Latest Updates
-
November 2026 Lucky Zodiac Signs: நவம்பர் மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்ப அதிர்ஷ்டமானதா இருக்கும்... -
வெண்டைக்காயை இப்படி புதுமையான சுவையில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற டாப் 5 அரிசி வகைகள் இதாங்க.. எதுலாம்-ன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கிய விஷ யோகம்: அடுத்த 2 நாள் இந்த 5 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..! -
3 தக்காளியும், 4 கத்திரிக்காயும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
அக்டோபர் 24, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் வைச்சு செய்யப்போகுதாம் -
அதிசார குரு பெயர்ச்சி 2026: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்கு எப்படி இருக்கும்? - ஜோதிடர் கணிப்புகள் -
குருபகவான் மகம் நட்சத்திரத்திற்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
டெல்லி ஸ்டைல் சன்னா மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு பொடி வறுவல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - காரமா செமையா இருக்கும்
உங்க குழந்தைகள அதிபுத்திசாலியா மாத்தணுமா? அப்ப இந்த பொருட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்து கொடுங்க...!
குழந்தைகளின் மூளை வளர்ச்சி சிறு வயதில் வளர்ச்சி நிலையில் இருக்கிறது, இது அவர்களின் வாழ்க்கைக்கான அடித்தளத்தை வடிவமைக்க உதவும் சிறந்த காலமாக இருக்கும். ஆனால் அறிவாற்றல் திறன் மற்றும் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சில உணவுகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? அதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.

மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் சத்துக்கள்
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, குழந்தைகளுக்கு அவர்களின் உணவில் DHA, இரும்பு, கோலின், ஏஆர்ஏ, வைட்டமின் பி, அயோடின் மற்றும் புரதங்கள் போன்ற ஏழு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன, அவை மூளை செல்கள் வளர்ச்சிக்கு உதவுவதோடு, செயல்பாட்டை மேம்படுத்துவதிலும், அறிவாற்றல் வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. இந்த முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சில பொதுவான உணவுகள் இங்கு பட்டியலிடப்பட்டிருக்கின்றன.
கீரைகள்
கீரைகளில் இரும்புச்சத்து, வைட்டமின் பி, ஃபோலேட், வைட்டமின் கே மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் நிறைந்திருக்கின்றன, அவை மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன. கீரைகளை வாரம் இரு முறையாவது உணவில் சேர்ப்பது சிறந்த மனநிலை மற்றும் மூளை செல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
பால் மற்றும் சீஸ்
பால் மற்றும் சீஸில் DHA மற்றும் இரும்புச்சத்துகளோடு மூளையை வளர்ச்சியை அதிகரிக்கும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் அதிகமாகவே நிறைந்திருக்கின்றன. அதுமட்டுமில்லாமல், பால் மற்றும் சீஸ் சாப்பிடுவது ஆரோக்கியமான கொழுப்பை அதிகரிக்கவும், மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
முழு தானியங்கள்
ஓட்ஸ், பழுப்பு நிற அரிசி மற்றும் குயினோவா போன்ற முழு தானியங்கள் மூளைக்கு நிலையான ஆற்றலை கொடுக்கின்றன. இவற்றில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து மற்றும் பி-வைட்டமின்கள் உள்ளன.
அவை மூளையின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுவதோடு அறிவாற்றல் சார்ந்த செயல்பாடுகளுக்கும் உதவுகின்றன. முழு தானியங்களும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருப்பதால், அவை படிப்படியாக இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸை சேர்க்கின்றன. இது மூளையின் செயல்திறனுக்கு தேவையான நிலையான எரிபொருள் சத்துக்களை வழங்குகிறது.
வால்நட்ஸ் மற்றும் அவகேடோ
வால்நட்ஸ் மற்றும் அவகேடோ பழங்களில் ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ மற்றும் துத்தநாகம் போன்ற மூளையின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத தாதுக்களான DHA ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
முட்டைகள்
புரதங்கள், கோலின், மற்றும் வைட்டமின் பி12 ஆகியவற்றின் வளமான ஆதாரமாக முட்டை இருப்பதால், மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் சிறந்த ஆகாரமாக விளங்குகின்றன. முட்டையில் உள்ள கோலின் மூளையில் நினைவாற்றல் மற்றும் கற்றல் செயல்பாடுகளை மேம்படுத்துவதோடு, மூளை செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் முட்டையில் அதிக அளவில் உள்ளன.
கொழுப்பு நிறைந்த மீன்
கொழுப்பு நிறைந்த மீன்களான சால்மன், ட்ரவுட் மற்றும் மத்தி போன்றவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன, குறிப்பாக மூளை வளர்ச்சிக்கு அவசியமான DHA இதில் அதிக அளவில் உள்ளது. DHA என்பது மூளையின் முக்கிய கட்டமைப்பு கூறாகும். இவற்றை அடிக்கடி உணவில் சேர்ப்பது அறிவாற்றல் மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் நல்ல பலன்களை அளிக்கிறது.



Click it and Unblock the Notifications

