு என்னென்ன வகைகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

த்ரட்டெண்ட் மிஸ்கேரேஜ் :

த்ரட்டெண்ட் மிஸ்கேரேஜ் :

இந்த வகையென்றால் உங்களுக்கு உதிரப்போக்கு ஏற்படும் அல்லது அடி வயிற்றில் அதீத வலி உண்டாகும். கர்ப்பமாக இருக்கும் பெண்களில் இருபது சதவீதத்தினருக்கு அடி வயிற்றில் வலி உண்டாகும். அதற்காக உடனேயே கரு கலையப்போகிறது என்று பயப்பட வேண்டாம்.

வலி தொடர்ந்து நீடித்தால் மட்டும் மருத்துவரை சந்தியுங்கள். இந்தக் அறிகுறிகள் எல்லாம் கர்ப்பமான முதல் இருபது வாரங்களுக்குள் தான் ஏற்படும்.

ஒவம் :

ஒவம் :

உள்ளிருக்கும் ஃபீட்டஸ் வளர்ச்சி நின்று விட்டால் உடனடியாக அறிகுறிகள் தாய்க்கு ஏற்படும். சில நேரங்களில் அந்த அறிகுறிகள் ஏதும் ஏற்படாமல் கூட இருக்கும். இதற்கு ப்ளைட்டட் ஓவம் என்று பெயர்.

இதனை நாம் அல்ட்ரா சவுண்ட் மூலமாக கண்டுபிடிக்கலாம். வயிற்றிலிருக்கும் குழந்தையின் வளர்ச்சியைப் பொருத்து மாத்திரை மூலமாகவோ அல்லது டெலிவரி செய்தோ உள்ளேயிருக்கும் குழந்தை எடுக்கப்படும்.

இன் எவிடபிள் :

இன் எவிடபிள் :

குழந்தை உருவாவதில் இருந்து ஒன்பது மாதங்கள் முழுவதும் குழந்தை வளர்வது எல்லாமே கர்ப்பப்பையில் தான். சில நேரங்களில் அந்தக் கரு ஃபீட்டஸ் கருப்பை பை வாய் வழியாக வெளியே வந்திடும். இது அல்ட்ரா சவுண்ட் மூலமாக கண்டுபிடிக்க முடியும்.

இன் கம்ப்ளீட் :

இன் கம்ப்ளீட் :

இது குழந்தைக்கு எந்த பாதிப்பும் இருக்காது,குழந்தையை சுமக்கும் தாய்க்குத் தான் அதிக பாதிப்பு.

குழந்தை டெலிவரியானதும், அப்போது தாய்க்கு வெளியாகும் ரத்தத்துடன் சேர்ந்து கர்பப்பையில் இருக்கிற பல வகையான திசுக்கள் எல்லாமே சேர்ந்து வெளியேறிடும். சில நேரங்களில் அவை வெளியேறாமல் வயிற்றுக்குள்ளேயே தங்கிடும். இதனால் பெண்களுக்கு அதீத வயிற்று வலி ஏற்படலாம்.

கெமிக்கல் ப்ரெக்னன்ஸி :

கெமிக்கல் ப்ரெக்னன்ஸி :

இப்போது இருக்கிற நவீன மருத்துவத்தின் வளர்ச்சியினால் செயற்கை கருவூட்டல் முறை அதிகரித்து வருகிறது.

கருமுட்டையை வெளியில் வளர்ச்சிப் பெறச் செய்து அதனை பெண்களின் கர்பப்பையில் செலுத்துவார்கள். அதன் பிறகு தொடர்ந்து குழந்தையின் வளர்ச்சியை கண்காணிக்க வேண்டும்.

கெமிக்கல் ப்ரெக்னென்ஸி மேற்கொண்டு ஒரு வேளை கருக்கலைந்து விட்டால் ப்ரெக்னென்ஸி கிட்டில் பாசிட்டிவாகத் தான் காட்டும்.

ஏனென்றால் உடலில் ஹெச் சி ஜி அளவி அதிகமாக இருப்பதால் கெமிக்கல் ப்ரெஜ்னென்ஸி மேற்கொண்டிருப்பவர்கள் தொடர்ந்து சீரான இடைவேளியில் மருத்துவ கண்காணிப்பு அவசியம்.

மிஸ்கேரேஜ் சிகிச்சை முறைகள் :

மிஸ்கேரேஜ் சிகிச்சை முறைகள் :

இதற்கென்று பிரத்யோக சிகிச்சைமுறைகள் எதுவும் இல்லை. பூரண ஓய்வு மட்டும் தான் தாய்மார்களுக்கு தேவையாய் இருக்கும்.

ஃபீட்டஸின் வளர்ச்சியில் ஏதேனும் மாற்றங்கள் தெரிந்தால்,இதயத்துடிப்பில் ஏதேனும் மாற்றங்கள் தெரிந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியது கட்டாயம்.

கவனம் :

கவனம் :

மிஸ்கேரேஜ் என்றாலே அடி வயிற்றில் வலி ஏற்படும், உதிரப் போக்கு ஏற்படும் என்று நம்பப்பட்டு வந்தது. ஆனால் இதைத்தாண்டி நிறைய அறிகுறிகள் தெரியும்.

பொதுவாக கர்ப்பிணிகளுக்கு ஏற்படுகிற சிக்கல்களில் ஒன்று மார்னிங் சிக்னஸ்.அதில் திடீரென்று மாற்றம் உண்டாகும். மார்னிங் சிக்னஸ் அளவு குறைவாகவும் அல்லது அதீதமாகவும் ஏற்படும்.

சில தாய்மார்களின் உடல் வெப்பநிலையில் மாற்றங்கள் உண்டாகும்.

ஸ்ட்ரஸ் :

ஸ்ட்ரஸ் :

வீட்டில்,குடும்ப உறுப்பினர்களில், வேலை பார்க்கிற இடம் என எங்கும் அமைதியான சூழல் நிலவும் படி பார்த்துக் கொள்ளுங்கள். அது எத்தகைய பிரச்சனையாக இருந்தாலும், அதைப் பற்றியே தீவிரமாக சிந்தித்து மன அழுத்தத்திற்கு ஆளாக வேண்டாம்.

ஏனென்றால் தாய்மார்களுக்கு ஏற்படுகிற தீவிரமான மன அழுத்த்தம் கருக்கலைய காரணமாகிடும்.

நிற்பது :

நிற்பது :

குழந்தையின் வளர்ச்சி சரியில்லை அல்லது, முதல் ட்ரைம்ஸ்டரில் இருக்கும் பெண்கள் என்றால் அதிக நேரம் நிற்க கூடாது. ஏனென்றால் சில நேரங்களில் கரு கலைந்து கருப்பை வாய் வழியாக வெளியேறவும் அதிக வாய்ப்புகள் உண்டு.

பயம் வேண்டாம் :

பயம் வேண்டாம் :

கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ப்ளீடிங் ஏற்பட்டு விட்டால் உடனடியாக கருக்கலைந்து விட்டது என்று பதட்டமடையவோ அல்லது பயம் கொள்ளவோ வேண்டாம். கருக்கலைப்பு ஏற்பட வாய்ப்புண்டு என்பதற்கு எச்சரிச்க்கை மணியாகக்கூட நாம் அதனை எடுத்துக் கொள்ளலாம்.

கர்ப்பமாக இருக்கும் போது ப்ளீடிங் ஏற்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரை சந்தித்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Symptoms And Preventing Tips For Threaten Abortion

Symptoms And Preventing Tips For Threaten Abortion
Story first published: Monday, January 1, 2018, 17:00 [IST]