For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வேண்டா வெறுப்பாக உறவில் ஈடுபடுகிறவர்களை எப்படி கண்டுபிடிப்பது? (ஆண்- பெண் இருவருக்கும்)

விருப்பமில்லாத உறவில் இருப்பதால் கூட சில பிரச்சினைகள் வரும் என்கிறார்கள் டாக்டர்கள், அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள் பற்றி இந்த கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.

|

உறவில் நம்பிக்கையும் அன்பும் நிலைத்திருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் உறவில் சந்தேகம் எழுகிறது. இதனால் அந்த உறவும் விருப்பமில்லாமல் போகிறது.

Compulsive Disorder

இதனால் எழும் மன அழுத்தம் கவலைகளயயும் நோய்களையும் ஏற்படுத்துகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். உறவில் ஏற்பட்ட அதிருப்தி அப்படியே காலப்போக்கில் எரிச்சலாகவும், ஆங்காரம் கோபம் கொண்டவர்களாக மாற்றி விடுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ROCD என்றால் என்ன?

ROCD என்றால் என்ன?

இது ஒரு ரிலேஸன்ஷிப் அப்செசிவ் டிஸ் ஆர்டர். அப்செசிவ் டிஸ் ஆர்டர் என்றால் இது ஒரு மனநல சுகாதார நிலை. இவர்கள் எதையும் கட்டாயம் செய்து விட வேண்டும் என்ற எண்ணோட்டத்திலயே இருப்பார்கள். அடிக்கடி துப்புரவு செய்வது அடிக்கடி உடைமைகளை சரி செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். எதாவது ஒன்று நினைத்தால் உடனே செய்து விட வேண்டும் என்று நினைப்பார்கள்.

இந்த பிரச்சினை இருப்பவர்கள் உறவில் இருக்கும் போது இவர்களின் கட்டாய நடவடிக்கைகளால் பிரச்சனைகள் எழலாம். இதனால் உறவில் ரிலேஸன்ஷிப் அப்செசிவ் டிஸ் ஆர்டர் (ROCD) உண்டாகிறது. இந்த டிஸ் ஆர்டரால் பாதிக்கப்பட்டவருக்கு சந்தேகங்கள் எழ ஆரம்பிக்கின்றன. சில சமயங்களில் சந்தேகங்கள் வெறி பிடித்த அளவில் கூட மாறுகின்றன. தன்னை தன் துணை விரும்புகிறாரா இல்லையா போன்ற கேள்விகள் அவர்களுக்குள் எழத் தொடங்கி விடுகிறது.

MOST READ: ராஜ குடும்பத்தில் உள்ள விநோதமான காமெடியான உணவுப் பழக்கம்... அவங்க சமையல்காரரே சொன்னது...

மருத்துவர் கூற்று

மருத்துவர் கூற்று

வட கரோலினா பல்கலைக்கழகத்தின் மருத்துவ உளவியலாளரும் உளவியல் பேராசிரியருமான ஜொனாதன் கூறுகையில் "11:44 AM 8/22/2019ஓ.சி.டி உள்ளவர்கள் தங்களுக்கு மிக முக்கியமான விஷயங்களைப் பற்றி வெறித்தனமான எண்ணங்களைக் கொண்டுள்ளனர். இதனால் உறவில் அன்றாட சந்தேகங்கள் அதிகரிக்கிறது, நிச்சயமற்ற தன்மை, சகிப்புத்தன்மை இல்லாமல் போய் விடுகிறது.

மன அழுத்தம் மற்றும் மன சோர்வு

மன அழுத்தம் மற்றும் மன சோர்வு

அதிக அளவு மன அழுத்தம் கொண்டவர்கள் தங்கள் துணையை கவனிக்காமல் விட நேரிடும். அன்பு பாராட்டுவதில் சிரமம் உண்டாகும். உறவை பற்றி சிந்திப்பது கடினமாக இருக்கும். தங்கள் துணையை இழக்கவும் முடியாமல் உறவை நல்வழியில் செலுத்தவும் முடியாமல் பிரச்சனை ஏற்படலாம்.

குழந்தை பருவம் மற்றும் கெட்ட அனுபவங்கள்

குழந்தை பருவம் மற்றும் கெட்ட அனுபவங்கள்

கெட்ட அனுபவங்கள் கூட இந்த ஓ. சி. டி பிரச்சனையை உண்டாக்கும். துணையை அடிக்கடி சோதனை செய்வது. தன்னுடைய துணை பாதுகாப்பாகத்தான் இருக்கிறாரா என்று நினைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.இதற்கு காரணம் டீன் ஏஜ் அல்லது குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட கெட்ட அல்லது தீங்கு விளைவித்த நபர்கள் குறித்த கவலையா இருக்கலாம். தங்கள் துணை பாதுகாப்பாக இருக்கிறாரா என்பதை மீண்டும் மீண்டும் உறுதி செய்வார்கள். மொபைல் மூலம் தொடர்பு கொண்டு அடிக்கடி இதை உறுதி செய்து கொள்வார்கள்.

ஃபெர்பெக்ஷன்

ஃபெர்பெக்ஷன்

ஃபெர்பெக்ஷன் ஒரு நல்ல விஷயம் தான். ஆனால் அது அதிகமாகும் போது இந்த மாதிரி பிரச்சனை ஏற்படும். எப்பொழுதும் ஃபெர்பெக்ஷன் ஆக இருக்க வேண்டும் என நினைப்பது கூட ஒரு பிரச்சினை தான்.

MOST READ: பாலியல் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு ஆளான உன்னாவ்

கட்டுப்படுத்துதல்

கட்டுப்படுத்துதல்

சில பேருக்கு ஓ. சி. டி ஆரம்ப நிலையில் கட்டுப்படுத்தும் மனப் போக்கு வந்து விடும்.இதனால் உறவில் தங்கள் துணையை கட்டுப்படுத்துவது, அவர்களின் சிந்தனைகளை கட்டுப்படுத்துவது போன்ற செயலில் ஈடுபட்டு உறவை சீர்குலைத்து கொள்வார்கள்.

வகைகள்

வகைகள்

இரண்டு விதமான ROCD வகைகள் உள்ளன

துணையை எதிர்நோக்குவது

உதாரணமாக 35 வயதான ஷாம் ரியா என்ற பெண்ணை சந்தோஷமாக திருமணம் செய்து கொள்கிறார். ஷாம் தன்னுடைய மனைவி அழகானவள்,அறிவானவள் என்று நினைக்கிறார். ஆனால் அப்படி நினைப்பதோடு நிறுத்தாமல் ஒவ்வொரு பெண்களையும் பார்க்கும் போது தன்னுடைய மனைவியை அவர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் எண்ணம் எழுகிறது. இவள் அவர்களை விட அழகானவளா என்ற எண்ணம்.சில நேரங்களில் இந்த எண்ணம் அந்த பெண் மாதிரி டிரஸ் பண்ணு மேக்கப் பண்ணு என்று ஆரம்பித்து தன் துணையின் சுதந்திரத்தை பறிக்க ஆரம்பித்து விடும்.இந்த மாதிரி ROCD பிரச்சனை இருப்பவர்கள் அழகில், அறிவில் ஒப்பீட்டில் ஈடுபடுகிறார்கள்.

உறவை மையமாக ROCD

உறவை மையமாக ROCD

உதாரணமாக ரேச்சல்க்கு ஜாக் என்ற ஒரு அழகான பையன் கிடக்கிறான். இருவரும் நல்ல அன்பாக பழகுகிறார்கள். அவள் நினைக்கிறார்கள் நாங்கள் இருவரும் ஒரு நல்ல துணையாக இருப்போம். ஒரு வருட காதலுக்கு பிறகு நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ராய் நினைக்கிறான். ஆனால் ரேச்சல் தங்களுடைய உறவு 100% சரியாக இருக்குமா, ஏற்கனவே சண்டை வந்தது, வாக்கு வாதம் இவற்றையெல்லாம் மறுபடியும் மறுபடியும் அலசி அலசி பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இப்படி ROCD பிரச்சனை இருப்பவர்கள் ஒரு முழுமையான 100% ரிலேஸன்ஷிப்பை தேடிக் கொண்டே இருப்பார்கள். அதை நினைத்து கவலை கொண்டே இருப்பார்கள்.

அறிகுறிகள்

அறிகுறிகள்

சந்தேகங்கள்

ROCD பிரச்சனை இருப்பவர்களுக்கு அடிக்கடி சந்தேகங்கள் எழும். அவர்களுடைய துணை அவர்களுக்கு சரியானவரா இல்லையா என்று அடிக்கடி யோசிப்பார்கள். தங்கள் துணையின் ஒவ்வொரு செயலையும் சந்தேகிக்க கூடும்.எந்த நேரத்திலும் சந்தேகக் கண்களோடே திரிவார்கள்.

MOST READ: பிரெயின் டூமருக்கு புதிய மருந்து... இனி கவலையே பட வேண்டாம்...

சோதனை செய்தல்

சோதனை செய்தல்

ROCD பிரச்சனை இருப்பவர்கள் அடிக்கடி தங்கள் துணையை சோதனை செய்வார்கள். தங்கள் துணை உண்மை உள்ளவரா இல்லையா என்பதை சோதிப்பார்கள். தங்கள் துணையை மட்டுமல்லாமல் துணையின் நண்பர்களைக் கூட சரிபார்ப்பார்கள். தங்கள் துணை எங்கே இருக்கிறார் என்ன செய்து கொண்டு இருக்கிறார் இது போன்ற விவரங்களை சேகரிப்பார்கள். துணை எங்கு இருக்கிறார் என்று ஒவ்வொரு விஷயத்தையும் நண்பர்களிடமோ யாரிடமோ கேட்டு தெரிய முற்படுவார்கள். மற்றவர்களின் உறவை விட அவர்களின் உறவு சிறந்ததா இல்லையா என்பதையும் அடிக்கடி சோதித்து கொள்வார்கள்.

பயம்

பயம்

ROCD ஆல் பாதிக்கப்பட்டவர் தங்கள் துணைக்கு தாம் சரியானவரா இல்லையா என்பது குறித்து பயம் கொள்வார்கள். தங்கள் துணைக்கு சிறந்தவராக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு காரியத்தையும் செய்வார்கள். உதாரணமாக தெருவில் நடந்து செல்லும் போது தன் கணவர் வேறொரு பெண்ணை பார்த்தால் அந்த பெண்ணை போன்று மாற நிறைய மெனக்கெடல்களையும் பணத்தையும் செலவழிப்பார்கள்.

அப்ரமோவிட்ஸ் என்ற மருத்துவர் இது குறித்து கூறுகையில் " ROCD இருப்பவர்கள் புத்தியுடன் சிந்திப்பதில்லை.தேவையற்ற எண்ணங்களும் சந்தேகங்களும் அவரை இப்படி செய்ய வைக்கிறது. தன்னுடைய துணை இன்னமும் அந்த பெண்ணை பற்றி தான் நினைத்துக் கொண்டு இருக்கிறார் என்ற எண்ணத்தை அவர்களுக்கு உண்டு பண்ணுகிறது." என்கிறார் அவர்.

பொதுவான நிர்பந்தங்கள்

சரிபார்த்தல்

சரிபார்த்தல்

ROCD ஆல் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் மீண்டும் தங்கள் துணையுடன் சரிபார்த்தலை ஏற்படுத்துகிறார்கள்.தங்கள் காதல் பற்றி அடிக்கடி அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்று முனைகிறார்கள்.

ஒப்பீடு செய்தல்

ஒப்பீடு செய்தல்

ROCD ஆல் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உறவையும் துணை யையும் அடிக்கடி ஒப்பீடு செய்து பார்த்துக் கொள்வார்கள். தங்கள் துணையை கற்பனையான கதாபாத்திரங்களுடன், முன்னால் துணையுடன் ஒப்பீடு செய்வது போன்ற செயலில் ஈடுபடுவார்கள். தங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருந்தால் கூட இதைவிட சிறந்த துணையை கண்டறிந்து இருக்கலாம் என்று நினைப்பார்கள்.

கண்காணித்தல்

கண்காணித்தல்

ROCD ஆல் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் எண்ணங்களை கவனிக்க முழு நேரத்தையும் கூட செலவிடுவார்கள். அவர்கள் உணர்ச்சிவசப்படுகிறார்களா அல்லது துணையை நினைத்து பார்க்கிறார்களா என்பதை அடிக்கடி சோதித்து கொள்வார்கள்.

MOST READ: இந்த பழத்தோட பேரு காமு காமு... எந்த பழத்துலயும் இல்லாத ஒரு சத்து இதுல இருக்கு... என்ன தெரியுமா?

சிகிச்சைகள்

சிகிச்சைகள்

இந்த ROCD பிரச்சனையை எளிதாக சிகிச்சையின் மூலம் சரி செய்து கொள்ளலாம். உங்களுடைய நம்பிக்கையின் மூலம் முதலில் பயத்தை விட வேண்டும். "அறிவாற்றல் சார்ந்த தெரபி" இதற்கு பயனளிக்கும் என்று அப்ரமோவிட்ஸ் கூறுகிறார். இதன் மூலம் உறவில் ஏற்படும் தேவையற்ற சந்தேகங்கள், சிந்தனைகளை சரி செய்து விடலாம். இந்த சிகிச்சையின் போது பாதிக்கப்பட்டவருக்கு சூழ்நிலைகள், படங்கள், பொருட்கள் மூலம் சிந்தனைகளை தூண்டி அதனால் எழும் கவலைகளை, சந்தேகங்களை எப்படி கட்டுப்படுத்துவது எப்படி எதிர்கொள்வது போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Are You Having Relationship Obsessive Compulsive Disorder? Know Its Types, Causes And Treatment

Every person in a relationship has doubts and concerns about his/her relationship at a point of time. These doubts are just ephemeral thoughts and not a serious one. However, there are people for whom these thoughts can be detrimental and irrational.
Story first published: Thursday, August 22, 2019, 14:06 [IST]
Desktop Bottom Promotion