For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க வீட்டு பெண்ணுக்கும் PCOD பிரச்சினை இருக்கா? உங்க கேள்விக்கு நிபுணர்கள் பதில் இதோ...

சினைப்பை நீர்க்கட்டிகள் பற்றிய பத்து சந்தேகங்களும் அதற்கான தீர்வு முறைகளும் பற்றி இந்த பகுதியில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விளக்கமான தொகுப்பு தான் இது.

|

இன்றைய நாட்களில் பெண்கள் மத்தியில் சினைப்பை நீர்க்கட்டிகள் பெரிய பாதிப்பை உண்டாக்கி வருகின்றன. இந்த் சினைப்பை நீர்க்கட்டிகள் பற்றி பெண்களுக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன. இந்த பாதிப்பு குறித்து தில்லியில் உள்ள சார். கங்காராம் மருத்துவமனையில், தடுப்பு சுகாதார மற்றும் ஆரோக்கிய மருத்துவர். சோனியா ராவத் அவர்களிடம் சில முக்கிய கேள்விகள் எழுப்பப்பட்டன. அது குறித்த அவர் கூறிய விடைகள் பற்றி இந்த பதிவில் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரம்ப கட்ட அறிகுறிகள்

ஆரம்ப கட்ட அறிகுறிகள்

பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் என்னும் சினைப்பை நீர்க்கட்டி என்றால் என்ன மற்றும் இதன் ஆரம்ப கட்ட அறிகுறிகள் என்ன?

பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் என்பதை PCOD என்றும் அழைப்பார்கள். இது சினைப்பையில் உருவாகும் ஒரு வித நீர்க்கட்டிகள் ஆகும். சினைப்பை என்பது பெண்களுக்கு இருக்கும் ஒரு உறுப்பு. இது மாதவிடாய் மற்றும் கருவுறுதலுக்கு பொறுப்பேற்கும் ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இந்த நீர்க்கட்டிகள் பெண் ஹார்மோன் உற்பத்திக்கு பதிலாக ஆண் ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. அதனால் ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் கருவுறுதலில் தாமதம் ஆகிய பாதிப்புகள் பெண்களுக்கு ஏற்படுகிறது.

கூடுதலாக சிலருக்கு கட்டி போன்ற சரும பாதிப்புகள் ஏற்படலாம். சிலருக்கு ஆண்களுக்கு ஏற்படுவதுபோல் தலை முடி வழுக்கை அல்லது முடி இழப்பு ஏற்படலாம். சிலருக்கு ஆண்களைப் போல் உடலில் சில இடங்களில் அதிக முடி அதிகமாக வளரும். ஆண் ஹார்மோன்களின் உற்பத்தி அல்லது சினைப்பை நீர்க்கட்டியின் ரசாயனம் இந்த மாற்றங்களுக்கு காரணமாக உள்ளது. அதிகரித்த உடல் எடையும் இதன் முக்கிய அறிகுறியாக இருக்கலாம்.

MOST READ: இப்படி உருளைக்கிழங்குலயே ரோஜா செடி வளர்க்கலாம் தெரியுமா? ரொம்ப ஈஸி... ட்ரை பண்ணிப்பாருங்க

வயது

வயது

எந்த வயதில் இந்த அடையாளம் மற்றும் அறிகுறி தோன்றலாம்?

இந்த பாதிப்பு குறிப்பிட்ட அளவு வளர்ச்சியை எட்டியவுடன் அடுத்த சில மாதங்களில் இதன் அறிகுறிகள் தென்படும்.

வேறு கோளாறுகள்

வேறு கோளாறுகள்

சினைப்பை நீர்கட்டியுடன் ஒத்த வேறு இதர கோளாறுகள் என்னென்ன?

எண்டோமெட்ரியல் ஹைப்பர் பிளேசியா: சில நேரம் கருப்பை அகப்படலத்தின் அடர்த்தி அதிகரித்து காணப்படும். இந்த நிலை எண்டோமெட்ரியல் ஹைப்பர் பிளேசியா என்று அறியப்படும். இந்த நிலை ஏற்படுவது கருப்பை புற்று நோய்க்கு வழி வகுக்கும். இந்த பாதிப்பும் PCOD பாதிப்பும் சில நேரத்தில் மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தலாம்.

பரம்பரையாக வருமா?

பரம்பரையாக வருமா?

குடும்ப வரலாற்றில் PCOD பாதிப்பு இருந்தால் என்ன செய்வது?

உங்கள் குடும்பத்தில் அம்மா, பாட்டி என்று யாருக்காவது PCOD பாதிப்பு இருந்தால் உங்களுக்கும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்த வழக்குகளில், நீங்கள் உங்கள் உணவில் அதிக கவனம் செலுத்தி, சீரான எடை நிர்வாகத்தை மேற்கொள்வது நல்லது.

கருவுருதல்

கருவுருதல்

எல்லா வழக்குகளிலும் PCOD கருவுற இயலாமை பாதிப்பை உண்டாக்குமா?

எல்லா வழக்குகளிலும் PCOD கருவுற இயலாமை பாதிப்பை உண்டாக்குவதில்லை.

MOST READ: இந்த பேப்பரை காலில் இப்படி சுற்றி வைத்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா

உணவு அட்டவணை

உணவு அட்டவணை

PCOD நோயாளிகளுக்கான உணவு அட்டவணை என்ன?

PCOD நோயாளிகள் கீழே குறிப்பிட்டுள்ளவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

. சமச்சீரான குறைந்த கொழுப்புடன் கூடிய ஆரோக்கிய உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

. உணவைத் தவிர்க்காமல் வழக்கமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

. விரதம் இருப்பதை தவிர்க்க வேண்டும்.

. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

. நிறைய காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

. சிறிதளவு கார்போஹைட்ரெட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

. சவ்வற்ற இறைச்சி அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உடல் எடை குறைவு

உடல் எடை குறைவு

உடல் எடை குறைவதால் PCOD தீவிரம் குறையுமா?

ஆம், எடை குறைவதால் PCOD பாதிப்பின் தீவிரம் குறையும்.

முழுதாக குணப்படுத்த முடியுமா?

முழுதாக குணப்படுத்த முடியுமா?

PCOD முற்றிலும் குணப்படுத்தக் கூடிய ஒரு நோயா?

PCOD முற்றிலும் நீக்கப்பட முடியாது. பெண்களின் வயதைச் சார்ந்து அதன் சிகிச்சை மாறுபடும். மருத்துவர் தொடர்ந்து சிகிச்சை அளித்துக் கொண்டிருப்பதால் பெண்கள் கர்ப்பமாக முடியும். ஓரளவிற்கு PCOD பாதிப்பை குணமாக்க பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவை,

. எடை அதிகரிப்பை கட்டுப்படுத்த வேண்டும்.

. மெட்பார்மின் கொடுப்பது மூலம் இன்சுலின் எதிர்ப்புக்கான சிகிச்சை அளிக்கபப்ட வேண்டும்.

. கட்டிகளுக்கான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

. அதீத முடி வளர்ச்சிக்கான சிகிச்சை அளிக்கபப்ட வேண்டும்.

. அசாதாரண அளவு கொழுப்பிற்கான சிகிச்சை மற்றும் டைப் 2 நீரிழிவிற்கான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

சிகிச்சைகள்

சிகிச்சைகள்

PCOD க்கான சிகிச்சை முறைகள் என்ன?

சமச்சீரான உணவு, ஸ்திரமான உடல் எடை நிர்வகிப்பு, வழக்கமான உடற்பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்வது போன்ற பல தீர்வுகள் இதற்கு உள்ளன. இவற்றை மேற்கொள்வதால் மாதவிடாய் சுழற்சி சீராகும். இதனால் கருவுறும் வாய்ப்பு அதிகரிக்கும். மேலும் மருத்துவரிடம் ஆலோசித்து சில குறிப்பிட்ட மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் கருப்பையில் முட்டைகள் உற்பத்தி ஊக்குவிக்கப்படும்.

MOST READ: எப்படி இருந்த ஊர்லாம் இப்ப எப்படி மாறியிருக்குனு நீங்களே பாருங்க... புகைப்படங்கள் உள்ளே...

செய்ய வேண்டிய மாற்றங்கள்

செய்ய வேண்டிய மாற்றங்கள்

PCOD அறிகுறிகளைக் குறைக்க உதவும் வாழ்வியல் மாற்றங்கள் என்ன?

பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய வாழ்வியல் மாற்றங்கள் இவை.

1. குறைந்த கொழுப்புடன் கூடிய சமச்சீர் உணவு.

2. வழக்கமான உடற்பயிற்சி

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Expert Speaks: Top 10 questions about PCOD which you always wanted to ask your doctor

Polycystic ovary disease is affecting a large number of women these days. There are certain things that every woman wants to know about PCOD. PCOD is polycystic ovary disease. As the name implies it means that there are many cysts in ovaries ( cysts are fluid-filled sacs). Ovaries are female organs which produce female hormones which are responsible for both, menstrual period and pregnancy.
Story first published: Thursday, March 14, 2019, 11:04 [IST]
Desktop Bottom Promotion