Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ!
பெண்களின் இடுப்பின் அளவு அவர்களின் கருவுறுதல் திறனை பாதிக்குமாம்... ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு...!
உலகளவில் கருவுறாமை என்பது முக்கிய பிரச்சினையாக மாறி வருகிறது. தம்பதிகளிடையே கருவுறாமை ஆண், பெண் இருவரில் யாரால் வேண்டுமென்றால் ஏற்படலாம். மலட்டுத்தன்மைக்கு பாலின வேறுபாடுகள் இல்லை. இருவருக்கும் மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
பெண்களில் கருவுறாமை பல பிரச்சினைகளின் விளைவாக ஏற்படலாம், ஆனால் சமீபத்திய ஆய்வில் பெண்களின் இடுப்பு அளவும் ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம் என்று கண்டறிந்துள்ளது. கருவுறாமை என்பது ஒரு வருடம் அல்லது அதற்கும் மேலாக முயற்சித்த பிறகும் தொடர்ச்சியான, பாதுகாப்பற்ற உடலுறவுக்கு பிறகும் கர்ப்பத்தை அடைய முடியாத மருத்துவ நிலையாகும். இது ஒரு தீவிர மருத்துவ கவலையாகும், இது உலகளவில் குழந்தை பெற்ற தம்பதிகளிலும் 8-12 சதவீதத்தினரைப் பாதிக்கிறது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, உலகளவில் இனப்பெருக்க வயதுடைய ஒவ்வொரு ஆறில் ஒருவர் தங்கள் வாழ்நாளில் மலட்டுத்தன்மையை அனுபவிப்பதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. மலட்டுத்தன்மை இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது: முதன்மை அல்லது இரண்டாம் நிலை. முதன்மை மலட்டுத்தன்மையில், கர்ப்பம் ஒருபோதும் அடையப்படுவதில்லை, இரண்டாம் நிலை என்பது குறைந்த பட்சம் ஒரு கர்ப்பம் தரித்தப் பிறகு கருத்தரிக்க முடியாமல் போவது.
ஆய்வுகளின் படி, சீனாவில் ஒரு குழு இனப்பெருக்க வயதுடைய 3,000 க்கும் மேற்பட்ட பெண்களை ஆய்வு செய்தது. ஒரு பெண்ணின் உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) இல்லாமல், இடுப்பு அளவு அதிகரிப்பதால் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகள் குறைவது கண்டறியப்பட்டது. உண்மையில், இடுப்பு சுற்றளவு ஒவ்வொரு 1 செமீ அதிகரிக்கும் போட்டு, கருவுறாமை அபாயம் 3 சதவீதம் அதிகரிக்கிறது என்று ஆய்வு கூறுகிறது.
இந்த ஆய்வில் 18 முதல் 45 வயதுக்குட்பட்ட 3,239 பெண் பங்கேற்பாளர்கள், தேசிய சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து தேர்வுக் கணக்கெடுப்பில் (NHANES) இடம் பெற்றுள்ளனர். இந்த பெண்களில், 327 அல்லது 11.1 சதவீதம் பேர் மலட்டுத்தன்மையுள்ளவர்கள். பெரிய இடுப்பு அளவு கொண்ட பெண்கள், இடுப்பு சிறிய அளவைக் கொண்ட பெண்களை விட, கருவுறாமை பிரச்சினைகளால் பாதிக்கப்படும் வாய்ப்பு இரண்டரை மடங்கு அதிகம்.
கருவுற்ற பெண்களை விட அதிக இடுப்பு சுற்றளவு (102.8 cm vs 93.7 cm) மற்றும் அதிக BMI (32.0 vs 28.7) கொண்ட மலட்டுத்தன்மையுள்ள பெண்களிடையே உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நிலைமைகள் பொதுவானவை என்பதும் கண்டறியப்பட்டது. இந்த பங்கேற்பாளர்களில் பெரும்பாலானோர் வயதானவர்கள், சிறந்த கல்வி பெற்றவர்கள், மற்றும் சீரான பாலியல் வாழ்க்கைக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், மிதமான உடல் செயல்பாடு மற்றும் டயட் உடல் பருமனுடன் தொடர்புடைய மலட்டுத்தன்மையின் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
உடல் பருமனும் கருவுருதலைப் பாதிக்கும்
அதிக எடை மற்றும் பருமனான பெண்களுக்கு லெப்டின் என்ற ஹார்மோன் அதிக அளவில் உள்ளது, இது கொழுப்பு திசுக்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது ஹார்மோன் சமநிலையை சீர்குலைத்து கருவுறுதலைக் குறைக்கும்.
உடல் கொழுப்பின் அளவு மற்றும் விநியோகம் பலவிதமான ஹார்மோன் வழிமுறைகள் மூலம் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கிறது. அதிக எடை மற்றும் அதிக வயிற்று கொழுப்பு, கருவுறுதல் சிரமங்களை ஏற்படுத்துகிறது என்றார் ஆய்வு கூறுகிறது.
அதிக எடை, குறிப்பாக அதிகப்படியான வயிற்று கொழுப்பு, இன்சுலின் எதிர்ப்புடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் செக்ஸ் ஹார்மோன்-பைண்டிங் குளோபுலின் (SHBG) அளவு குறைகிறது, இது பாலின ஹார்மோன்களான ஆண்ட்ரோஜன் மற்றும் ஈஸ்ட்ரோஜனைக் கட்டுப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளது.
இது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியின் அபாயத்தை அதிகரிக்கிறது, இது கருவுறுதலைக் குறைக்கிறது. ஒரு ஆய்வில், சாதாரண எடை வரம்பில் உள்ள பெண்களை விட, பருமனான பெண்கள் கருத்தடை செய்வதை நிறுத்திய ஒரு வருடத்திற்குள் கருத்தரிக்கும் வாய்ப்பு மிகக் குறைவு.
அதிக எடை மற்றும் உடல் பருமனால் தூண்டப்படும் மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்தும் நேர்த்தியான ஹார்மோன் சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் அனோவுலேஷன் ஆபத்தை அதிகரிக்கின்றன. உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) 27 க்கு மேல் உள்ள பெண்கள், சாதாரண எடை வரம்பில் உள்ள பெண்களை விட மூன்று மடங்கு அதிகமாக, கருமுட்டை வெளியாததால், கருத்தரிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது.



Click it and Unblock the Notifications

