Just In
- 3 hrs ago
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- 4 hrs ago
நீங்க விரும்பி சாப்பிடும் இந்த பொருட்கள் உங்களுக்கு சீக்கிரம் வழுக்கை வர வைக்குமாம்... ஜாக்கிரதை!
- 6 hrs ago
உங்க உடலில் இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் அளவுக்கதிகமா கொலஸ்ட்ரால் இருக்குனு அர்த்தமாம்... உஷார்!
- 7 hrs ago
செட்டிநாடு தேங்காய் குழம்பு
Don't Miss
- Finance
ஜூலை 1 முதல் எதற்கெல்லாம் தடை.. உஷாரா இருங்க.. தடை மீறினால் அபராதம்?
- News
டெல்லி அடகில் அதிமுக! லேடியா? மோடியா? எனக்கேட்ட ஜெயலலிதாவை மறந்துட்டாங்க! கி வீரமணி விளாசல்
- Sports
ஃபார்ம்க்கு திரும்பினார் கிரிக்கெட்டின் ராஜா.. பயிற்சி ஆட்டத்தில் கோலி கிளாஸ் பேட்டிங்.. பும்ரா ஷாக்
- Movies
"விஜய்க்கு நடிப்புதான் மூச்சு".. அவரைப்போல ஒரு நடிகரை பார்க்கமுடியாது.. புகழ்ந்த தயாரிப்பாளர் !
- Automobiles
மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனையில் ஷங்கர் படம்போல் பிரம்மாண்ட வளர்ச்சி! உண்மையான காரணம் என்னனு தெரியுமா?
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Technology
10 மாதம் ஆற்றில் கிடந்த ஐபோன்: உரிமையாளரை தேடிச் சென்ற அதிசியம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
விந்தணுக்கள் பற்றிய மோசமான கட்டுக்கதைகள்...இவற்றால்கூட ஆண்களுக்கு குழந்தை பிறக்காமல் போகலாமாம்...!
கடந்த 3 முதல் 4 தசாப்தங்களாக, ஆண்களின் சராசரி விந்தணு எண்ணிக்கை மற்றும் விந்தணுக்களின் தரம், உலக அளவில் அபாயகரமாக குறைந்துள்ளது. 20 ஆண்களில் ஒருவர், தற்போது, வெவ்வேறு கருவுறுதல் சவால்களை எதிர்கொள்கிறார்கள். ஒரு தம்பதியினர் கருத்தரிக்க முயலும்போதும், சிரமப்படும்போதும், அந்தப் பிரச்சனைகள் பெண்ணிடமிருந்து வரவேண்டும் என்று கருதுவது வழக்கம். ஆனால் பிரச்சினை ஆண்களிடமும் இருக்கலாம் என்பதை பெரும்பாலும் யாரும் ஒப்புக்கொள்வதில்லை.
ஆண்களின் கருத்தரிக்கும் ஆற்றல் கடந்த ஆண்டுகளில் வெகுவாக குறைந்ததற்கு பல காரணங்கள் உள்ளது. இருப்பினும், ஆண்களின் கருத்தரிக்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளதால் அதனைப் பற்றிய பல கட்டுக்கதைகள் பரவத் தொடங்கியுள்ளன. இது பெரும்பாலான ஆண்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பதிவில் ஆண்களின் கருத்தரிக்கும் திறன் பற்றிய பொதுவான கட்டுக்கதைகள் என்ன அதனைப்பற்றிய உண்மைகள் என்னவென்று பார்க்கலாம்.

புகைபிடித்தல் பெண்ணின் கருவுறுதல் திறனை மட்டுமே பாதிக்கிறது
இது முற்றிலும் தவறான கருத்தாகும். விந்தணுவின் இயக்கத்தை புகைபிடிப்பது எப்படி பாதிக்கிறது என்பது பற்றிய பல ஆய்வுகள் உள்ளன. விந்தணு திரட்டுதல் (ஒன்றாக ஒட்டிக்கொண்டது) அல்லது லுகோசைட்டோஸ்பெர்மியா (விந்துவில் உள்ள வெள்ளை இரத்த அணுக்கள்) போன்ற பிற நுட்பமான விளைவுகள் புகைபிடிப்புடன் தொடர்புடையவை. புகைபிடிப்பதை நிறுத்துவது உங்கள் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, உங்கள் கருவுறுதலுக்கும் ஒரு நல்ல யோசனையாகும்.

ஆணின் வயது முக்கியமல்ல
இது தவறான கருத்து. ண்களும் பெண்களும் பருவமடைந்த பிறகு கருவுறக்கூடியவர்களாக வடிவமைக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கு முப்பது வயது முதல் நாற்பது வயது வரை கருவுறுதலில் மிக விரைவான சரிவு இருந்தாலும், ஆண்களுக்கும் விந்தணுவின் தரம் குறைகிறது. விந்தணு வங்கிகள் பொதுவாக 44 வயதிற்கு மேற்பட்ட விந்தணுக்களை தானம் செய்பவர்களை ஏற்றுக் கொள்வதில்லை. ஆம், சில ஆண்கள் பிற்காலத்தில் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பார்கள், ஆனால் அவர்களின் கருவுறுதல் முந்தைய ஆண்டுகளில் இருந்ததைப் போல் இன்னும் சிறப்பாக இருக்காது. அதன்படி ஆண்களின் கருவுறுதல் திறனும் வயத்தைப் பொறுத்துக் குறையும்.

ஆணுறுப்பு பகுதியை குளிர்ச்சியாக வைத்திருக்க பாக்ஸர் அணிய வேண்டும்
இது ஓரளவிற்கு உண்மை. விந்தணுக்களை உற்பத்தி செய்யும் செல்களை மைய உடல் வெப்பநிலையை விட இரண்டு டிகிரி குளிர்ச்சியாக வைத்திருக்கின்றன மற்றும் நீண்ட காலத்திற்கு விந்தணுக்கள் வெப்பமடைவது விந்தணு உற்பத்தியை பாதிக்கலாம். ஆனால் உள்ளாடைகள் அதனை பாதிக்கும் என்று நம்பத்தகுந்த ஆய்வுகள் எதுவும் இல்லை. ஆண்கள் தங்களுக்கு வசதியாக இருப்பதை அணியுமாறு நான் கூறுகிறேன். இருப்பினும், நீண்ட நேரம் வெப்பமான சூழலில் இருப்பது நல்ல யோசனையாக இருக்காது. இதேபோல், உங்கள் மடியில் மடிக்கணினியுடன் வேலை செய்வது, நீண்ட காலத்திற்கு உங்கள் விரைகளை வெப்பக் கதிர்வீச்சுக்கு வெளிப்படுத்துவதும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. உங்களுக்கும் அந்த கணினிக்கும் இடையில் ஏதாவது ஒன்றை வைக்கவும்.

எடை கருவுறுதல் திறனை பாதிக்காது
சில சமயங்களில் இது உண்மையாக இருக்கலாம். பல அதிக எடை கொண்ட ஆண்கள் கருத்தரிப்பதில் எந்த பிரச்சனையையும் சந்திப்பதில்லை. இருப்பினும், "அதிக எடை" "பருமன்" அல்லது "உடல் பருமனாக" மாறியவுடன், பல விஷயங்கள் மாறுகின்றன. உடல் பருமன் பல நாடுகளில் தொற்றுநோயாக மாறியுள்ளது, மேலும் இது நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் ஆண் மலட்டுத்தன்மை உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகளுடன் தொடர்புடையது. உடல் பருமன் தூக்கத்தில் மூச்சுத்திணறலுடன் தொடர்புடையது மற்றும் இரண்டு நிலைகளும் ஆண்களை குறைந்த டெஸ்டோஸ்டிரோன் அளவுகள், அதிக ஈஸ்ட்ரோஜன் அளவுகள் மற்றும் மோசமான விந்தணு உற்பத்திக்கு ஆபத்தில் உள்ளன.

வாழ்க்கை முறை கருவுறுதலில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது
அது நிச்சயம் முடியும். அதிகப்படியான ஆல்கஹால் மற்றும் மரிஜுவானா விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கலாம். நீங்கள் எவ்வளவு அல்லது எவ்வளவு கால இடைவெளியில் அதனை எடுத்துக் கொள்கிறீர்கள் என்பது முக்கியமானது. எல்லாக் கொண்டாட்டப் பொருட்களிலிருந்தும் நீங்கள் எப்போதும் விலகியிருக்க வேண்டும் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. இங்கே எல்லாம் மிதமானதாக இருப்பது சரியான தேர்வாக இருக்கும்.

உடலுறவிலிருந்து விலகி இருப்பது விந்தணுவின் தரத்தை அதிகரிக்கும்
நீண்ட நேரம் உடலுறவு இல்லாமல் விந்தணுவின் தரத்திற்கு உதவாது. விந்து வெளியேற 2-3 நாட்களுக்கு மேல் காத்திருப்பது விந்தணுவின் தரத்தை குறைக்கும். நீங்கள் தினமும் உடலுறவு கொண்டால், அது விந்தணுக்களின் எண்ணிக்கையையும் தரத்தையும் வெகுவாகக் குறைக்கும். எனவே, தினமும் உடலுறவு கொள்ளாமல் இருப்பது நல்லது. அண்டவிடுப்பின் போது ஒரு நாள் விட்டு ஒருநாள் உடலுறவில் ஈடுபடுவதே சிறந்த பரிந்துரை. இது விந்தணுவின் அளவை போதுமானதாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் கருவுறுத்தலுக்கான வாய்ப்புகளை மேம்படுத்த உதவும்.
MOST READ: ஆண்கள் தீவிர உடலுறவிற்கு பின் இழந்த ஆற்றலை திரும்ப பெற இதில் ஒன்றை சாப்பிட்டால் போதுமாம் தெரியுமா?

டெஸ்டோஸ்டிரோன் எடுத்துக்கொள்வது விந்தணு எண்ணிக்கையை மேம்படுத்த உதவும்
டெஸ்டோஸ்டிரோன் எடுத்துக்கொள்வது விந்தணுக்களின் எண்ணிக்கையை மேம்படுத்த உதவும் என்று பல ஆண்கள் நினைக்கிறார்கள், உண்மையில் எதிர்மாறாக இருக்கும். டெஸ்டோஸ்டிரோன் எடுத்துக்கொள்வது டெஸ்டோஸ்டிரோனை உற்பத்தி செய்யும் ஆணின் திறனை நிறுத்தும், ஏனெனில் பிட்யூட்டரி ஏற்கனவே போதுமான டெஸ்டோஸ்டிரோன் தயாரிக்கப்படுகிறது என்று நினைக்கிறது. இது ஆண் துணையின் விந்தணுக்களின் எண்ணிக்கையையும் கருவுறுதலையும் வெகுவாகக் குறைக்கும்.