Latest Updates
-
மணமணக்கும்.. வரகரிசி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 03 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சைவ உணவை விரும்பி சாப்பிடும் உலகின் டாப் 10 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
உருளைக்கிழங்கு, சீஸ் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
1 கப் பச்சைப் பயறு இருந்தா இந்த மாதிரி கொங்கு ஸ்டைல் கடையல் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமா, சுவையா இருக்கும் -
கடகத்தில் இருக்கும் செவ்வாய்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
தேங்காய் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 02 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
உங்க வீட்டில் டீனேஜ் வயதில் பிள்ளைகள் இருக்காங்களா? அப்ப இந்த விஷயங்களை அவசியம் தெரிஞ்சிக்கோங்க...!
குழந்தைகளின் டீனேஜ் பருவம் என்பது குழந்தைகளுக்கும் சரி, பெற்றோர்களுக்கும் சரி மிகவும் சவாலான காலக்கட்டமாகும். இந்த காலக்கட்டத்தில்தான் பெற்றோருக்கும், குழந்தைக்ளுக்கும் இடையில் விரிசல் ஏற்படுகிறது. டீனேஜ் வயது ஒரு குழந்தைகளின் நடத்தையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
பல குழந்தைகளுக்கு, இந்த வயதில் கீழ்ப்படிவது என்பது மிகவும் கடினமான பணியாக மாறுகிறது, பணிவானது வெறுப்பாக மாறுகிறது மற்றும் அமைதியானது தனிமையாக மாறும். டீனேஜ் என்பது பெற்றோர் மற்றும் குழந்தைகள் இருவருக்கும் கடினமான கட்டம். இந்த காலக்கட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் டீனேஜ் குழந்தைகளுடன் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்க என்ன செய்ய வேண்டுமென்று தெரிந்து கொள்ள வேண்டும்.

உங்களை அதிகமாக தயார்படுத்திக் கொள்ளாதீர்கள்
பெற்றோர்கள் செய்யும் பெரிய தவறு, இதுவரை நடக்காத விஷயங்களுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்வதுதான். பெற்றோர்கள் எப்போதும் தங்கள் குழந்தைகள் தொடர்பான விஷயங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் ஆர்வமாக உள்ளனர், மற்ற டீனேஜர்களைப் பார்க்கும் தனிப்பட்ட அனுபவங்கள் அவர்களின் குழந்தைகளைப் பற்றி அதிகம் கவலைப்பட வைக்கின்றன. இதனால் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் வேண்டுமென்றே கடுமையாக நடந்துகொள்கிறார்கள், இது குழந்தைகளிடமிருந்து மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்துகிறது.
அவர்கள் செய்யும் அனைத்தையும் வெறுக்காதீர்கள்
பதின்வயது சிக்கலான வயது என்பதை அனைவரும் அறிவோம், ஆனால் ஒரு பதின்வயதினர் செய்யும் அனைத்தையும் வேண்டாம் என்று சொல்வது உண்மையில் நல்லதை விட தீங்கு விளைவிக்கும். அவர்களுக்கு சுதந்திரம் கொடுங்கள், கொஞ்சமாவது அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற சுதந்திரம் கொடுங்கள். அவர்களின் விருப்பங்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதற்குப் பதிலாக கேட்கப்பட்டு விவாதிக்கப்படுவதை உறுதிசெய்யவும்.
எப்போதும் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்
பதின்ம வயதினரைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில், பெற்றோர்கள் எப்போதும் அவர்களின் கருத்துக்களுக்கு முரண்படுகிறார்கள். இது பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே ஏற்கனவே இருக்கும் இடைவெளியை மேலும் அதிகரிக்கிறது. மென்மையான வழிமுறைகள் அவர்களின் கருத்துக்கள் மீதான உங்களின் வேறுபாட்டை உணர செய்யுங்கள்.
விதிகளை பின்பற்ற கட்டாயப்படுத்தக்கூடாது
டீனேஜர்கள் உண்மையில் விதிகளைப் பின்பற்றுவதை வெறுக்கிறார்கள். பதின்ம வயதினர் சுதந்திரத்திற்காக ஏங்குகிறார்கள், மற்ற அனைத்தையும் தங்கள் பயணத்தில் தடையாகக் கருதுகிறார்கள். அவர்களை பார்ட்டிக்கு அனுமதிக்காதது முதல் அவர்களின் டிரஸ்ஸிங் சென்ஸைக் கேள்வி கேட்பது வரை, நீங்கள் அவர்களுக்கு கட்டளை போடாமல், அவர்களுக்கு விளக்க வேண்டும்.
அவர்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்காதீர்கள்
இந்த காலக்கட்டத்தில் புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ளவும் கண்டறியவும் ஆர்வமும் உற்சாகமும் உச்சத்தில் இருக்கும். வலுக்கட்டாயமாக இதிலிருந்து அவர்களைத் தடுக்காதீர்கள். அவர்களுக்கு எந்த விஷயமும் தெரியாது என்று ஒருபோதும் தப்பு கணக்கு போட்டுவிடாதீர்கள், ஏனெனில் அவர்களுக்கு அனைத்தும் நன்றாக தெரியும்.



Click it and Unblock the Notifications

