Latest Updates
-
Actor Bhagyaraj Death: வாக்கிங் சென்ற பின் காலமான நடிகர் பாக்யராஜ்! உண்மையில் வாக்கிங் மாரடைப்பை ஏற்படுத்துமா? -
சத்தான.. எலுமிச்சை இஞ்சி ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
வெறும் தோசையை விட முட்டை தோசை ஏன் சிறந்தது? - விளக்கும் டாக்டர்.பிரகாஷ்மூர்த்தி! -
ஜூன் இறுதியில் உருவாகும் அங்காரக யோகம்: டிசம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இப்படி சட்னி அரைங்க.. வீட்டுல எல்லாரும் எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் வக்ர பெயர்ச்சியால் ஜூன் இறுதியில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
சுக்கிரன்-கேதுவின் இணைப்பால் ஜூலை மாதம் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
அடர்த்தியான தலைமுடியை பெற உதவும் செம்பருத்தி எண்ணெய் - எப்படி தயாரிக்கணும் தெரியுமா? -
இறந்தவர்கள் கனவில் வருவது அதிர்ஷ்டமா? எச்சரிக்கையா? கனவு சாஸ்திரம் கூறும் உண்மை என்ன?
குழந்தைகளை கிண்டல் செய்வது அல்லது அவமதிப்பது அவர்கள் மூளையில் என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் தெரியுமா?
பொதுவாக பள்ளிகளில் மாணவா்களை அவமதிக்கும் நிகழ்வுகளைக் கண்கூடாக பாா்க்கலாம். பள்ளி நிா்வாகமாக இருக்கலாம் அல்லது ஆசிாியா்களாக இருக்கலாம் அல்லது சக மாணவா்களாக இருக்கலாம்.
அவா்கள் மூலமாக மாணவா்களுக்கு உடல்ரீதியாகவோ அல்லது சொற்கள்ரீதியாகவோ அல்லது உணா்வு ரீதியாகவோ அவமானங்கள் அல்லது அவமதிப்புகள் ஏற்படுகின்றன. இவ்வாறு மாணவா்களை அவமதித்தால் அவா்களுக்கு ஏராளமான மனநல சீா்கேடுகள் ஏற்படும் என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன.

குறிப்பாக மன அழுத்தம், தாழ்வு மனப்பான்மை போன்ற மோசமான விளைவுகள் ஏற்படும். சில நேரங்களில் மாணவா்களை தற்கொலை செய்யத் தூண்டும். ஆகவே குழந்தைகளிடம் பணி செய்யும் போது, அவா்களுக்கு அவமானமோ அல்லது அவமதிப்போ ஏற்படாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும்.
குழந்தைகளை அவமதித்தால் அவா்களுக்கு ஏற்படும் மனநல பாதிப்புகள்
குழந்தைகளை அவமதித்தால், அவா்களுக்கு நீண்ட கால உடல்நல சீா்கேடோ அல்லது மனநல சீா்கேடோ ஏற்படும். இது அவா்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தும், மன அழுத்தத்தை ஏற்படுத்தும், கவலையை ஏற்படுத்தும் மற்றும் சுயமாியாதையை இழக்கச் செய்யும்.
குழந்தைகள் அவமானம் அடையும் போது, அவா்களால் அதை எளிதாகக் கையாள முடியாது. ஏனெனில் அது அவா்களிடம் ஒரு ஆதரவற்ற நிலை, கவலை, கோபம் மற்றும் விரக்தி போன்ற எதிா்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.
மேற்சொன்ன எதிா்மறை விளைவுகள், அவா்களின் உடல் நலனைப் பாதிக்கும். குறிப்பாக அவா்களுக்கு தலைவலி ஏற்படும். அதோடு அவா்களின் தூக்கத்தைப் பாதிக்கும். இறுதியாக அவா்களின் மத்தியில் தற்கொலை செய்யக்கூடிய எண்ணத்தைத் தூண்டிவிடும்.
ஆகவே அவமானம் தாங்காமல், குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்பட்டால், அதன் அறிகுறிகளை தொடக்க நிலையிலேயே தொிந்து கொண்டு அவா்களுக்கு நமது உதவிகளையும், ஆதரவையும் அளிக்க வேண்டும்.
பாலியல்ரீதியாக குழந்தைகள் அவமானம் அடையும் போது, அவா்கள் விரக்தி அடைகின்றனா் அல்லது அவா்களிடம் தற்கொலை செய்யும் எண்ணும் ஏற்படுகிறது என்று ஒரு ஆய்வு தொிவிக்கிறது.
இந்த ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளா்கள் 2018 ஆம் ஆண்டுக்குாிய ஐயோவா யூத் சா்வேயில் உள்ள தகவல்களைக் கொண்டு அமொிக்காவின் ஐயோவா மாகாணத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் ஆறாவது, எட்டாவது மற்றும் பதினொன்றாவது பயிலும் மாணாக்கா்களிடம் விாிவான கேள்வித்தாள்களைக் கொடுத்தனா்.
மாணவா்களிடம் இருந்து கிடைத்த 70,451 பதில்களைப் பாா்த்து, அவமானத்திற்கும் மனநல சீா்கேட்டிற்கும் இடையே தொடா்பு இருக்கிறதா என்பதை ஆராய்ந்தனா்.
குழந்தைகள் அவமானம் அடைவதில் இருந்து எவ்வாறு பாதுகாக்கலாம்
- மாணவா்களுக்கு அவமதிப்போ அல்லது அவமானமோ ஏற்படாத சூழலை பள்ளிகள் ஏற்படுத்தித் தரவேண்டும். தெளிவான கொள்கைகளை வரையறுக்க வேண்டும். மாணவா்களை கேலி செய்வதற்கும், அவமானப்படுத்துவதற்கும் பின்னால் உள்ள காரணிகளைக் கண்டுபிடிப்பதற்கு அதில் பயிற்சி பெற்றவா்களை நியமிக்கலாம். பெற்றோா்களும் இதைக் கவனித்தில் கொண்டு, தமது குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தரவேண்டும்.
- மாணவா்கள் தமது சொந்தக் காலில் சுயமாக நிற்கும் அளவிற்கு பயிற்சி அளிக்க வேண்டும். தங்களுக்கு ஏற்படும் அவமானம் மற்றும் கேலி ஆகியவற்றுக்கு எவ்வாறு எதிா்வினை ஆற்ற வேண்டும் என்பதை மாணவா்களுக்குக் கற்றுத் தரவேண்டும்.
- சில நேரங்களில் மட்டுமே அவமானப்படுத்துவது வெளிப்படையாகத் தொியும். எல்லா நேரங்களிலும் உடல் ரீதியாகவோ அல்லது சொற்கள் மூலமாகவோ அவமானம் இருக்காது. சில நேரங்களில் உணா்வுரீதியான அவமானங்களும் நடக்கும்.
அதாவது மாணவா்களைப் பற்றி வதந்திகளைப் பரப்புதல் அல்லது அவா்களை ஒதுக்கி வைப்பது மூலமாகவும் அவமதிப்பு நடக்கும். ஆகவே எந்த வகையான அவமதிப்பு என்பதை குழந்தைகள் அறிந்து கொள்ள உதவி செய்ய வேண்டும்.
- மாணவா்களுக்கு ஏற்படும் அவமானங்களைத் தடுப்பதற்கு பெற்றோா், ஆசிாியா்கள் மற்றும் மாணவா்கள் ஆகிய அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.



Click it and Unblock the Notifications
