Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து நிகழும் குரு-சுக்கிர சேர்க்கை: இன்று முதல் இந்த 6 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
ஹைதராபாத் ஸ்டைல் ஈஸியான பருப்பு குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, அட்டகாசமாக இருக்கும் -
உடல் எடையை வேகமா குறைக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க..! -
மணி பிளாண்ட் செடியை இப்படி வைத்தால் அதிர்ஷ்டம் கொட்டும்! கோடைக்காலத்திற்கு ஏற்ற வாஸ்து ரகசியங்கள் இதோ! -
வாழ்க்கையில் ஒரேயொரு முறை குளிக்கும் பழக்கும் உள்ள பெண்கள் - ஆனாலும் இவங்க ரொம்ப அழகா இருப்பார்களாம் -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் ஜூன் 08 வரை 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹோட்டல் ரவா உப்புமா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு தெரிஞ்சு ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 14 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
50 ஆண்டுகளுக்கு பின் சனி ஜெயந்தியில் உருவாகும் அரிய யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது..! -
காதலில் சம்மதம் முக்கியமா? டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை என்ன தெரியுமா?
இரட்டைக் குழந்தைகளை கருத்தரிக்க உதவும் காரணிகள் என்னென்ன?
இரட்டைக் குழந்தைகளை கருத்தரிக்க வேண்டும் மற்றும் இரட்டையரை பெற்று எடுத்து வளர்க்க வேண்டும் போன்ற விஷயங்கள் பெரும்பாலான கர்ப்பிணி பெண்களின் மனதில் நிலவும் ஆசையாக, ஒரு சில பெண்களின் நீண்ட நாள் ஏக்கமாக இ
இரட்டைக் குழந்தைகளை கருத்தரிக்க வேண்டும் மற்றும் இரட்டையரை பெற்று எடுத்து வளர்க்க வேண்டும் போன்ற விஷயங்கள் பெரும்பாலான கர்ப்பிணி பெண்களின் மனதில் நிலவும் ஆசையாக, ஒரு சில பெண்களின் நீண்ட நாள் ஏக்கமாக இருந்து வருகிறது.

இரட்டையர்களை பெற்று எடுத்து வளர்த்தல் என்பது சாதாரண குழந்தை வளர்ப்பை விட சற்று கடினமான விஷயமே! இருப்பினும் அந்த சோதனையையும் சாதனையாக்க விரும்பும் பெண்களுக்கான பதிப்பு இது. இரட்டைக் குழந்தைகளை கருத்தரித்து பெற்று எடுக்க உதவும் காரணிகள் என்னென்ன என்று இந்த பதிப்பில் படித்து அறியலாம்.

மரபு
தாயின் மரபு வழி உறவுகளில் எவரேனும், எந்த தலைமுறையிலேனும் இரட்டைக் குழந்தைகளை பெற்று எடுத்து இருந்தால், அவர்தம் சந்ததியில் வந்த உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம். ஏனெனில் தலைமுறை தலைமுறையாக மரபணுக்கள் கடத்தப்படுகின்றன; அந்த மரபணு கடத்தலில் இரட்டையரை கருத்தரிக்கும் குரோமோசோம் உங்கள் உடலில் இடம் பெற்றிருந்தால், கண்டிப்பாக நீங்கள் இரட்டையரை பெற்று எடுக்கும் வாய்ப்பு அமோகமாக உள்ளது. உங்கள் முன்னோர் வரலாறை தாய் தந்தையிடம் கேட்டறிந்து, இரட்டையரை பெறும் மார்க்கம் உண்டா என்று சோதித்தறியுங்கள்!

வயது
இரட்டையர் பிறப்பு குறித்து நடத்தப்பட்ட ஆய்விலும் சரி, பெண்கள் கருத்தரிப்பு முறை குறிப்பாக நடத்தப்பட்ட ஆய்விலும் சரி பெண்கள் 35 வயதிற்கு மேல் கருத்தரித்தால், அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கலாம் என்ற கருத்து கண்டறியப்பட்டு உள்ளது. இந்த ஆய்வு, இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலேயே இரட்டைக் குழந்தைகளை கருத்தரித்து, பெற்று எடுத்து தாயான பெண்கள் பெரும்பாலும் 35 வயதிற்கு மேற்பட்டவர்களாக உள்ளனர் என்று தகவல் தெரிவிக்கிறது. 20 வயதிற்கு மேற்பட்ட பெண்களில் இரட்டையரை பெரும் வாய்ப்பு வெறும் 2 சதவிகித பெண்களுக்கே கிடைக்கிறது.

உயரம்
அன்னையின் உயரத்தை பொறுத்தும் இரட்டைக் குழந்தைகளின் கருத்தரிப்பு நிகழ்கிறது. உடலின் உயரத்தில் ஐந்து அடி ஐந்து அங்குலம் கொண்ட பெண்கள் அதாவது 5'5'' என உயரம் கொண்ட பெண்களில் அல்லது அதற்கும் அதிகமான உயரம் கொண்ட பெண்களில் இரட்டைக் குழந்தைகள் கருத்தரிப்பு நிகழ்வதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நடத்தப்பட்ட ஆய்வில் 130-ற்கும் அதிகமான பெண்கள் இரட்டையரை பெற்று எடுத்திருந்தனர், அவர்கள் அனைவரும் 5'5'' என்ற உயரத்தை விட அதிகமான உயரம் கொண்டு இருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடை
பெண்ணின் உடல் உயரம் கருத்தரிப்பில் ஒரு முக்கிய பங்காற்றுவது போல், பெண்ணின் உடல் எடையும் மிக முக்கிய பங்காற்றுகிறது. ஒரு பெண் இரட்டையரை பெற்று எடுக்க குறைந்தது அவள்தம் உடல் எடையின் உடல் எடை குறியீட்டு எண் 30 அல்லது அதற்கும் அதிகமாக இருக்க வேண்டும். உடல் எடை குறியீட்டு எண், பெண்ணின் உடல் எடையின் அளவை, அப்பெண்ணின் உடல் உயரத்தினை மீட்டர் அளவில் இருமடங்காக்கி அந்த மதிப்பைக் கொண்டு வகுக்க கிடைக்கும் மதிப்பாகும்.

பால் பொருட்கள்
இரட்டையரை பெற வேண்டும் என்று ஆசை கொண்ட பெண்கள் பால் பொருட்களை பார்த்தாலே பரவசமடைந்து உண்ண தொடங்க வேண்டும். அதிக பால் பொருட்களை உட்கொள்ளும் பெண்கள் எளிதாக இரட்டைக் குழந்தைகளை பெற்று எடுக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. பாலில் நிறைந்துள்ள IGF, பெண்ணின் உடலில் இரட்டையர் கருத்தரிப்பு நிகழ வழிவகை செய்யும். அதனால், இரட்டையரை பெற விரும்பும் பெண்கள் கண்டிப்பாக பால் பொருட்களை உண்ணத் தொடங்க வேண்டும்.

பிரசவம்
ஒரு பெண் பல முறை குழந்தைகளை பெற்று எடுத்திருந்தால், அதாவது பல குழந்தைகளுக்கு தாயாக இருந்தால் அப்படிப்பட்ட பெண்ணால், இரட்டையரை பெற்று எடுக்க முடியும். முன்பு பெற்று எடுத்த குழந்தைகள் இரட்டையராக இருந்தாலும் இல்லாவிடினும் அதிகமான குழந்தைகளை பெற்று எடுத்த பெண்களால் எளிதாக இரட்டைக் குழந்தைகளை கருத்தரித்து பெற்று எடுக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.



Click it and Unblock the Notifications