Just In
- 3 hrs ago
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
- 3 hrs ago
பெற்றோர்களே! உங்க குழந்தை காலையில் சீக்கிரம் எழுந்திருக்காம இருக்கா? அப்ப இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க!
- 4 hrs ago
தம்பதிகளே! உங்க உறவில் நம்பிக்கையையும் நெருக்கத்தையும் உருவாக்க நீங்க என்ன பண்ணணும் தெரியுமா?
- 4 hrs ago
ஆயுர்வேதத்தின் படி உங்க நகங்களில் அறிகுறிகள் இருந்தால் உங்கள் ஆரோக்கியம் ஆபத்தில் இருக்காம்... ஜாக்கிரதை!
Don't Miss
- Finance
LIC மட்டும் அல்ல, PNB-யும் அதானி குழுமத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு.. அச்சத்தில் முதலீட்டாளர்கள்!
- News
ஹாக்கி உலகக் கோப்பை 2023 : ஒடிசாவின் பொருளாதாரத்தில் ‘பாசிட்டிவ்’ தாக்கம் ஏற்படுத்தியது எப்படி?
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- Movies
பேயாட்டம் ஆடிய காஜல் அகர்வால்.. கருங்காப்பியம் டிரைலர்.. மிரண்டு போன விஜய்சேதுபதி!
- Automobiles
ஐஆர்சிடிசில பஸ் டிக்கெட் புக் பண்ணா இவ்வளவு லாபமா? எப்படி பண்ணணும் தெரியுமா?
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
யோனி கருத்தடை ஜெல் பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா? அதை எப்படி யூஸ் பண்ணணும் தெரியுமா?
Contraceptive Vaginal Gel: இன்றைய தலைமுறையினர் பலர் வாழ்க்கையில் செட்டில் ஆன பின்னர் குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கிறார்கள். இதற்காக குழந்தை பெற்றுக் கொள்ளாமல் பாதுகாப்பான உறவில் ஈடுபட பிறப்பு கட்டுப்பாட்டு முறைகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்தி வருகிறார்கள். அதில் பலரும் அறிந்தது காண்டம், பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரை, கருத்தடை ஊசி, கருத்தடை பேட்ச், ஐயூடி போன்றவை. இவையெல்லாம் கருத்தரிப்பதை தடுப்பதோடு மட்டுமின்றி, பாலியல் நோய்த்தொற்றுக்களின் அபாயத்தையும் குறைக்க உதவுகின்றன.
அந்த வகையில் இந்த பிறப்பு கட்டுப்பாட்டு முறைகளின் பட்டியலில் புதிதாக ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. அது தான் யோனி கருத்தடை ஜெல் (Vaginal Contraceptive Gel). இதற்கு எஃப்.டி.ஏ சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் இந்த யோனி கருத்தடை ஜெல்லை பயன்படுத்தும் முன், இவற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பலருக்கும் கருத்தடை ஜெல் என்றதும் மனதில் பலவிதமான கேள்விகள் மனதில் எழும். அந்த கேள்விகளுக்கான பதில் தான் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

யோனி கருத்தடை ஜெல் என்றால் என்ன?
யோனி கருத்தடை ஜெல்லில் எந்த ஒரு ஹார்மோனும் இல்லை. முக்கியமாக இதில் நிலையான விந்தணுக் கொல்லி nonoxynol-9 இல்லை. அதற்கு பதிலாக, இவற்றில் லாக்டிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் பொட்டாசியம் பிடார்ட்ரேட் போன்ற செயலில் உள்ள பொருட்கள் உள்ளது.

எப்படி வேலை செய்கிறது?
பொதுவாக பெண்ணின் யோனிப்பகுதி அமிலத்தன்மை கொண்டது. விந்தணுக்கள் அமிலத்தன்மை அதிகம் உள்ள சூழலில் செயல்படாது. இந்த ஜெல்லானது உடலுறவில் ஈடுபடும் போதும் யோனிப்பகுதியில் அமிலத்தன்மை அப்படியே இருக்க செய்து, விந்தணுக்கள் யோனியினுள் நீந்தி செல்ல முடியாமல் தடுக்கிறது. இதன் விளைவாக கருத்தரிக்கும் வாய்ப்பு குறைகிறது.

யோனி கருத்தடை ஜெல் எந்த அளவு சிறப்பாக வேலை செய்கிறது?
யோனி கருத்தடை ஜெல்லை 6 மாதங்களாக பயன்படுத்திய 18-35 வயது பெண்களிடம் எவ்வளவு நன்றாக வேலை செய்கிறது என்பதை ஆய்வு செய்ததில், அது 86% பயனுள்ளதாக இருந்தது கண்டறியப்பட்டது. 14% பெண்கள் கருத்தரித்துள்ளனர். மற்றொரு ஆய்வு, இந்த யோனி கருத்தடை ஜெல்லை சிறந்த முறையில் பயன்படுத்தும் போது இது சிறப்பாக செயல்படும் என தெரிவித்துள்ளது.

யோனி கருத்தடை ஜெல்லின் நன்மைகள்
* இந்த ஜெல்லை காண்டம் போலவே தேவைக்கேற்ப பயன்படுத்தலாம் மற்றும இது கர்ப்பமாவதைத் தடுக்கும் வகையில் செயல்படுகிறது.
* இது பயன்படுத்த எளிதானது, பாதுகாப்பானது மற்றும் அனைத்து பெண்களும் பயன்படுத்த ஏற்றது.
* இந்த ஜெல்லில் எந்த ஒரு ஹார்மோனும் இல்லை.
* இதை தேவையான போதும் மட்டும் பயன்படுத்தலாம் மற்றும் இது உடலில் இருந்து விரைவில் வெளியேறிவிடும்.
* நீங்கள் கர்ப்பமாக விரும்பினால், உறவின் போது இதைப் பயன்படுத்துவதை நிறுத்தினால் போதும்.

பக்கவிளைவுகள்
எந்த வகையான பிறப்பு கட்டுப்பாட்டு முறைகளும் நன்மை, தீமை என இரண்டையும் கொண்டிருக்கும். அந்த வகையில் யோனி கருத்தடை ஜெல்லை பயன்படுத்தும் போதும் பின்வரும் சில பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.
* கர்ப்பமாகாமல் பாதுகாப்பதில் அவ்வளவு சிறப்பானது அல்ல.
* இது பாலியல் நோய்த்தொற்றுக்களில் இருந்து பாதுகாப்பு தராது. ஆனால் காண்டம் செய்யும்.
* ஒவ்வொரு முறை உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்பும் பயன்படுத்த வேண்டும் மற்றும் இது நீண்ட நேரம் வேலை செய்யாது.
* இரண்டாவது முறையாக உடலுறவில் ஈடுபடுவதாக இருந்தால், மீண்டும் அதை பயன்படுத்த வேண்டும்.
* இது சிலருக்கு யோனியில் அரிப்பு அல்லது எரிச்சலை ஏற்படுத்தலாம்.
* உங்களுக்கு சிறுநீர் பாதை நோய்த்தொற்று அதிகம் ஏற்படுமானால், இந்த யோனி கருத்தடை ஜெல்லை பயன்படுத்தக்கூடாது.
* உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆண்குறியில் எரிச்சல், அரிப்பு அல்லது வலியை அனுபவிக்க வாய்ப்புள்ளது.

எப்படி பயன்படுத்துவது?
யோனி கருத்தடை ஜெல்லை பயன்படுத்த முடிவு செய்தால், முதலில் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
* ஒவ்வொரு முறை உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்பும் ஒரு டோஸ் பயன்படுத்த வேண்டும்.
* இந்த ஜெல்லை ஒருமுறை பயன்படுத்தினால், ஒரு மணிநேரம் மட்டுமே வேலை செய்யும்.
* இந்த ஜெல்லை பயன்படுத்திய பின் எரிச்சலுணர்வை அனுபவித்தால், இதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
* முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியது என்றால், யோனி கருத்தடை ஜெல் பாலியல் நோய்த்தொற்றுக்களான எச்.ஐ.வி-யில் இருந்து பாதுகாப்பு அளிக்காது.
குறிப்பு: யோனி கருத்தடை ஜெல்லை பயன்படுத்துவதாக இருந்தால், அதை மருத்துவரின் ஆலோசனையின் பேரில், அவர் பரிந்துரைக்கும் ஜெல்லை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.