Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
கருத்தடை மாத்திரைகள் எடுத்தாலும் கர்ப்பமாக வாய்ப்பு உள்ளதா?
பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரையின் மூலம் 99% கர்ப்பம் ஆவதை தடுக்க முடியும். இருப்பினும் சில சமயங்களில் இது தோல்வியை சந்திக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
பொதுவாக கர்ப்பமாவதை தடுக்க ஏகப்பட்ட முறைகள் இருந்தாலும் பெரும்பாலான பெண்கள் பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரைகளையே எடுக்கின்றனர். பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரையின் மூலம் 99% கர்ப்பம் ஆவதை தடுக்க முடியும். இருப்பினும் சில சமயங்களில் இது தோல்வியை சந்திக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். நீங்கள் பிறப்புக் கட்டுப்பாட்டில் இருந்தால் கூட சில காரணிகள் கர்ப்பம் தரிக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.

இந்த கருத்தடை மருந்துகள், புரோஜெஸ்டிரோன் மாத்திரைகளை எவ்வாறு தவறாமல் எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதை பொறுத்து உங்கள் வெற்றி விகிதம் உள்ளது. இதனால் 9 சதவீத தோல்வியை நீங்கள் சந்திக்க நேரிடலாம்.
பல பெண்கள் பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளை எடுத்து வரும் போது தவறுதலாக ஒரு டோஸை இழக்கிறார்கள் அல்லது மறந்து விடுகிறார்கள். இது தற்செயலான கர்ப்பத்திற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள் தோல்வியடைய என்ன காரணம்?
* ஒவ்வொரு நாளும் நீங்கள் எடுத்துக் கொள்ளும் மாத்திரையின் அளவை சரியாக உட்கொள்ளா விட்டால் நீங்கள் கர்ப்பத்திற்கான வாய்ப்பை அதிகரிக்கிறீர்கள் என்று அர்த்தம்.
* இந்த பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரைகள் உடலில் ஹார்மோன் அளவை நிலையாக பராமரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே நீங்கள் ஒரு மருந்தை தவற விட்டாலோ உங்க ஹார்மோன் அளவு குறைய ஆரம்பித்து விடும். இதனால் மாதவிடாய் சுழற்சியை பொறுத்து அண்ட விடுப்பு ஏற்பட்டு கர்ப்பம் தரிக்கும் சூழலை உருவாக்கலாம்.

இதர காரணிகள்:
* ஆல்கஹால் உட்கொள்வது பிறப்புக் கட்டுப்பாட்டு தோல்வியை ஏற்படுத்தும்.
* உங்கள் மாத்திரையை எடுத்துக் கொண்ட பிறகு விரைவில் வாந்தி எடுத்து விட்டால் பலன் அளிக்காது. இதனால் ஹார்மோன் அளவு குறைந்து அண்ட விடுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
* பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரையுடன் மற்ற மாத்திரைகள் எடுத்துக் கொள்வது மாத்திரையின் செயல்திறனை பாதிக்க வாய்ப்புள்ளது.

பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரையின் தோல்வியை எவ்வாறு தடுப்பது?
சரியான நேரம்
* பிறப்புக் கட்டுப்பாட்டில் இருக்கும் போது மாத்திரையை ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் உட்கொள்ளுங்கள். மறக்காமல் இருக்க உங்க மொபைலில் அலாரம் வைத்துக் கொள்ளுங்கள். மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு பிறகு மாத்திரை எடுத்துக் கொள்ளுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் மறப்பதை தவிர்க்க முடியும்.
* புரோஜெஸ்டிரோன் மாத்திரைகள் என்றால் தவறாமல் எடுக்க வேண்டும். நீங்கள் ஒரு டோஸை தவற விட்டால் கூட அண்ட விடுப்பு ஏற்பட்டு கர்ப்பம் தரிக்க வாய்ப்பு உள்ளது.
* ஒரு வேளை ஒரு டோஸ் தவற விட்டால் அந்த நாட்களில் உடலுறவு கொள்ளும் போது காண்டம் அல்லது உடலுறவு கொள்வதை தவிருங்கள்.

போலி மருந்து மாத்திரைகள்
போலி மருந்து மாத்திரைகளையும் இதனுடன் எடுப்பது உங்க வழக்கத்தை மறக்காமல் இருக்க உதவி செய்யும்.

மருந்துகளை கலக்க வேண்டாம்
சில மருந்து மாத்திரைகள் பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரையுடன் வினைபுரிய நேரிடலாம். எனவே நீங்கள் மற்ற மருந்து எடுத்துக் கொள்ள நேர்ந்தால் அந்த சமயங்களில் மட்டும் உடலுறவின் போது காண்டம் பயன்பாடு வேண்டுமா என்று உங்க மருத்துவரிடம் ஆலோசனை செய்து கொள்ளுங்கள்.

செயின்ட் ஜான்ஸ் வோர்ட் மூலிகை வேண்டாம்
செயின்ட் ஜான்ஸ் வோர்ட் கல்லீரல் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கக்கூடிய ஒரு பிரபலமான மூலிகை சப்ளிமெண்ட் ஆகும். பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளையும் இந்த மூலிகை மருந்தையும் ஒன்றாக எடுத்துக் கொண்டால் இரத்த போக்கு அல்லது திட்டமிடப்படாத கர்ப்பத்தை அனுபவிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்த மூலிகை மருந்தை எடுத்துக் கொள்ளும் போது உடலுறவின் போது காண்டம் பயன்படுத்துவது நல்லது.

கர்ப்பமாக இருந்தால் என்ன செய்வது?
பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரை எடுத்தும் நீங்கள் கர்ப்பம் தரித்து விட்டால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். ஒரு வேளை நீங்கள் கர்ப்பத்தை தக்க வைத்துக் கொள்ள விரும்பினால் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். அப்போது மருத்துவர் உங்களை பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரையில் இருந்து வெளியேறி 400 மைக்ரோகிராம் போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் மாத்திரைகளைப் பரிந்துரைப்பார்.

கர்ப்பத்தை தவிர்க்க விரும்பினால் என்ன செய்வது?
ஒரு வேளை நீங்கள் கருவை கலைக்க விரும்பினால் மருத்துவரின் உதவியுடன் அதற்கான விஷயங்களை உடனே செய்து விடுங்கள்.

பிறப்புக் கட்டுப்பாடு உங்கள் குழந்தைக்கு தீங்கு விளைவிக்குமா?
பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரைகளை உட்கொள்வது உங்கள் வயிற்றில் வளரும் குழந்தையை பாதிக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆரம்பகால கர்ப்ப காலத்தில் பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள் எடை குறைவான குழந்தை பிறப்பு, சிறுநீர் பாதையில் ஏற்படும் அசெளகரியங்கள் மற்றும் முன்கூட்டிய பிரசவம் ஆகியவற்றுடன் சில தொடர்பு இருப்பதை காட்டியதாக ஆராய்ச்சிகள் கூறுகிறது. ஆனால் மருத்துவ ரீதியாக பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரையின் விளைவு குறைவே என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் நீங்கள் கர்ப்பம் தரித்து விட்டால் உடனே மாத்திரை உட்கொள்வதை நிறுத்தி விட வேண்டும். இல்லையென்றால் உங்க குழந்தை குறைபாடுகளுடன் பிறக்க அதிக வாய்ப்பு உள்ளது.

முடிவு
பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளை சரியாக எடுத்துக் கொண்டு வந்தால் கர்ப்பத்தை தடுப்பதற்கும், முகப்பரு மற்றும் வலி மிகுந்த மாதவிடாயை குறைக்கவும் உதவுகிறது. அதே மாதிரி அதை தவறாமல் பரிந்துரைக்கப்பட்ட அளவில் எடுத்துக் கொள்வது அவசியம்.
எனவே மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அதன்படி பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரைகளை எடுத்துக் கொண்டு செயல்படுங்கள்.



Click it and Unblock the Notifications