Latest Updates
-
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா
அந்தரங்க பகுதியை மட்டும் குறிவைத்து தாக்கும் அல்சர்... அறிகுறி எப்படி இருக்கும்?
கிரானுலோமா இன்குனைல் என்ற நோய் க்ளெபிஸியெல்லா கிரானுலொமடிஸ் என்ற பாக்டீரியா தொற்றால் உண்டாகிறது. இது உடலுறுவின் வழியாக பரவக் கூடிய நோயாகும். டோனோவனோசிஸ் என்றும் அழைக்கப்படும் இந்த நோய் ஆண் பிறப்புறுப்
கிரானுலோமா இன்குனைல் என்ற நோய் க்ளெபிஸியெல்லா கிரானுலொமடிஸ் என்ற பாக்டீரியா தொற்றால் உண்டாகிறது. இது உடலுறுவின் வழியாக பரவக் கூடிய நோயாகும். டோனோவனோசிஸ் என்றும் அழைக்கப்படும் இந்த நோய் ஆண் பிறப்புறுப்பு பகுதிகளில் கட்டிகளை ஏற்படுத்துகிறது.

உடலுறவு வழியாக தொற்றும் இந்த புண்கள் வலியில்லாதது. இந்த தொற்று பெரும்பாலும் வெப்ப மண்டல நாடுகளில் அதிகளவில் காணப்படுகிறது. குறிப்பாக இந்தியா, பாப்புவா நியூ கினியா மற்றும் கரீபியா போன்ற வளரும் நாடுகளில் அதிகளவில் காணப்படுகின்றன.

பிறப்புறுப்பு அல்சர்
க்ளெபிஸியெல்லா கிரானுலொமடிஸ் என்ற பாக்டீரியா பிறப்புறுப்பு பகுதியைச் சுற்றியுள்ள தோலில் அல்சரை ஏற்படுத்துகிறது. இந்த புண்கள் அப்படியே பெரிதாகி கட்டிகளாக மாறுகின்றன. இதனால் பிறப்புறுப்பை சுற்றியுள்ள தோல்கள் முழுவதும் பாதிப்படைகின்றன.இந்த தொற்று தீவிரமாகி இந்த பாக்டீரியா நுண்ணுயிர்கள் பெரிய ஆபத்தை ஏற்படுத்துகிறது.

பரவப் கூடியது
இந்த தொற்று ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவக் கூடியது. இது பொதுவாக உடலுறவு கொள்ளும் போது பரவக் கூடியது. வாய் வழி செக்ஸ் வழியாக பரவுவது அரிதாகவே உள்ளது. கிட்டத்தட்ட 50% ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த தொற்றால் தங்கள் பிறப்புறுப்பு பகுதிகளில் கட்டிகளை கொண்டுள்ளனர்.

ஆராய்ச்சி தகவல்கள்
ஆராய்ச்சி தகவல்கள் படி ஆண்கள் தான் இந்த தொற்றால் அதிகளவில் பாதிப்படைகின்றனர். அதிலும் 20-40 வயதை உடையவர்கள் அதிகளவு இந்த தொற்றை சந்திக்கின்றனர். இந்த தொற்று நோய் பரவும் நாடுகளுக்கு பயணம் செய்தவர்களுக்கு இந்த ஆபத்து அதிகளவு நேர்ந்துள்ளது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சருமத்தின் வழியாகவோ அல்லது பாலியல் தொடர்பு மூலமாகவோ இது வேகமாக பரவக் கூடியதாக உள்ளது.

அறிகுறிகள்
முதலில் பிறப்புறுப்பு பகுதிகளில் சிறிய பருக்கள் போன்று தான் அறிகுறிகள் தென்படும். வலிக்கவும் செய்யாது. அப்படியே கட்டியாக மாறக் கூடும். பிறப்புறுப்பு பகுதிகளில் மட்டுமில்லாமல் சில சமயங்களில் வாய்களிலும் இந்த புண்கள் பரவக் கூடும். பாதிக்கப்பட்ட திசுக்கள் அருகில் உள்ள திசுக்களுக்கு தொற்றை பரப்புகிறது. அப்படியே தொற்றின் வீரியம் அதிகரிக்க தொடங்கி விடும்.

படிநிலைகள்
அறிகுறிகள் தென்பட்டு 7-10 நாட்களில் தொற்று வெளியே தெரிய ஆரம்பிக்கும். தொற்றின் வீரியத்தை பொருத்து இதைப் பிரிக்கலாம். 12 வாரத்தில் தீவிரம் அடைந்து விடும்.

படிநிலை 1
ஆரம்ப நிலையில் பிறப்பிறுப்பில் சிறிய திசுக்களை பாதிக்கும். பாதிக்கப்பட்ட திசுக்கள் இழக்கும் போது அந்த பகுதி சிவப்பு நிறமாக மாறும். பார்ப்பதற்கு வெல்வெட் தன்மை போல் காணப்படும். அந்த பகுதியை காயமடையச் செய்தால் இரத்த போக்கு ஏற்படக் கூடும்.

படிநிலை 2
இந்த நிலையில் பாக்டீரியா பிறப்புறுப்பு பகுதியில் தொற்றை பரவச் செய்யும். பிறப்புறுப்பு, அடிவயிற்று மற்றும் தொடை பகுதி வரை புண்களை ஏற்படுத்தி அல்சரை உண்டாக்கி விடும். இந்த புண்களில் மாவு போன்ற வாசனை அடிக்கப்படும்.

படிநிலை 3
மூன்றாம் நிலைகளில் தொற்று ஆழமாக மாறி விடும். புண்கள் கட்டிகளாக மாற ஆரம்பிக்கும்.

பரவ காரணங்கள்
க்ளெபிஸியெல்லா கிரானுலொமடிஸ் என்ற பாக்டீரியா மூலம் உடலுறவு வழியாக பரவும். உங்கள் துணைக்கு இந்த தொற்று இருந்தால் உங்களுக்கு பரவ வாய்ப்புள்ளது. அதே மாதிரி பிரசவத்தின் போது தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவ வாய்ப்புள்ளது.

விளைவுகள்
பிறப்புறுப்பு பகுதியில் உள்ள சருமத்தின் நிறம் மாறி விடும்
பிறப்புறுப்பு அல்சரால் பாதிப்படையும்
நிரந்தர வீக்கம் மற்றும் புண்கள்
புற்று நோய்
பிறப்புறுப்பு வடிவம், அளவு மாறுதல்
பிறப்புறுப்பு எலும்புகள் அல்லது மலம் கழிக்கும் இடம் எல்லாம் தொற்றால் பாதிக்கப்படும். இரத்தத்தில் தொற்று பரவக் கூடும்.

கண்டறிதல்
இது மெதுவாக பரவுவதால் இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது கஷ்டம். இந்த புண்கள் ஒரு மாதம் காலம் ஆகியும் ஆறவில்லை என்றால் மருத்துவர்கள் ஸ்கின் பயோப்ஸிக்கு பரிந்துரைக்கின்றனர். பாதிக்கப்பட்ட பகுதியை கட் பண்ணி பாக்டீரியா தொற்று இருக்கிறதா என்று ஆய்வுச் சோதனை நடத்துகின்றனர். சில நேரங்களில் அந்த கட்டியை சுரண்டி அதில் பாக்டீரியா தொற்று இருக்கிறதா என ஆய்வு செய்கின்றனர். அதே மாதிரி இரத்த பரிசோதனை மூலமும் கண்டறியலாம்.

சிகிச்சைகள்
ஆன்டிபாயாடிக் மருந்துகளான அசித்ரோமைசின், டாக்ஸிசைக்ளின், சிப்ரோ பிளாக்சசின், எரித்ரோமைசின், ட்ரைமெத்ரோப்ரைம், சல்ஃபாமெத்தாக்ஸோல் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். புண்கள் மற்றும் தொற்றின் வீரியத்தை பொருத்து இந்த ஆன்டிபாயாடிக் மருந்துகளை நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. 3 வாரங்கள் வரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
சில பேருக்கு அதற்கு மேலும் எடுத்துக் கொள்ள நேரிடலாம். அல்சர் வலி மிகுந்ததாக இருந்தால் மருத்துவர்கள் வலி நிவாரணியையும் பரிந்துரைக்கின்றனர். இந்த புண்கள் முழுமையாக குணமாகவில்லை என்று மறுபடியும் தொற்று வர நிறையவே வாய்ப்புள்ளது.

தடுக்கும் முறைகள்
உடலுறவு கொள்ளும் போது காண்டம் பயன்படுத்துவது இந்த மாதிரியான தொற்றுகள் வராமல் தடுக்கும்.
பிறப்புறுப்பு தொற்று இருப்பவர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்வதை தவிருங்கள்.
வெப்ப மண்டல வளரும் நாடுகளுக்கு செல்லும் போதோ அல்லது பரவக் கூடிய இடங்களுக்கு செல்லும் போதோ ஒரு மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இதன் மூலம் தொற்றை தடுக்கலாம்.



Click it and Unblock the Notifications
