For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  கர்ப்பம் தரித்து 6 மாதங்கள் வரை கரு கலையாமல் எப்படி தடுப்பது?

  By Suganthi Rajalingam
  |

  ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்மை என்பது மிகவும் சந்தோஷம் தரக் கூடிய விஷயம். அதிலும் இந்த நற்செய்தி என்பது குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் சந்தோஷப்படுத்தக் கூடிய ஒன்றாகும். ஆனால் நிறைய பெண்களுக்கு இந்த சந்தோஷம் நிலைப்பதில்லை.

  how to prevent Miscarriages

  5-6 மாதங்களில் நிறைய பெண்கள் இந்த கருச்சிதைவு பிரச்சினையை சந்திக்கின்றனர். இந்த கருச்சிதைவு பிரச்சினை ஒரு தடவை இல்லை மறுபடியும் மறுபடியும் ஏற்பட்டால் கண்டிப்பாக நீங்கள் இதை கவனிக்க வேண்டிய பிரச்சினையும் கூட. மேலும் இப்படி கருச்சிதைவு ஏற்படும் போது துணைகளுக்கிடையே மிகுந்த மன உளைச்சல் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  கருச்சிதைவு

  கருச்சிதைவு

  இந்த கருச்சிதைவு குறித்து நிறைய கட்டுக் கதைகளும் நிலவி வரத்தான் செய்கிறது. மூலிகை சிகச்சைகள், குறிப்பிட்ட திசையில் தூங்குதல், மதங்களை சார்ந்து பிராத்தித்தல், சில உணவுகளை தவிர்த்தல் போன்ற எண்ணற்ற நம்பிக்கைகள் இதன் பின் இருக்கின்றன. ஆனால் இதெல்லாம் உண்மை என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என்பது நிதர்சனம்.

  சிகிச்சைகள்

  சிகிச்சைகள்

  இந்த மாதிரி கருக்கலைப்பு ஏற்படும் போது துணைகள் இருவரும் மருத்துவரை நாடி சிகச்சை பெறுவது நல்லது. சில மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு உங்களின் ஹார்மோன் மாற்றம், தொற்றுகள் மற்றும் மரபணு ரீதியான பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கேற்ப சிகச்சை அளிக்கப்படும். இந்த பரிசோதனைகள் மூலம் மறுபடியும் இந்த மாதிரியான பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

  குரோமோசோம் பாதிப்பு

  குரோமோசோம் பாதிப்பு

  பெரும்பாலும் 3 மாதத்திலேயே 50% சதவீத கருச்சிதைவுக்கு காரணம் குரோமோசோம்பல் அல்லது மரபணு பாதிப்பு தான் காரணமாக அமைகிறது. அதிகமான குரோமோசோம்பல் அசாதாரண விகிதம் தான் இதற்கு முக்கிய காரணம். 30% குரோமோசோம்பல் அசாதாரணமான இரண்டு அல்லது மூன்று மாதங்களிலும் 5% கடந்த மூன்று மாதங்களிலும் ஏற்படுகிறது. இந்த குரோமோசோம்பல் அசாதாரண வளர்ச்சிகுகுள்ளான கருச்சிதைவு பாதிப்பு <5 %ஜோடிஎளுக்கு மட்டுமே ஏற்படுகின்றன.

  கருமுட்டைகள்

  கருமுட்டைகள்

  35 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு இந்த குரோமோசோம் அசாதாரண வளர்ச்சி கொண்ட கருமுட்டைகள் மட்டுமே உருவாகின்றன. இரண்டு அல்லது மூன்று முறைக்கு மேல் கருச்சிதைவு ஏற்பட்டு இருந்தால் ஆண் மற்றும் பெண் இரண்டு பேரின் குரோமோசோம்களும் பரிசோதனைக்கு உட்பட வேண்டும். இந்த பரிசோதனை 95% தீர்வை கொடுக்கிறது. இதில் பாதிப்பு இருந்தால் அனுபவம் வாய்ந்த மரபணுவியல் மருத்துவரை நாடுவது நல்லது. இது ஒரு சிக்கலான காரியம் என்றே மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

  இம்னோலாஜிக் விளைவுகள்

  இம்னோலாஜிக் விளைவுகள்

  இதுகுறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்றே கூறலாம். இது குறித்தான விவரங்கள் பொதுவாக யாருக்கும் தெரிவதில்லை. இது இரண்டு விதமான காரணங்களால் ஏற்படுகிறது. ஆட்டோ இம்பினியூ (இதில் பெண்ணின் நோயெதிர்ப்பு அமைப்பு தனது சொந்த உறுப்புகளையும் திசுக்களையும் தாக்குகிறது). இந்த பிரச்சினையால் 10% அளவு கருச்சிதைவு நடக்க வாய்ப்புள்ளது. ஆன்டிபாஸ்போலிப்பிட் என்று இது கூறப்படுகிறது. கருப்பையில் சிறிய வடிவில் இரத்தம் கட்டுதல் ஏற்பட்டு குழந்தைக்கு போகும் ஆக்ஸிஜனேற்ற இரத்த ஓட்டத்தை தடுக்கின்றன. இதனால் கருச்சிதைவு ஏற்படுகிறது. எனவே குறைந்த அளவில் அஸ்பிரின் மற்றும் ஹெப்பரைன் போன்ற இரத்த அடர்த்தியை குறைக்கும் மாத்திரைகள் இந்த பிரச்சினை உள்ள பெண்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

  அலோஇம்பினியூ

  அலோஇம்பினியூ

  இதில் நோயெதிர்ப்பு அமைப்பு இனப்பெருக்க திசுக்களை வெளியே இருந்து தாக்குகின்றன. இதில் கருவானது தாயின் வெளிப்புற திசுக்களாக கருதப்படுகிறது. இதற்கு தந்தையின் இரத்தத்தை கொண்டு லுகோசைட் இம்பினியூஷேசன் மற்றும் இம்பினோகுளோபின் தெரபி போன்ற சிகச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

  ஹார்மோன் பாதிப்புகள்

  ஹார்மோன் பாதிப்புகள்

  புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் குறைப்பாட்டால் "புணர்ச்சிக் கட்ட குறைபாடு" ஏற்படுகிறது. இதுவும் கருச்சிதைவுக்கு ஒரு காரணமாக அமைகிறது. ஒரு கரு நன்றாக உருவாகி வளர்ச்சி அடைய புரோஜெஸ்ட்டிரோன் என்ற ஹார்மோன் மிகவும் முக்கியம். நவீன காலங்களில் ஏற்பட்டுள்ள மருத்துவ வளர்ச்சியால் டயாபெட்டீஸ் கட்டுப்பாடு மற்றும் தைராய்டு கட்டுப்பாடு போன்றவற்றால் கருச்சிதைவு ஏற்படுவதில்லை.

  நோய் தொற்றுகள்

  நோய் தொற்றுகள்

  நாள்பட்ட நோய்களான டாக்ஸோபிளாஸ்மோசிஸ் போன்ற பாதிப்பை கொண்ட பெண்களின் வழியாக குழந்தைக்கும் நோய்த் தொற்று ஏற்படுகிறது. இந்த தொற்றை உடனடியாக கண்டறிந்து சிகச்சை அளிக்காவிட்டால் தொடர்ந்து கருச்சிதைவு நாசத்தை ஏற்படுத்தும். எனவே உடனடியாக பரிசோதனை மேற்கொண்டு அதற்கான சிகச்சை நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே அடுத்த முறை ஆரோக்கியமான கருவுறுதல் ஏற்படும்.

  கர்ப்பபை குறைபாடுகள்

  கர்ப்பபை குறைபாடுகள்

  கர்ப்பபையில் உள்ள குறைபாடுகளும் கருச்சிதைவுக்கு காரணமாக அமைகின்றன. கர்ப்ப பையில் உள்ள நார்த்திசு கட்டிகள், செப்டம் (பிளவு) சரி யற்ற கர்ப்பபை வாய் போன்றவைகளும் கருச்சிதைவுக்கு காரணமாக அமைகிறது. எனவே இந்த பிரச்சினைகளை உடனடியாக சரி செய்து விட்டாலே வெற்றிகரமான கரு உருவாகுதலை பெறலாம்.

  வாழ்க்கை முறை

  வாழ்க்கை முறை

  சில வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களும் கருச்சிதைவுக்கு காரணமாக அமைகிறது. புகைப்பிடித்தல், அதிகமான மதுப் பழக்கம், போதைப் பழக்கம் போன்றவை கருச்சிதைவை ஏற்படுத்துகிறது.

  இதர விளைவுகள்

  இதர விளைவுகள்

  சில ஜோடிகளுக்கு கருச்சிதைவு ஏற்பட காரணங்கள் தெரியாமலும் இருக்கின்றன. இருப்பினும் அவர்களுக்கு 70% இயல்பான கருவுறுதல் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கருச்சிதைவு என்பது உடம்பு ரீதியான வலியை மட்டும் கொடுப்பதோடு துணைகளுக்கு மனது ரீதியான வலியையும் கொடுக்கிறது. எனவே கருச்சிதைவு என்பது மிகவும் மோசமான விளைவை துணைகளிடையே ஏற்படுத்தி விடுகிறது.

  எனவே கருவுறுதல் என்பது மிகுந்த கவனத்துடன் கவனிக்க வேண்டிய விஷயம் மட்டுமல்ல சரியான மருத்துவ பரிசோதனையுடன் பயணிக்க வேண்டிய கால கட்டமும் கூட. தகுந்த சிகிச்சையை மேற்கொள்வதன் மூலம் கருச்சிதைவை தடுத்து ஆரோக்கியமான கருவை உருவாக்கலாம். இது ஒரு உணர்வு ரீதியான விஷயம் என்பதால் துணைகளுக்கு சந்தோஷமும் நிலைக்கும்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  How to prevent Miscarriages

  here we suggest some reasons and find out the cause of the multiple miscarriages.
  Story first published: Thursday, August 23, 2018, 12:20 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more