Latest Updates
-
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும்
அவசரப்பட்டு 'கசமுசா' பண்ணிடீங்களா? பீரியட் சீக்கிரம் ஆகணுமா? இத செய்யுங்க...
நல்ல நாட்கள் அன்று பீரியட் ஏற்படாமல் இருக்க பெண்கள் தங்களின் பீரியட்டை விரைவில் தூண்டும் வழிகளைத் தேடுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இக்கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கொடிய கொரோனா வைரஸ் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் அதிவேகத்தில் பரவி வருகிறது. நாளுக்கு நாள் ஏராளமான மக்கள் இந்த வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த வைரஸ் பரவலைத் தடுக்க இந்தியா மட்டுமின்றி உலகின் பல பகுதிகளில் ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் ஏராளமானோர் வீட்டில் இருந்தபடியே தங்களின் அலுவலக வேலை செய்து வருகின்றனர்.

தற்போது கொரோனா வைரஸ் பரவுவதால், அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை கருத்தரிப்பதை தள்ளிப் போடுவதே சிறந்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இருப்பினும் தற்போது தம்பதிகள் பலர் 24 மணிநேரமும் ஒன்றாக நேரத்தை கழிப்பதால், பலரும் தங்களை அறியாமல் பாதுகாப்பற்ற உறவில் ஈடுபட நேரிடும். கருத்தரிக்க விருப்பமில்லாததால், எங்கு மாதவிடாய் சுழற்சி எங்கு தள்ளிப் போய் கருத்தரித்து விடுமோ என்று சில பெண்கள் அச்சம் கொண்டு, விரைவில் மாதவிடாய் சுழற்சியைத் தூண்டிவிடும் இயற்கை வழிகள் ஏதேனும் உள்ளதா என்று யோசிப்பார்கள்.
இப்படியொரு புறம் பெண்கள் இருக்க, மறுபுறம் நல்ல நாட்கள் அன்று பீரியட் ஏற்படாமல் இருக்க தங்களின் பீரியட்டை விரைவில் தூண்டும் வழிகளைத் தேடுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இக்கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இக்கட்டுரையில் பீரியட் என்னும் மாதவிடாய் சுழற்சியை சீக்கிரம் தூண்டுவது எப்படி என்பதற்கான சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

வெப்பம்
பெரும்பாலான பெண்கள் மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி மற்றும் பிடிப்புக்களைப் போக்க ஹாட் வாட்டர் பேக்குகளைப் பயன்படுத்துவார்கள். ஆனால் இதைக் கொண்டே மாதவிடாய் சுழற்சியை வேகமாக தூண்டிவிடலாம் என்பது தெரியுமா? எப்படியெனில் அடிவயிற்றுப் பகுதியைச் சுற்றி வெப்பமூட்டும் போது, அவ்விடத்தில் தசைகள் ரிலாக்ஸ் அடைந்து, இரத்த ஓட்டம் மேம்படும். இந்த மேம்பட்ட இரத்த ஓட்டம் கருப்பையின் புறணி விரைவாக இரத்தத்தை வெளியேற்ற உதவி புரிந்து, விரைவில் பீரியட் ஏற்படச் செய்கிறது.

உடற்பயிற்சி
உங்களுக்கு சீக்கிரமே பீரியட் ஆக வேண்டும் என்று விரும்பினால், உடற்பயிற்சி செய்ய ஆரம்பியுங்கள். சோம்பேறியாக இருப்பதால் எதுவும் நடக்காது. குறிப்பாக அடிவயிற்றிற்கான உடற்பயிற்சியை தினமும் செய்யுங்கள். இதனால் அடிவயிற்றுப் பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அசௌகரியங்கள் தடுக்கப்படும். ஆகவே சீக்கிரம் பீரியட் ஆக வேண்டுமானால், தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.

பப்பாளி
பப்பாளி பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவை அதிகரிக்கும். அத்தகைய பப்பாளியை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜூஸ், மில்க் ஷேக் போன்று தயாரித்தும் குடிக்கலாம். சில நாட்கள் தொடர்ந்து இரண்டு பப்பாளியை இரண்டு சாப்பிடுவதன் மூலம், ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகரித்து, பீரியட் விரைவில் தூண்டப்படும்.

மூலிகைகள்
சில மூலிகைகள் பெண்கள் மாதந்தோறும் சந்திக்கும் மாதவிடாய் சுழற்சியை வேகமாக்கும். அந்த மூலிகைகளை அன்றாடம் உட்கொண்டு வந்தாலே விரைவில் பீரியட் ஆகிவிடும். இப்போது அந்த மூலிகைகள் எவையென்று காண்போம்.

மஞ்சள்
மஞ்சள் கலந்த நீரை தினமும் 2-3 முறை குடிக்க வேண்டும். அதற்கு ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளை ஒரு டம்ளர் கொதிக்கும் நீரில் போட்டு கலந்து குடிக்க வேண்டும்.

வெந்தயம் மற்றும் மல்லி விதைகள்
ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி, அதில் சிறிது வெந்தய விதைகள் மற்றும் மல்லி விதைகளை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் அந்த நீரை வடிகட்டி, தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், பீரியட் சீக்கிரம் ஆகும்.

சோம்பு
சோம்பு மாதவிடாய் சுழற்சியை வேகமாக்கும் என்பது தெரியுமா? அதற்கு சோம்பை காலையில் எழுந்ததும் வாயில் போட்டு மென்று சாப்பிடலாம் அல்லது சோம்பை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, அந்த நீரை வடிகட்டியும் குடிக்கலாம்.

பார்ஸ்லி
பீரியட் சீக்கிரம் ஆகவேண்டுமென்று நினைப்பவர்கள் பார்ஸ்லி நீரைக் குடிக்கலாம். பார்ஸ்லியில் உள்ள குறிப்பிட்ட உட்பொருட்கள், கருப்பையை சுருங்கச் செய்து, விரைவில் மாதவிடாய் சுழற்சி நடைபெற செய்யும். அதற்கு உணவு உண்பதற்கு முன் ஒரு டம்ளர் பார்ஸ்லி போட்டு கொதிக்க வைத்த நீரைக் குடிக்க வேண்டும்.

சீரகம் மற்றும் ஓமம் விதைகள்
இந்த இரண்டு விதைகளுமே வயிற்றிற்கு நல்லது. குறிப்பாக இது வயிற்று வலி மற்றும் வயிற்று பிடிப்புக்களுக்கு நிவாரணம் அளிக்கும் சிறப்பான பொருட்களாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இந்த பொருட்கள் பீரியட்டை தூண்டுவதோடு, விரைவில் ஏற்படவும் செய்யும்.

மேலும் சில...
மேலே கொடுக்கப்பட்டுள்ள சில இயற்கை வழிகள் மட்டுமின்றி, சில உணவுகளை உட்கொள்வதன் மூலமும் வேகமாக மாதவிடாய் சுழற்சி நடைபெறும். அந்த உணவுகள் தான் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து வேகமாக பீரியட் ஆகவேண்டுமெனில் உங்கள் டயட்டில் உடனே அந்த உணவுப் பொருட்களை சேர்த்து வாருங்கள்.

பேரிச்சம் பழம்
பேரிச்சம் பழம் உடலில் வெப்பத்தை உருவாக்கும் உணவுப் பொருட்களுள் ஒன்று. உங்களுக்கு பீரியட் ஆக வேண்டிய நாளில் இருந்து முன்னதாகவே ஆக நினைத்தால், தினமும் 4-5 பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிடுங்கள்.

வெல்லம்
வெல்லம் கூட உடலின் வெப்பத்தை அதிகரிக்கும். அந்த வெல்லத்தை எள்ளு விதைகள், ஓமம் விதைகள் மற்றும் இஞ்சி ஆகியவற்றுடன் சேர்த்து கலந்து உட்கொள்ள வேண்டும். இந்த கலவையை தினமும் உட்கொண்டு வந்தால், சீக்கிரம் பீரியட் ஆகிவிடும்.

வைட்டமின் சி
வைட்டமின் சி அதிகம் நிறைந்த உணவுகள், பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவை அதிகரிக்கக்கூடியவை. இந்த வகை உணவுகளை பெண்கள் அன்றாடம் உட்கொண்டு வந்தால், சீக்கிரம் மாதவிடாய் சுழற்சி ஆரம்பமாகிவிடும்.



Click it and Unblock the Notifications