Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சுற்றுப்புற மாசுக்கள் குழந்தையின் மூளை வளர்ச்சியை பாதிக்குமா?
இன்றைய சூழலில் சுற்றுப்புற மாசுக்கள் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாம் சுவாசிக்கும் காற்று கூட தற்போது நச்சாக மாறியுள்ளது. இந்த நச்சுக் காற்றை சுவாசிப்பதால் ஆஸ்துமா, நுரையீரல் நோய்கள், இதய நோய்கள் மற்றும் தோல் பிரச்சினைகள் என பல உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இந்த மாசுபட்ட காற்று உங்களின் நுரையீரலை மட்டுமல்ல குழந்தைகளின் மூளை வளர்ச்சியையும் பாதிக்கிறது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். காற்று மாசுபாடு குழந்தைகளுக்கு சுவாச பிரச்சினைகளையும் இதய நோய்களையும் உண்டாக்குகிறது. இது குழந்தைகளின் நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது.

மாசுபட்ட காற்றை நாம் சுவாசிக்கும் போது நம் உடலானது நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. இந்த நோயெதிர்ப்பு அமைப்பு தூண்டுதல் காரணமாக அவை மூளையில் கடுமையான நரம்பு அழற்சியை ஏற்படுத்துகிறது. இந்த நரம்பு அழற்சி மூளையின் பல பகுதிகளில் உள்ள திசுக்களில் சேதத்தை உண்டாக்குகிறது. இதனால் குழந்தையின் மூளை வளர்ச்சி பெரிய அளவில் பாதிப்படைகிறது. இதைப் பற்றி இக்கட்டுரையில் விரிவாக காண்போம்.
காற்று மாசுபாட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் மூளை பாதிப்பு
குழந்தைகள் அதிக அளவில் காற்று மாசுபாட்டால் பாதிப்படைகின்றனர். ஏனெனில் குழந்தைகளின் நுரையீரல் நச்சுக் காற்றை வடிகட்டும் அளவிற்கு வளர்ச்சி அடையவில்லை. அதே மாதிரி பெரியவர்களை விட குழந்தைகள் அதிகளவு காற்றை சுவாசிக்கிறார்கள். பெரியவர்களை விட குழந்தைகள் சுற்றுப்புற வெளியில் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். கைகள், முகம் மற்றும் வாய் ஆகியவற்றை குழந்தைகள் அடிக்கடி தொடுவதன் மூலம் சுற்றுப்புற மாசுக்கள் உள்ளேயும் எளிதாக சென்று விடுகின்றன.
காற்று மாசுபாடு மற்றும் நினைவாற்றல் குறைபாடு
மாசுபட்ட காற்றை சுவாசிக்கும் போது குழந்தைகளின் நினைவாற்றல் பாதிப்படைகிறது. இந்த நினைவாற்றல் குறைபாடு டிமென்ஷியா மற்றும் அல்சைமர் போன்ற நோய்களுக்கு வழி வகுக்கும். மூளையில் ஏற்படும் மாற்றங்களும் இதற்கு தூண்டுதலாக அமைகிறது.
காற்று மாசுபாட்டில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற சில டிப்ஸ்கள்:
* வெளியே செல்லும் போது உங்கள் குடும்பம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
* குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் நச்சுக் காற்றை சுவாசிப்பதை தடுக்க ஒவ்வொரு வீட்டிலும் காற்று சுத்திகரிப்பு கருவி இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
* தற்போது கையடக்க வடிவில் காற்று சுத்திகரிப்பு கருவிகள் கிடைக்கின்றன. அதையும் கைகளில் வைத்துக் கொள்ளலாம்.
* குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் இந்த காற்று மாசுபாட்டிற்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த காற்று மாசுபாடு பிறக்காத குழந்தையின் உடல்நிலையை பாதிக்க வாய்ப்புள்ளது.
* வெளியே செல்லும் போது மாஸ்க் அணியலாம் ஆனால் அது உங்களுக்கு 100% பாதுகாப்பை வழங்காது.
* காற்றில் இருந்து நச்சுக்களை உறிஞ்சும் தாவரங்களை வீட்டில் வளர்த்து வரலாம்.
* சுவாசிக்கும் காற்றை வடிகட்டக் கூடிய மாஸ்க்குகளை அணிந்து வரலாம்.
* காற்று மாசுபாடு இருக்கும் பகுதிகளுக்கு குழந்தைகளுடன் அடிக்கடி செல்ல வேண்டாம். இந்த வழிமுறைகள் மூலம் உங்கள் குழந்தைகளை காற்று மாசுபாட்டில் இருந்து பாதுகாக்கலாம்.



Click it and Unblock the Notifications