20+ வயதினர் செக்ஸ் எஜுகேஷன் மூலம் கற்க வேண்டிய 15 விஷயங்கள்!

By: Staff
Subscribe to Boldsky

செக்ஸ் எஜுகேஷன் என்றாலே வெறும் உடலுறவு ரீதியானது, செக்ஸ் பொஷிஷன் குறித்ததாக இருக்கும் என்று கருத வேண்டாம். இது எஜுகேஷன், என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? என்னென்ன செயல்கள் தொற்று, நோய் பாதிப்புகள் உண்டாக்கும்? உடலுறவில் ஈடுபடும் போது உடல் ரீதியாக மட்டுமின்றி, மன ரீதியாகவும் என்னென்ன விஷயங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என அ முதல் ஃ-ன்னா வரை அனைத்தையும் கற்பிக்கிறது செக்ஸ் எஜுகேஷன்.

கருத்தடை மாத்திரைகளை எந்த வயதொத்த பெண்கள் அதிகம் எடுத்துக் கொள்ள கூடாது, அதனால் ஏற்படும் தாக்கங்கள் என்ன, பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பெண்களின் உடல் வாகு எத்தகையது என்று பல விஷயங்கள் குறித்து பலர் தெளிவாக அறிந்திருப்பதில்லை. தாம்பத்திய உறவிலும் கூட சில மூட நம்பிக்கைகள் பின்பற்றப்படுகின்றன என்பது தான் சோகமே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூட நம்பிக்கை!

மூட நம்பிக்கை!

கருத்தரிக்காமல் உடலுறவில் ஈடுபட வேண்டும் என்றில் கருத்தடை மாத்திரைகள் அல்லது ஆணுறை பயன்படுத்த வேண்டும். அதிகமாக கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்வது பெண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும். சில தம்பதிகளுக்கு ஆணுறை பயன்படுத்துவதை அசௌகரியமாக உணர்வார்கள்.

இப்படியானவர்கள் புல் அன்ட் அவுட் என்ற முறையை கையாள்வதுண்டு. இதனால் கருத்தரிப்பை தவிர்க்க முடியும் என்று கருதுகிறார்கள். ஆனால், இது நூறு சதவிதம் பயனை அளிக்காது. இதன் மூலமும் கருத்தரிக்க அதிக வாய்ப்புகள் உண்டு என்கின்றனர் மருத்துவர்கள்.

சிறுநீர் கழித்தல்!

சிறுநீர் கழித்தல்!

உடலுறவில் ஈடுபட்ட பிறகு சிறிது நேரம் கழித்து சிறுநீர் கழிக்க வேண்டியது அவசியம். இது ஆரோக்கியமான பழக்கம் மற்றும் சிறுநீர் குழாய் தொற்று தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கும் என்றும் இது பாதுகாப்பான முறை என்றும் அறிவுரைக்கப்படுகிறது.

அதே போல, சிறுநீர் கழித்த உடனே உடலுறவில் ஈடுபடுதல் கூடாது என்றும். குறைந்தபட்சம் 30 - 60 நிமிடங்கள் இடைவேளை இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

லியூப்!

லியூப்!

லியூப் என்பது தவறானது அல்ல. சில சமயங்களில் பெண்கள் உடலுறவில் ஈடுபட விருப்பம் காணிக்கும் போதிலும் கூட, அவரது பிறப்புறுப்பு வறட்சியாக இருக்கும் பட்சத்தில் அது அவர்களுக்கு வலி உணர செய்யலாம். இதற்காக தான் லியூப் பயன்படுத்த அறிவுரைக்கப்படுகிறது. கடைகளில் சில வகை லியூப் விற்கப்படுகின்றன. இல்லையேல் தேங்காய் எண்ணெய் போன்றவற்றையே பயன்படுத்தலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கடைகளில் விற்கப்படும் சில ஆணுறைகளே லியூப் தன்மை வாய்ந்தது என்று விற்கப்படுகிறது.

சுய இன்பம் காணுதல்!

சுய இன்பம் காணுதல்!

பலரும் சுய இன்பம் காணுதல் தவறு என்று கூறுகிறார்கள். அளவுக்கு அதிகமாக சுய இன்பம் காணும் போது வேண்டுமானாலும் சில பிரச்சனைகள் வரலாம். அதிலும், ஒரு நபர் அதற்கு அடிக்ட் ஆகிவிட்டால் மன ரீதியான பிரச்சனைகளும், சரியாக எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாமலும் போகலாம். அடிக்கடி மனது வேறு எண்ணத்துக்குள் செல்ல வாய்ப்புகள் உண்டு.

மாற்றப்பட்டு மிதமான அளவில் ஒருவர் சுய இன்பம் காண்பதால் புரோஸ்டேட் ஆரோக்கியமாக இருக்கும் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

மேலும் ஹார்வர்ட் டி.எச். சான் பொது சுகாதார பள்ளி நடத்திய ஆய்வில் இது புரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்தை 22% குறைக்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

அன்டி-பயாடிக்!

அன்டி-பயாடிக்!

கருத்தடை மாத்திரை உட்கொள்ளும் போது ஆன்டி-பயாடிக்கும் சேர்த்து உட்கொண்டால் அது, கருத்தடை மாத்திரையின் வீரியத்தை குறைத்து பயனற்றதாக்கி விடும் என்றும். இந்த சமயத்தில் உடலுறவில் ஈடுபட்டால் கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டு என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

75% பெண்கள்!

75% பெண்கள்!

பெரும்பாலான ஆண்கள் உடலுறவில் ஈடுபடுவதால் மட்டுமே பெண்கள் இன்பம் அடைந்துவிடுவதாக கருதுவதுண்டு. இன்னும் சிலர் ஒருசில நிலைகளில் ஈடுபட்டால் தான் பெண்கள் உச்சம் காண்பார்கள் என்றும் தவறாக அறிகிறார்கள். உண்மையில் 75% பெண்கள் உடலுறவால் உச்சம் காண்பதே இல்லை. பெண்கள் ஃபோர் ப்ளேவில் மட்டும் அதிகமாக தாம்பத்திய உறவில் இன்பம் அடைகிறார்கள்.

இருவரும்!

இருவரும்!

உடலுறவு என்பது உடல் ரீதியாக மட்டும் ஒன்றிணைவது அல்ல. தாம்பத்திய உறவில் இணையும் முன்னரே, கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி பேசி மகிழ்ந்து மனதால் இணைந்து, தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொள்வதால் மட்டுமே முழுமையான இன்பத்தை அடைய முடியும்.

ஹார்மோன்கள்!

ஹார்மோன்கள்!

தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது உடலில் ஒருசில ஹார்மோன்கள் சுரக்கும். அதனால், அந்த இருவர் மத்தியில் அதீத நெருக்கும் உண்டாகும். எனவே, நீண்ட கால திட்டங்கள் அல்லது முக்கிய முடிவுகளை உடலுறவில் ஈடுபடும் போதோ, ஈடுபட்ட உடனேவோ எடுக்க வேண்டாம், இது சரியான முடிவாக அமையாது.

பேசுங்க!

பேசுங்க!

தாம்பத்திய உறவில் ஈடுபடுவதற்கு முன்னர், உங்கள் துணைக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது, எந்தெந்த செயல்கள் அவர்களை வலி அதிகமாக உணர செய்கிறது என்று கேட்டறிந்து உறவில் ஈடுபடுவது, உடலுறவை மட்டுமல்ல, உங்கள் இல்லற உறவையும் சிறப்பிக்க பெரும் கருவியாக அமையும்.

சுகாதாரம்!

சுகாதாரம்!

உடலுறவில் ஈடுபடும் போது குளித்துவிடுவது நல்லது. முக்கியமாக அதிகமாக வியர்வை வெளிப்படும் இடங்களை, அந்தரங்க பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக வாய் துர்நாற்றம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் ரொமான்ஸாக பேசும் போது, அதை உணர முடியாமல் வாய் துர்நாற்றம் தடுக்கலாம்.

தொடர்பு எல்லையிலேயே இருங்க...

தொடர்பு எல்லையிலேயே இருங்க...

சிலர் உடலுறவில் ஈடுபட்டவுடன் வேறு வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுவார்கள். அல்லது உறங்கிவிடுவார்கள். இது மிகவும் தவறு... கொஞ்ச நேரமாவது பேச வேண்டும். துணை விரும்பும் வரை பேச வேண்டும். பேசுதல் மிகவும் அவசியம். அநாவசியமான பேச்சுகள் அல்லது சண்டையை கொண்டுவரும் பேச்சுகளை தவிர்த்து விடுவது நல்லது.

பார்ன்!

பார்ன்!

பார்ன் என்பதும் ஸ்க்ரிப்ட் எழுதி, எடிட்டிங் எல்லாம் செய்து வெளிவரும் வீடியோக்கள் தான். அது உண்மையான தாம்பத்திய உறவு அல்ல. அது ஒரு மாயை, போலியான உலகம். அங்கே அவர்கள் கேமரா முன்னர் உணர்ச்சியற்று முக பாவனைகள் தருவதுண்டு. அதை உண்மை என்று நம்ப வேண்டாம்.

கருத்தடை மாத்திரைகள்!

கருத்தடை மாத்திரைகள்!

கருத்தடை மாத்திரைகள் அதிகமாக உட்கொள்வதால் பெண்களின் கர்ப்பப்பை பலவீனம் அடைய வாய்ப்புகள் உண்டு. எனவே, இதை தவிர்க்க வேண்டியது அவசியம்.

முக்கியமாக பதின் வயதில் இருந்து இருபதுகளில் இருக்கும் பெண்கள் கருத்தடை மாத்திரைகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டாம். இதனால், நீங்கள் விரும்பும் காலத்தில் கருத்தரிக்க முடியா நிலை ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.

ஓரல் செக்ஸ்!

ஓரல் செக்ஸ்!

சிலர் பிறப்புறுப்பு ரீதியான இணைப்பில், செக்ஸில் மட்டும் தான் பால்வினை நோய் தொற்று பரவ வாய்ப்புகள் உண்டு என கருதுகிறார்கள். ஆனால், ஓரல் செக்ஸ் எனப்படும் வாய் வழியாக செக்ஸுவல் விஷயங்களில் ஈடுபடுவதாலும் பால்வினை நோய் தோற்று ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

ஒப்பிட வேண்டாம்...

ஒப்பிட வேண்டாம்...

பலரும் பார்ன் வீடியோக்களில் காண்பிக்கும், அவர்கள் செய்யும் வேலைகளை தாங்களும் ஏன் முயற்சிக்க கூடாது என்று கருதுவதுண்டு. தவறு, சில செயல்கள், சில கருவிகளை பயன்படுத்துவது அதிக வலி அல்லது இன்பெக்ஷன் உண்டாக காரணமாக அமையலாம். எனவே, பார்னை ரியல் லைஃப்பில் முயற்சிக்க முனைய வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

You Should Learn These 20 Things From Sex Ed!

You Should Learn These 20 Things From Sex Ed!,
Subscribe Newsletter