Latest Updates
-
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா?
பிறக்க போகும் குழந்தை ஆணா? பெண்ணா? பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட சில வழிமுறைகள்!
உங்களுக்கு பிறக்கப்போவது ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்பதை எவ்வாறு தெரிந்துகொள்வது என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது
ஒரு குடும்பத்தில் ஒரு பெண் கர்ப்பமாகிவிட்டால் போதும், பிறக்கப்போவது ஆணா, பெண்ணா என அனைவரும் விவாதிக்க தொடங்கிவிடுவார்கள். சிலர் ஆண் குழந்தை என்று வாதிடுவார்கள், மற்றும் சிலர் பெண் குழந்தை என்று வாதிடுவார்கள். கர்ப்பமாக உள்ள பெண்ணின் வீட்டில் இது போன்ற சுவாரசியமன விவாதங்கள் நடப்பது இயல்பு தான்.
பழங்காலத்தில் பிறக்க போகும் குழந்தையின் பாலினத்தை சில அறிகுறிகளை வைத்து தெரிந்து கொண்டனர். அவை என்னவென்று பார்ப்போம்.

1. சருமத்தில் உண்டாகும் மாற்றங்கள்
பழங்காலத்தில் பெண்கள் பிறக்க போகும் குழந்தையின் பாலினத்தை கண்டுபிடிக்க தங்களது சருமத்தை உற்று நோக்கினர். பெண்களின் சருமம் எண்ணெய் பசையாக இருந்தால் பிறக்க போவது பெண் குழந்தை, வறண்ட சருமமாக இருந்தால், பிறக்கப்போவது ஆண் குழந்தை என கணித்தனர்.

2. முகப்பருக்கள்
பெண் குழந்தையாக இருந்தால், முகத்தில் முகப்பருக்கள் அதிகமாக தோன்றும். ஆண் குழந்தையாக இருந்தால், உங்களுக்கு எப்போதும் இருப்பது போன்று தான் இருக்கும்.

3. முகத்தில் பிரகாசம்
கர்ப்பமாக இருக்கும் பெண்களின் முகம் பொதுவாகவே பிரகாசமாக இருக்கும். அதிலும் ஆண் குழந்தையை சுமக்கும் தாயின் முகம் மிக அதிகமாக ஜொலிக்குமாம்.

4. தொப்புள்
சிலருக்கு தொப்புளுக்கு கிழே ஒரு கருமை நிற கோடு இருக்கும். அந்த கோடு தொப்புள் வரை நீண்டால் பிறக்க போவது பெண் குழந்தை என்றும், தொப்புளுக்கு மேலே வரை நீண்டால் பிறக்கபோவது ஆண் குழந்தை என்றும் கணிப்புகள் இருந்தது.

5. பேக்கிங் சோடா பரிசோதனை
இந்த பேக்கிங் சோடா பரிசோதனையின் மூலம் பிறக்க போகும் குழந்தையின் பாலினத்தை 80% வரை துல்லியமாக கணக்கிட முடியும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, சிறிதளவு பேக்கிங் சோடவை உங்களது சிறுநீரில் கலக்க வேண்டும் இவ்வாறு செய்யும் போது நீர் குமிழ்கள் தோன்றினாலோ அல்லது நுரைத்தாலோ பிறக்க போவது ஆண் குழந்தை. எந்த மாற்றமும் தோன்றவில்லை என்றால் பிறக்க போவது பெண்குழந்தை.

6. தலைமுடி பரிசோதனை
பெண் குழந்தையை கருவில் சுமக்கும் பெண்களுக்கு தலைமுடி மெல்லியதாகவும் பொலிவிழந்தும் இருக்குமாம். ஆண் குழந்தையை கருவில் சுமக்கும் பெண்களுக்கு தலைமுடி அடர்த்தியாகவும் மினுமினுப்பாகவும் காணப்படுமாம்.

7. உடலில் உள்ள முடிகள்
உங்களது உடற்பகுதியில் காணப்படும் முடிகள் வேகமாக வளர்ந்தால் உங்கள் கருவில் இருப்பது ஆண் குழந்தை. உங்கள் உடலில் வளரும் முடியில் எந்தவித மாற்றத்தையும் உணரமுடியவில்லை என்றால் பிறக்கபோவது பெண் குழந்தை.

8. உடல் எடை மாற்றம்
சில பெண்கள் தங்களது வயிற்று பகுதியில் மட்டும் உடல் எடை அதிகரிப்பதை உணருவார்கள், ஆனால் சில பெண்கள் தங்களது உடல் முழுவதும் எடை அதிகரிப்பதை உணருவார்கள்.
உங்கள் உடலின் எடை முழுவதும் வயிற்றுப்பகுதியில் கூடினால், உங்களுக்கு பிறக்கப்போவது ஆண் குழந்தை, உடலின் அனைத்து பகுதிகளிலும் எடை கூடினால் பிறக்கப்போவது பெண் குழந்தை.

9. காலின் வெப்பநிலை
உங்களது காலின் வெப்பநிலை எப்போதும் இருப்பதை விட குளிர்ச்சியாக இருந்தால், உங்களது கருவில் இருப்பது ஆண் குழந்தை. எந்த ஒரு மாற்றத்தையும் நீங்கள் உணரவில்லை என்றால் பிறக்கப்போவது பெண் குழந்தை.

10. பாதங்களின் வளர்ச்சி
சில பெண்கள் கர்ப்பகாலங்களில் பாதங்களில் வளர்ச்சி ஏற்படுவதை உணருவார்கள். ஆண் குழந்தைகளை தனது கருவில் சுமக்கும் தாய்களுக்கு பாதம் அரை இன்ஞ் அளவு வளரும். ஆனால் பெண் குழந்தைகளை கருவில் சுமக்கு தாய்களுக்கு பாதம் வளராது.

11. உணவில் விருப்பம்
இனிப்பான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றினால், வயிற்றில் வளர்வது பெண் குழந்தை. உப்பு உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றினால் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை

12. வயிறு
உங்களது வயிறு பெரிதாக இருந்தால், உங்களுக்கு பிறக்கப்போவது பெண் குழந்தை. சிறிதாக இருந்தால் பிறக்கப்போவது ஆண் குழந்தை.

13. தலைவலி
தலைவலியை வைத்துக்கூட பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை முடிவு செய்யலாம். தலைவலி ஏற்பட்டால், உங்களுக்கு பிறக்கப்போவது ஆண் குழந்தை. தலைவலி இல்லை என்றால் பிறக்கப்போவது பெண் குழந்தை.

14. தூங்கும் நிலை
நீங்கள் இயற்கையாக தூங்கும் நிலையை வைத்துக்கூட உங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை கண்டுபிடிக்கலாம். நீங்கள் இடது பக்கமாக தூங்கினால், ஆண் குழந்தை. வலது பக்கமாக தூங்கினால் பெண் குழந்தை.

15. மார்பகத்தின் காம்புகள்
உங்கள் மார்பகத்தின் காம்புகளின் நிறத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றால், உங்களுக்கு பிறக்கப்போவது பெண் குழந்தை. கருமையான நிறத்திற்கு மாறினால் உங்களுக்கு பிறக்கப்போவது ஆண் குழந்தை.

16.மார்பகத்தின் அளவு
உங்களது இடது மார்பகம் வலது மார்பகத்தை விட பெரிதாக இருந்தால், உங்களுக்கு பிறக்கப்போவது பெண் குழந்தை. வலது மார்பகம் இடது மார்பகத்தை விட பெரிதாக இருந்தால் பிறக்கப்போவது ஆண் குழந்தை.



Click it and Unblock the Notifications