For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கணவன் மனைவி எப்படி படுத்து தூங்க வேண்டும்? அதில் என்ன மாதிரியான இன்பம் கிடைக்கும்?

தம்பதிகள் எப்படி தூங்குகிறார்கள் என்பது பற்றி விரிவான தகவல்களுடன் இந்த பகுதியில் பார்க்கலாம். அப்படி கணவன், மனைவிக்கு இடையே நெருக்கத்தை அதிகரிக்கச் செய்யும் பத்து வகை தூங்கும் நிலைகள் பற்றிய தொகுப்பு

|

"நான் அவளை நெஞ்சுக்குள்ளே வைத்திருக்கிறேன்," என்று கணவர் கூறலாம். "என் வீட்டுக்காரர்தான் எனக்கு எல்லாம்," என்று மனைவி கூறலாம். ஆனால், உண்மையில் எந்த அளவு நெருக்கம் இருவருக்கும் இடையே உள்ளது என்பதை இரவு சொல்லிவிடுமாம். ஆம், படுக்கையில் உறங்கும் நிலையை கொண்டு இணைகள் இடையே உள்ள பிணைப்பின் நெருக்கத்தை அறிந்து கொள்ள முடியும் என்று கூறுகிறார்கள்.

Couple Sleeping Positions

உறங்கும்போது உங்கள் ஆழ்மனம் மட்டுமே செயல்படும். அப்போது வெளிப்படும் பாடி லாங்குவேஜ் என்னும் உடல்மொழி உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாதது. ஆழ்மனதில் நீங்கள் உங்கள் இணையை எந்த அளவுக்கு நேசிக்கிறீர்கள், நெருக்கம் பாராட்டுகிறீர்கள் என்பதை உறக்கத்தில் உங்கள் உடல்மொழி காட்டிக் கொடுத்து விடும். இணைக்கு இடையே உள்ள ஆழ்ந்த நெருக்கம் மற்றும் பிளவு ஆகியவற்றை உறக்கத்தின்போதான உடல்மொழி மூலம் அறிந்து கொள்ளலாம் என்று உடல்மொழி வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கரண்டி நிலை (Spoon Position)

கரண்டி நிலை (Spoon Position)

Image Courtesy

இளந்தம்பதியினர் பொதுவாக இந்நிலையில் தூங்குவர். இணையில் ஒருவர் பின்னே இன்னொருவர் நெருக்கமாக படுத்து அணைத்திருப்பது கரண்டி நிலை என்று கூறப்படுகிறது. இணையை பாதுகாக்கும் உணர்வோடும், இணைமேல் உரிமையை காட்டும் (possessiveness) தன்மையும் கரண்டி நிலையில் வெளிப்படும். உடல்கள் போதிய இடைவெளியோடு இணைந்து வசதியாக இணை ஒருவருக்கொருவர் நெருக்கத்தை காட்டும் வண்ணம் இந்நிலை அமைந்திருக்கும். பரஸ்பர நம்பிக்கையையும், பிணைப்பையும் கரண்டி நிலை காட்டும்.

MOST READ: கிட்னியில எந்த பிரச்சினையும் உங்களுக்கு வராம இருக்கணும்னா இந்த 6 பொருள சாப்பிடாதீங்க...

தளர்ந்த கரண்டி நிலை (Relaxed Spoon Position)

தளர்ந்த கரண்டி நிலை (Relaxed Spoon Position)

Image Courtesy

படுத்து உறங்கும் நிலைகளை சரியாக புரிந்து கொள்வதற்கு, எவ்வளவு நாள்களாக ஜோடிகள் இணைந்துள்ளனர் என்பதையும், வயது முதிர்வையும் கருத்தில் கொள்ளவேண்டும். புதிதாக திருமணமான தம்பதியரிடையே உடல் நெருக்கம் முக்கிய பங்கு வகிக்கும். ஒருவரையொருவர் நெருக்கமாக தழுவிக் கொண்டிருக்கவே விரும்புவர். அதன் பிரதிபலிப்பு தான் கரண்டி நிலை.

காலம் கடந்திடும்போது உடலளவிலான நெருக்கம் முதன்மை நோக்கில் இருக்காது. கையால் தளர்வாக அணைத்துக்கொள்வதில், உடல் நெருக்கம் குறைகிறது. தூங்குவதற்கு இருவருக்கும் போதுமான இடம் கிடைக்கிறது. 'உனக்கென்று நான் இருக்கிறேன்,' என்பதை உணர்த்தும் இந்த வகை அணைப்பு, சமநிலையை வெளிப்படுத்துகிறது.

பின்னிப் பிணைந்த தழுவல் (Tangled Up Hugging)

பின்னிப் பிணைந்த தழுவல் (Tangled Up Hugging)

Image Courtesy

இரவு முழுவதும் அணைத்துக்கொண்டு தூங்கும் இந்த நிலை அரிதானது. உறவின் தொடக்கத்தில் பெரும்பாலும் அனைத்து ஜோடிகளிடமும் காணப்படும் இந்நிலையை சில இணைகள் வாழ்க்கை முழுவதும் தொடர்வதுண்டு. அதிக நெருக்கத்தை காட்டும் இந்த நிலை உணர்வுப்பூர்வமானதும் கூட. இணைந்திடும் இருவருமே மற்றவரிடம் பாதுகாப்பை உணர்ந்திடுவர். பின்னிப் பிணைந்த தழுவல் நிலையில் நீங்கள் உறங்கினால், உங்கள் இணையிடம் இன்னும் இன்னும் பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள் என்றும், அவரையே நீங்கள் சார்ந்திருக்கிறீர்கள் என்றும் பொருள். மொத்தத்தில் தனியாக தூங்குவதற்கு உங்களால் முடியாது.

தளர்ந்த கட்டியணைப்பு நிலை (Cuddle and Relax Position)

தளர்ந்த கட்டியணைப்பு நிலை (Cuddle and Relax Position)

Image Courtesy

நெருக்கம் மற்றும் சுதந்திரம் இரண்டும் சமரசம் செய்திருக்கும் நிலை இது. முதல் பத்து நிமிடங்களுக்கு இணை, ஒருவரையொருவர் இறுக்கமாக தழுவி படுத்திருந்து பின்னர் தங்கள் தங்கள் இடங்களில் சுதந்திரமாக உறங்கும் நிலையே தளர்ந்த கட்டியணைப்பு நிலையாகும்.

MOST READ: எப்படி டயட் இருந்தாலும் தொப்பை குறையலயா? நீங்க பண்ற இந்த 6 தப்புதான் காரணம்

மார்பில் தலை சாய்த்த நிலை (head on chest position)

மார்பில் தலை சாய்த்த நிலை (head on chest position)

Image Courtesy

ஆணின் மார்பில் பெண் தலை சாய்த்தபடி கைகளால் தழுவிக்கொண்டு, கால்கள் பிணைந்தபடி உறங்கும் நிலை. ஒருவர் இன்னொருவர் மீது ஆழ்ந்த நம்பிக்கையையும் சார்ந்திருக்கும் உணர்வையும் காட்டும் நிலை இதுவாகும். நேராக படுத்திருக்கும் இணை வலிமையையும் பாதுகாப்பையும் காட்டும் தருணத்தில், அவன் மார்பின்மீது சாய்ந்திருக்கும் இணை முழு நம்பிக்கையையும் விசுவாசத்தையும் காட்டுகிறது. உறவின் இனிமை அக்கறையின்மூலம் காட்டப்படுகிறது.

கால்கள் பிணைந்த நிலை (legs entwined position)

கால்கள் பிணைந்த நிலை (legs entwined position)

Image Courtesy

இணையுடனுள்ள பிணைப்பை ஆழமாக வெளிப்படுத்தும் நிலை. உடல் மொழியில் கால்களே உண்மையை பேசும் அங்கங்களாகும். தூங்கும்போது தன்னையறியாமலே கால்கள் உண்மையை பேசுகின்றன. கால்கள் பின்னிப் பிணைந்த நிலையில் இணை உறங்குமானால், இருவரும் முழு தனி மனிதர்களாக இருக்கும் இருவரும் ஒருவரிடமிருந்து மற்றவர் இன்னும் இன்னும் என்று வேண்டி விரும்பி பெற்றுக்கொள்வதன் அடையாளம் இது. தம்பதியரின் முழு ஒத்திசைவை விளக்கும் நிலை இது. இணை, மற்றவரிடமிருந்து மறுவினையை எதிர்பாராமல் கால்களை சுற்றி போட்டிருந்தால் அவர் உணர்வு மற்றும் பாலியல் சார்ந்த இணைப்பை வாஞ்சிக்கிறார் என பொருள்.

விரட்டிச் செல்லும் கரண்டி நிலை (chasing spoon)

விரட்டிச் செல்லும் கரண்டி நிலை (chasing spoon)

Image Courtesy

மற்றவற்றைப் போலன்றி உறவின் இரகசியத்தை தன்னுள் கொண்டிருக்கும் நிலை இது. இதில் முதலில் கரண்டி நிலையில் ஆரம்பிப்பர். சிறிது நேரத்தில் இணையில் ஒருவர் விலகி, படுக்கையில் தன் பக்கமாக சென்று விடுவர். மற்றவர், அவரை தொடர்ந்து சென்று கரண்டி நிலையை மேற்கொள்ள விளைவர்.

ஒருவர் தமக்கென இடமுண்டாக்க விரும்பியபோதிலும் மற்றவர் தொடர்ந்து விரட்டிச் செல்வதால் இது சட்டவிரோதமான கரண்டி நிலை என்று 'உறக்க நிலைகள்' நூலின் ஆசிரியர் சாமுவேல் டங்கல் என்பவர் கூறியுள்ளார்.

விலகிச் செல்லும் இணையர், தனக்கு வசதியான நிலையில் தூங்குவதற்காக விலகிச் செல்லலாம் அல்லது துணை தன்னை விரட்டி வரவேண்டும் என்பதற்காக நகர்ந்து செல்லக்கூடும். இரண்டில் எது உண்மை என்பது சம்மந்தப்பட்டவருக்கே தெரியும்.

MOST READ: பச்சரிசியில 5 ரூபாய் காசு போட்டு பீரோல வையுங்க... பணம் சேர்ந்துகிட்டே இருக்குமாம்...

பின்பக்கங்கள் உரசும் நிலை (Backs Touching Position)

பின்பக்கங்கள் உரசும் நிலை (Backs Touching Position)

Image Courtesy

சுதந்திர தன்மை உள்ளுக்குள் உறைந்திருக்கும் இருவரை கொண்ட இணை இது. முகங்கள் வேறு வேறு திசை நோக்கி இருக்குமாறு, தங்கள் உடல்களின் பின்பக்கங்கள் ஒன்றுடன் ஒன்று உரசும்படி படுத்திருந்தாலும், ஒருவருக்கான இடத்தை இன்னொருவர் புரிந்து மதிப்பதை காட்டிடும் நிலை இதுவாகும். இணைப்பு மற்றும் பாலியல் தொடர்புக்கான விருப்பமும் தொக்கி நிற்கும் நிலை. அன்பினால் கலந்திருந்தாலும் இணையின் விருப்பத்தையும் அவருக்கான இடத்தையும் மெச்சிக்கொள்ளும் ஆளுமை நிறைந்தவர்களின் கூட்டு இது. உண்மையில் நமக்கு விலக்கம் தேவைதான்; ஆனால், நம் இணையிடமிருந்து அல்ல என்பதை காட்டுவது இந்த படுக்கை நிலை.

பின்பக்கங்கள் நோக்கும் நிலை (Back towards each other)

பின்பக்கங்கள் நோக்கும் நிலை (Back towards each other)

Image Courtesy

ஒருவரிடம் மற்றவர் சண்டையிட்டு விட்டு, ஈர்ப்பே இல்லாமல் விலகி படுத்திருப்பதாக தெரிந்தாலும், தங்களுக்குள்ளாக வலிமையான, பாதுகாப்பான உறவு கொண்டிருக்கும் இணை இது. நெருக்கத்தை காட்டுவதற்கு உடல்ரீதியான இணைப்பு முக்கியமல்ல என்பதை உணர்ந்த இணை இது. இருவருமே சுதந்திரத்திற்கும் தங்களுக்கான இடத்திற்கும் முக்கியத்துவம் அளிப்பவர்கள்.

சில சமயங்களில் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும் தம்பதியர் இந்த நிலையில் படுத்து பின்னர் ஒப்புரவாகி பழைய நிலையில் தூங்குவர். இந்த நிலை, சுதந்திரத்தை, பாதுகாப்பை, நெருக்கத்தை காட்டுவதாகும். இணையிலுள்ள இருவருக்கு மத்தியிலான உணர்வுப்பூர்வமான புரிந்துணர்வுக்கு இது அடையாளம்.

MOST READ: ஆணுக்கோ பெண்ணுக்கோ கள்ளத்தொடர்பு இருப்பதை எந்தெந்த அறிகுறிகள் வெச்சு கண்டுபிடிக்கலாம்?

ஆதிக்கம் செலுத்தும் நிலை (domination of space)

ஆதிக்கம் செலுத்தும் நிலை (domination of space)

Image Courtesy

இணையில் ஒருவரின்மேல் மற்றவர் முழு ஆதிக்கம் செலுத்தும் படுக்கை நிலை இது. கட்டிலின் தலைப்பக்கமாக தூங்குபவர் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்துபவராக இருப்பார். சற்று தாழ்வாக உறங்குபவர் உறவில் இணக்கமாக தாழ்ந்து செல்பவராக, சுயமரியாதை பிரச்னைகள் கொண்டவராக இருப்பார்.

தங்கள் தலை மட்டம் சமமாக இருக்கும்வண்ணம் தூங்கும் இணை, ஒரே எண்ணம் கொண்டவராக இருப்பர். இணையில் ஒருவர் கொண்டிருக்கும் மிகுந்த தன்னம்பிக்கையையும் மற்றவரின் தன்னம்பிக்கை குறைவையும் வெளிச்சம்போட்டுக் காட்டும் நிலை இதுவாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Couple Sleeping Positions And What They Says About Your Bonding

Did you know that the way you sleep with your partner can say a lot about your personality and the bonding you share with him? While it may seem absurd but the logic is pretty simple. While you are sleeping, you are in a subconscious state, In this state of sleep, you cannot fake the body language to please your partner and hence come back to your natural self. This tendency can reveal a lot about your self as well as the kind of bonding you share with your partner.
Story first published: Saturday, March 30, 2019, 13:39 [IST]
Desktop Bottom Promotion