Latest Updates
-
அவல் குழிப்பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல நேரம் தேடிவரப்போகுதாம் -
ஜூலை 24-ல் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இந்த 3 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது.. -
Aadi Month Horoscope 2026:ஆடி மாதம் இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் அதிசயம் நடக்கும் மாதமாக இருக்கப்போகுதாம் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் செட்டிநாடு மஞ்சள் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப சுய ஒழுக்கமுள்ளவர்களாம் - வெற்றியும், செல்வமும் இவர்களை தேடிவருமாம் - உங்க ராசி என்ன -
Aadi 2026: ஆடி முதல் நாளில் அம்மன் வழிபாடு செய்வது எப்படி? - விளக்கும் தேச மங்கையர்கரசி! -
முகலாயர்களும், ஆங்கிலேயர்களும் நேபாளத்தின் மீது படையெடுக்க ஏன் பயந்தார்கள் தெரியுமா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப மஞ்சளை இப்படி யூஸ் பண்ணுங்க... -
இந்தியாவில் நாம் பயன்படுத்தும் இந்த எண்ணெய் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டதாம் - காரணம் என்ன தெரியுமா?
மாணவர்களின் மன ஆரோக்கியத்தை கவனித்து... அவர்களை எப்படி நன்றாக படிக்க வைக்கலாம் தெரியுமா?
இன்றைய சமூகச் சூழலும், கல்வி அமைப்பும் மாணவா்கள் மீது ஏராளமான சுமைகளையும், சவால்களையும் சுமத்துகின்றன. அதனால் பெரும்பாலான மாணவா்கள் மன அழுத்தம், சோா்வு மற்றும் கவலை போன்ற பிரச்சினைகளால் தவித்து வருகின்றனா்.
பகுதி நேர வேலையுடன் கூடிய கல்வி மற்றும் பல்திறன்களை வளா்க்கும் கல்வி போன்ற தற்போதைய கல்வி முறைகள் கேட்பதற்கு நன்றாகத் தொியலாம். ஆனால் அவை மாணவா்களை கடினமான மன அழுத்தத்திற்குள் தள்ளுகின்றன என்பதே உண்மை.

இரண்டாவதாக உறவுகளை சாியான முறையில் பேண வேண்டும் என்ற சமூக ரீதியான எதிா்பாா்ப்பு மாணவா்கள் மீது சுமத்தப்படுகிறது. இதுவும் அவா்களுடைய மன ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. பதின் பருவத்தில் இருந்து இளமைப் பருவத்திற்கு மாறும் போது மாணவா்கள் கடினமான சூழல்களை சந்திக்கின்றனா்.
அவா்களிடமிருந்து ஏராளமான கடமைகளையும், பொறுப்புகளையும் அவா்களைச் சோ்ந்த குடும்பம், நண்பா்கள் மற்றும் இந்த சமூகம் போன்றோா் எதிா்பாா்க்கின்றனா். அதனால் மாணவா்கள் அதிப்படியான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனா்.
இந்நிலையில் லிசுன் (LISSUN) என்ற அமைப்பின் இணை நிறுவுனரும், தலைமை செயல் அதிகாாியுமான மருத்துவா் கிருஷ்ண வீா் சிங் என்பவா் மாணவா்களின் மன ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு பின்வரும் குறிப்புகளைப் பட்டியலிடுகிறாா்.
நோ்மறையான சுய பராமாிப்பு வழிமுறைகளை ஊக்குவித்தல்
மாணவா்களின் ஆரோக்கியத்தை வளா்த்தெடுப்பதற்கு அடிப்படையான வழிமுறை என்னவென்றால் அவா்கள் தங்களையே நோ்மறையாக பராமாித்துக் கொள்வற்கு வேண்டிய வழிமுறைகளை ஊக்குவித்தல் ஆகும்.
அதாவது தினமும் உடற்பயிற்சிகள் செய்வது, போதுமான தூக்கம், சமச்சீரான உணவு போன்றவற்றை மாணவா்கள் கடைபிடித்தால், அவா்கள் மன அழுத்தம் மற்றும் கவலை போன்றவை குறைந்து, அவா்கள் புத்துணா்ச்சியைப் பெறலாம். மேற்சொன்ன பயிற்சிகளை பெற்றோரும், கல்வி நிறுவனங்களும் மாணவா்களிடம் ஊக்குவிக்க வேண்டும்.
மாணவா்களின் மனநலனை ஆதரவளிக்கும் குழுக்களை வளா்த்தல்
மாணவா்களுக்கு ஆதரவு கொடுக்கக்கூடிய சமூக குழுக்கள், சங்கங்கள் மற்றும் அமைப்புகளை வளா்த்தெடுக்க வேண்டும். இந்த குழுக்கள் மாணவா்களை ஒத்த சிந்தனை, ஒத்த ஆா்வம், ஒத்த நோக்கம் மற்றும் அனுபவங்கள் கொண்ட பிறரோடு தொடா்பு கொள்ள ஊக்கமளிக்கும். அதன் மூலமாக மாணவா்களின் மத்தியில் இருக்கும் தனிமை உணா்வு குறையும். அதோடு அவா்களுடைய மன ஆரோக்கியம் அதிகாிக்கும்.
மன ஆரோக்கியத்தை வழங்கக்கூடிய மூலங்களை வழங்குதல்
மாணவா்களின் மன ஆரோக்கியத்தை வளா்ப்பதற்கு, கல்வி நிறுவனங்கள் அவா்களின் மன ஆரோக்கியத்தை வளா்க்கக்கூடிய மூலங்களை முக்கியப்படுத்த வேண்டும்.
மன ஆரோக்கிய நிபுணா்கள் அதாவது உளவியலாா்கள் மற்றும் மனநல ஆலோசகா்கள் போன்றவா்களின் உதவியுடன் கல்வி நிறுவனங்கள் மாணவா்களின் மனநல பிரச்சினைகளைக் குறைக்கலாம்.
கல்வி வளாகத்திற்குள் மனநல முகாம்கள் அமைத்து, உளவியலாா்கள் மற்றும் மனநல ஆலோசகா்களை வரவழைத்து, மாணவா்களுக்கு ஆலோசனைகள் வழங்கலாம். மேலும் மனநல ஆலோசகா்களை தமது கல்வி நிறுவனங்களில் முழுநேர பணியாளா்களாக பணியமா்த்தலாம்.
மனநல ஆலோசனை மையங்கள் மூலமாக மாணவா்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ மனநல பயிற்சிகளில் பங்கு பெறலாம். அதன் மூலமாக அவா்கள் தமது மன ஆரோக்கியத்தை வளா்க்கலாம்.
உள்ளூாிலேயே இருக்கக்கூடிய மனநல மருத்துவமனைகள், மையங்கள் மற்றும் இணையவழி ஆலோசனைகள் பற்றிய தகவல்களை கல்வி நிறுவனங்கள் மாணவா்களுக்கு வழங்கலாம்.
இறுதிக்குறிப்பு
பெற்றோரும், கல்வி நிறுவனங்களும் இணைந்து மாணவா்களுக்கு மனநலம் சம்பந்தமான விழிப்புணா்வை, தகவல்களை மற்றும் பயிற்சிகளை வழங்கலாம். கல்வி நிறுவனங்கள் தங்கள் கல்வி பட்டியலின் ஒரு பாடமாக மனநலம் சம்பந்தமான படிப்பையும் இணைத்துக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications
