Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
ஆண்களின் விந்து அணு உற்பத்தியை தடுக்கும் முக்கிய விஷயங்கள்!
விந்தணுக்கள் கர்ப்பம் ஏற்பட மிகவும் முக்கியம்; இந்த பதிப்பில் விந்து அணுக்களின் உற்பத்தியை தடுக்கும் விஷயங்கள் என்னென்ன என்று படித்து அறியலாம்.
ஒவ்வொரு தம்பதியருக்கும் தங்களுக்கு என ஒரு குழந்தையை பெற்று எடுத்து வளர்க்க வேண்டும்; தங்களின் மூலம் உருவான குழந்தையை வளர்த்து ஆளாக்க வேண்டும் என்று ஆசை கொண்டு இருப்பர். இந்த ஆசை சரி வர நிறைவேற வேண்டும் என்றால், தம்பதியர் தங்களின் உடல் ஆரோக்கியம், தாம்பத்தியம், உறவு முறை, பழக்க வழக்கம், அன்றாட செயல்கள் போன்றவை சரியாக உள்ளனவா என்று யோசித்து பார்க்க வேண்டும்.

இந்த பதிப்பில் கருத்தரிப்பை தடுக்கும் முக்கிய காரணமான விந்து அணுக்களின் உற்பத்தி தடை படுவதை பற்றி பார்க்கலாம்.

விந்து உற்பத்தி!
ஆண்களின் உடலில் விந்து உற்பத்தி சரியாக நடந்தால் தான், அவர்களால் கலவியில் நன்கு செயலாற்ற முடியும். செயல் சிறப்பாக நடந்தால் தான் ஆண்களால் இன்பத்தை பெற முடியும்; பெண்களுக்கும் இன்பம் கொடுக்க முடியும். இந்த விந்து அணுக்களின் உற்பத்தி சரியான அளவில் இருந்தால் மட்டுமே பெண்களில் கருத்தரிப்பு நடைபெறும்.

உற்பத்தியில் தடை!
விந்து அணு உற்பத்தி நடக்கும் பொழுது, உற்பத்தி ஆக்கப்படும் அணுக்கள் அதிகமாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டியது அவசியம். இப்படிப்பட்ட முக்கியத்துவம் கொண்ட விந்து அணுக்களின் உற்பத்தியை தடை செய்யும் ஆண்களின் அன்றாட பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகள் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

கலவி போதவில்லை!
தம்பதியர்கள் தங்களுக்குள் மேற்கொள்ளும் கலவி முறை மிக சிறப்பாக, அதிக இன்பம் கிடைப்பதாக, காதல் நிறைந்ததாக, உச்ச கட்டத்தை தொடும் அளவிற்கு இருக்க வேண்டும். அப்படி இருந்தால், அது உங்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியத்தையும், காதலையும், அதிக அன்பையும், சந்தோஷத்தையும், உடல் நலத்தையும் கொடுக்கும்.
ஆகையால், சாதாரணமாக மேற்கொள்ளும் கலவுதல் முறை சரியாக உள்ளதா, இல்லையா என்று சிந்தித்து பார்த்து தக்க நடவடிக்கை எடுக்கவும்.

குண்டாதல் பிரச்சனை!
ஆண்களின் உடல் அளவுக்கு அதிகமான எடையை எட்டிவிட்டால், அந்த சமயத்தில் தம்பதியர்கள் கலவி கொள்வதோ, இன்பம் பெறுவதோ கடினமாகி விடும். கலவியை விடுங்கள், அதிகமான உடல் எடையுடன் ஆண்கள் தங்கள் தினசரி வாழ்க்கையை நடத்துவதே பெரும் பாடாகி விடும். எனவே, ஆண்கள் தங்கள் உடலில் ஏற்படும் குண்டாதல் பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்யவும்.

புகை பிடித்தல்!
ஆண்களுக்கு அதிகப்படியான புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால், அவர்களின் உடலில் பயங்கர பிரச்சனைகளை ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் உண்டு; புகை பிடிப்பதால், ஆண்களுக்கு புற்றுநோய் தான் வரும் என்று நினைத்தால் அது தவறு; புகை பிடிப்பது ஆணின் அடையாளமான விந்து அணுக்களையே அழித்து ஆண்மையை போக்க கூடிய ஒரு பழக்கம்; ஆகையால் ஆண்கள் இந்த பழக்கத்தை தவிர்ப்பது நல்லது.

சைவ உணவு முறை
சமீப காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், வெளிப்பட்ட அறிக்கை வாழ்வில் அசைவ உணவையே சுவைக்காமல், சைவ உணவுகளை மட்டும் உண்டு, அதிலும் சத்தான உணவுகளை ஒதுக்கி வைக்கும் ஆண்களின் உடலில் கண்டிப்பாக விந்து அணுக்களின் உற்பத்தி குறையும் என்று கண்டுபிடிக்கபட்டு உள்ளது. ஆகையால், சைவ உணவை உண்ணும் ஆண்கள் தங்கள் உடலுக்கு போதுமான அளவு சக்தி கிடைக்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும்.

உடல் சத்துக்களும் பிரச்சனைகளும்!
உடலுக்கு தேவையான முக்கிய சத்துக்களை ஆண்கள் பெறுகிறார்களா என்று அவர்கள் அடிக்கடி சோதித்து பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் ஆண்களின் உடலில் ஆன்டி ஆக்சிடண்டுகளின் அளவு, வைட்டமின் டி-யின் அளவு, போலிக் அமிலம் போன்ற சத்துக்கள் சரியான அளவில் இல்லை என்றால், விந்து அணுக்களின் உற்பத்தி பாதிக்கப்படலாம்.
மேலும் ஆண்களின் உடலில் வெரிகோஸ் வெயின் போன்ற நோயக் குறைபாடுகள் ஏற்பட்டால், அவர்களுக்கும் விந்து அணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படலாம்.

ஆண்களின் ஆடைகள்!
ஆண்கள் உடலுக்கு அதிக வெப்பம் தரக்கூடிய ஆடைகளை அணிந்தால், அது விந்து அணுக்களை அழிக்க காரணமான வெப்பத்தை அளித்து அவற்றை கொன்று விடும். எனவே ஆண்கள் தங்கள் உடை விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். மேலும் ஆண்களின் உள்ளுறுப்புகளில் ஏதேனும் தடை இருந்தால்,விந்து அணுக்களின் உற்பத்தி தடைபடலாம்.
உற்பத்தியான விந்து அணுக்கள் வெளியேறுவதில் தடை ஏதும் இல்லை என்பதை ஆண்கள் பரிசோதித்து அறிந்து கொள்ளுதல் அவசியம்.



Click it and Unblock the Notifications