குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும்போது பெற்றோர்கள் செய்யக்கூடாத தவறுகள் என்ன? விளக்குகிறார் மருத்துவர் பாஸ்கர்!

மருந்துகள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. ஆனால் மருத்துவம் பற்றியும், மருந்துகள் பற்றியும் அடிப்படை புரிதல் இல்லையென்றால் பல பாதிப்புகள் மற்றும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே மருந்துகளை எடுப்பதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது. ஆனால் குழந்தைகளுக்கு மருந்துகள் கொடுக்கும் போது பெற்றோர்கள் சில பொதுவான தவறுகளை செய்கின்றனர்.

இது குழந்தைகளின் ஆரோக்கியத்தை எதிர்மறையாகப் பாதிக்கும். இந்த பதிவில் குழந்தைகளுக்கு மருந்துகள் கொடுக்கும் போது பெற்றோர்கள் செய்யும் தவறுகள் என்ன என்று குழநதைகள் நல மருத்துவர் பாரதி அவர்கள் நம்முடன் பகிர்ந்துள்ளார். அவை என்னென்ன தவறுகள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Exclusive Medication Mistakes Parents Should Avoid Share by Pediatrician Baskar

தவறான மருந்துகளை கொடுப்பது

எப்போதும் மருந்தின் லேபிளில் கொடுக்கப்பட்டிருக்கும் வழிகாட்டுதல்களை, மருந்தை உபயோகிப்பதற்கு முன்பு படிக்க வேண்டும். மருந்தின் காலாவதி தேதியை சோதித்து பார்க்கவேண்டும். மேலும், அம்மருந்து உங்கள் குழந்தையின் வயதிற்கும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் வியாதியின் அறிகுறிகளுக்கு ஏற்றதா என்பதை பார்க்க வேண்டும்.

மருந்துகளில் உள்ள லேபிளை நீக்குவதோ அல்லது மருந்துகளை வேறு பைகளில் அட்டைகளில் வைப்பதோ அல்லது மருந்துகளை ஒன்றாக கலப்பதோ கூடவே கூடாது. அடிக்கடி மருந்துகளை அவ்வப்போது பரிசோதித்து காலாவதியான மருந்துகளை அப்புறப்படுத்த வேண்டும். மேலும், மருந்துகளில் காலாவதி தேதி குறிப்பிடவில்லை எனில், அதை மெடிக்கல் ஷாப்பில் உடனடியாக பரிசோதிக்க வேண்டும்.

அளவுக்கு அதிகமான மருந்துகளை கொடுப்பது

பல மருந்துகளின் வேதியல் கூறுகள் ஒன்றாக இருந்தாலும் அவை வெவ்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்க கூடியது. உதாரணமாக, சளிக்கான மருந்துகள் அனைத்திலும் அசிடமினோபென் என்ற வேதியல் கூறு உள்ளது. இது டைலினால் என்ற மருந்திலும் உள்ளது. எனவே உங்கள் குழந்தையின் சளி மற்றும் காய்ச்சலுக்கு டைலினால் கொடுப்பீர்கள் என்றால் அவர்கள் உடலில் தேவையானதை விட இரண்டு மடங்கு அசிடமினோபென் சேரும். எனவே 6 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சளி மருந்து வாங்குவதற்கு முன் அவர்களின் நோய் அறிகுறிகளை கவனிப்பது நல்லது.

பிற தேவைகளுக்கு மருந்துகளை கொடுப்பது

உங்கள் குழந்தைக்கு ஒரு ஆரோக்கிய பிரச்சினைக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்தை வேறு பிரச்சினைக்கும் உபயோகபடுத்துவது மிகவும் தவறான ஒன்றாகும். உதாரணமாக, பெற்றோர்கள் குழந்தைகள் தூங்க வேண்டும் என்பதற்காக பெனட்ரிலை கொடுக்கிறார்கள். ஆனால் 11% சதவீத குழந்தைகள் மருந்து எடுத்துக் கொண்ட பிறகு அமைதியாக இல்லாமல் உற்சாகமாக இருக்கிறார்கள் என்பதே உண்மை. எனவே அந்தந்த பிரச்சினைகளுக்கு அதற்குரிய மருந்தைக் கொடுக்க வேண்டும்.

ஒரு குழந்தைக்கு கொடுக்கும் மருந்தை மற்றொரு குழந்தைக்கு கொடுப்பது

உதாரணமாக, உங்களின் ஒரு குழந்தைக்கு தொண்டை தொடர்பான பிரச்சனைக்கு சிகிச்சையளித்து கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது உங்களின் இரண்டாவது குழந்தைக்கும் தொண்டை தொடர்பான பிரச்சனை வருகிறது என்றால், அந்த குழந்தைக்கும் கொடுக்கும் அதே மருந்தை, பிரச்சினை என்னவென்று பரிசோதிக்காமல் இரண்டாவது குழந்தைக்கும் கொடுப்பது மிகவும் தவறு. ஏனெனில், பிரச்சனை வேறாக இருந்தால், அந்த குழந்தையின் உடல்நலம் இன்னும் மோசமாக வாய்ப்பிருக்கிறது. மருத்துவரின் அனுமதியின்று குழந்தைகளுக்கு மருந்துகள் கொடுப்பது மிகவும் தவறு.

மருந்துகளின் அளவை எடையை பொறுத்து தீர்மானிக்காமல், வயதை பொறுத்து தீர்மானிப்பது

குழந்தைகள் மருந்தின் வளர்சிதை மாற்றம், அவர்களின் உடல் எடையை பொறுத்தே நடக்கும், வயதை பொறுத்து அல்ல. இது பெற்றோர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். ஒரு ஆய்வில், அதிக எடையுள்ள குழந்தைகள் காஃபின் மற்றும் டெக்ரோமெதோர்ஃபோன் ஆகியவற்றின் வளர்சிதை மாற்றத்தைக் சீரான உடல் எடை கொண்ட குழந்தைகளை காட்டிலும் அதிகளவில் செய்கிறார்கள். எனவே, அவர்களுக்கு அதிக வீரியம் உள்ள மருந்துகளை கொடுக்க வேண்டும். உங்கள் மருத்துவரின் அறிவுரைப்படி மருந்துகளை கொடுப்பது நல்லது.

சரியான இடைவேளையில் மருந்துகளை கொடுக்காமல் இருப்பது

உங்கள் மருத்துவர் கூறிய அட்டவணை படி மருந்துகளை கொடுக்க வேண்டும், தொடர்ந்து மருந்துகளை கொடுத்துக்கொண்டே இருக்க கூடாது. அதே போல், ஒரு நாளைக்கு தேவையான மருந்துகளை விட அதிகளவு மருந்துகளையும் கொடுக்க கூடாது. ஏனெனில், இதனால் மருந்துகளின் வீரியம் அதிகமாகலாம்.

Story first published: Sunday, October 20, 2024, 22:58 [IST]
Desktop Bottom Promotion