Latest Updates
-
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார் -
மின்விசிறியை விட AC ஏன் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகிறது? 1 மணி நேரம் AC ஓடினால் எவ்வளவு கரண்ட் செல்வாகும்? -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகியுள்ள மாளவ்ய ராஜயோகம்: அடுத்த 2 மாதம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
அரிசி மாவு ரொட்டியும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 03 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம் -
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் தசைபிடிப்பை தவிர்க்க சில டிப்ஸ்...
குழந்தை பேறுகாலத்தில் கால் தசைபிடிப்பு ஏற்படுவது ஒரு இயல்பான பிரச்சனை தான். ஆனால் அது மேலும் அவதி ஏற்படுத்தாமல் தடுப்பது நம் கையில் தான் இருக்கிறது. கர்ப்பம் தரிக்கும் போது தாய்மார்களின் வயிறு பெரிதாவது மற்றும் எடை அதிகரிப்பது ஆகிய காரணங்களால் இடுப்பு பகுதிக்கும், கால்களில் இருக்கும் இரத்த நாளங்களுக்கும் கூடுதல் அழுத்தத்தை கொடுக்கின்றது.
கால் தசைபிடிப்பு பெரும்பாலும் உறங்கும் நேரத்திலேயே உருவாகிறது. எனவே அத்தகைய பேறுகாலத்தின் போது ஏற்படும் கால் தசைபிடிப்புகளை தவிர்க்க ஒருசில குறிப்புகளை கொடுத்துள்ளோம். அதைப் பின்பற்றி வந்தால், கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் தசைப்பிடிப்புக்களை தடுக்கலாம்.

ஆரோக்கியமான உணவு
சில சூழ்நிலைகளில், சுண்ணாம்பு, மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய கனிமங்களின் குறைபாட்டினால் கால் தசைபிடிப்பு உருவாகின்றது என்று கூறப்படுகிறது. இச்சூழலில் வாழைப்பழம், பாதாம், இலை நிறைந்த காய்கறி போன்றவற்றை மிதமான சிற்றுண்டியாக உண்ண வேண்டும். தீவிர மருத்துவரின் ஆலோசனையின் அடிப்படையில் அவற்றின் மாற்று பொருட்களையும் சாப்பிடலாம்.

நடைபயிற்சி
மருத்துவர் அனுமதித்தால் மட்டும் முதல் மூன்று மாதங்களில் 1-2 மணி நேரங்களுக்கு ஒரு முறை 10 நிமிடம் நடைபயில்வது பரிந்துரைக்கப்படுகின்றது. இது கால்களில் இரத்த ஓட்டத்தை சீர்படுத்த உதவுகின்றது. நீண்ட நேரம் நிற்பதினால், கால் தசைபிடிப்புகள் அதிகரிக்கும் என்பதால் அதை தவிர்த்திடுங்கள்.

கால் மீது கால் வைத்து உட்கார வேண்டாம்
இது கால்களுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை தடை செய்து குறைத்துவிடும். மேலும், படுத்திருக்கும் போது கால் கட்டை விரலை அடிக்கடி அசைப்பதன் மூலம், அவ்விடத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம்.

சரியான நிலையில் படுப்பது
உடலின் மற்ற பகுதிகளை விட கால் சற்று உயரமான இடத்தில் இருக்கும்படி வைப்பது உதவிகரமாக இருக்கும். நேராக அல்லது இடதுபுறம் படுத்துக் கொள்வதையும் கருத்தில் கொள்ளலாம். இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுவதால், இது பயனுள்ளதாக இருக்கும்.

கால் பயிற்சி
உடல் நிலையின் காரணமாக இலகுவாக உடற்பயிற்சி செய்ய முடியாமல் இருக்கலாம். ஆனால் கால்கள் பயிற்சி செய்வதற்கு சுதந்திரமாகவே இருக்கும். படுக்கும் போதும், உட்காரும் போதும் சில அடிப்படை கால் பயிற்சிகளை செய்யுங்கள். இடதுபுறமும், வலது புறமும் கால்களை அசையுங்கள். அடுத்து ஒரு 30 முறை அவற்றை வளைத்து நிமிர்த்துங்கள். இல்லையெனில் கால்களை லேசாக அமுக்கிவிடுங்கள்.

சுடுதண்ணீர் ஒத்தடம்
சுடுதண்ணீர் நிரப்பிய பாத்திரத்தில் கால்களை வைத்தோ அல்லது சூடான பேட்டை கால்களில் வைத்தோ சிறிது நேரம் ஒத்தடம் கொடுத்தால், கால் தசைபிடிப்பானது குறையும். அதிலும் உறங்கச் செல்லும் முன் இதை செய்தால் சிறந்த பயன் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications