பெங்காலி ஸ்டைல் பெப்பர் சிக்கன் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும்

Posted By:

Bengali Pepper Chicken Recipe in Tamil: சண்டே வந்தாலே சிக்கன் சாப்பிட வேண்டுமென்பது எழுதப்படாத விதியாக மாறிவிட்டது. இன்று உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கி சமைக்கப் போகிறீர்களா? வழக்கமான சிக்கன் செய்யாமல் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வித்தியாசமான சிக்கன் சைடிஷ் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் பெங்காலி ஸ்டைல் பெப்பர் சிக்கனை செய்யுங்கள்.

Bengali Pepper Chicken Recipe How to Make at Home in Tamil

இந்த பெங்காலி ஸ்டைல் பெப்பர் சிக்கன் சாதம், பிரியாணி மட்டுமின்றி தோசை, சப்பாத்தி போன்ற டிபன் வகைகளுடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். முந்திரி சேர்த்து செய்யயப்படும் இந்த சிக்கன் ரெஸ்டாரண்ட்களில் சாப்பிடுவது போல அட்டகாசமான சுவையில் இருக்கும், எனவே இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு பெங்காலி ஸ்டைல் சூப்பரான பெப்பர் சிக்கனை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பெங்காலி பெப்பர் சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- அரை கிலோ சிக்கன்
- 1/2 கப் நன்கு கடைந்த தயிர்
- 15 முந்திரிப் பருப்புகள்
- 2 பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
- 1/2 ஸ்பூன் இஞ்சி விழுது
- 1/4 தேக்கரண்டி பூண்டு விழுது
- 4 வர மிளகாய்
- ஒன்றரை ஸ்பூன் மல்லித் தூள்
- 1 ஸ்பூன் முழு மிளகு
- 2 ஸ்பூன் மிளகுத் தூள்
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி
- தேவையான அளவு உப்பு

செய்முறை:

- சிக்கனை நன்றாக கழுவி இஞ்சி-பூண்டு விழுது மற்றும் நன்கு அடித்த தயிருடன் சேர்த்துப் பிசைந்து, குறைந்தது 2-3 மணி நேரத்திற்கு ஃப்ரிட்ஜில் தனியாக எடுத்து வைக்கவும்.

- முந்திரிப் பருப்பை சிறிதளவு சூடான நீரில் சுமார் 10 நிமிடங்கள் ஊறவைத்து, மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றிச் சூடாக்கி, அதில் வர மிளகாய் மற்றும் முழு மிளகு சேர்த்துத் தாளிக்கவும்.

- பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, மிதமான தீயில் லேசான பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

- வெங்காயம் வதங்கியதும் ஊற வாய்த்த சிக்கனை சேர்த்து நன்றாகக் கிளறவும்.

- அதன்பின் மல்லித்தூள் மற்றும் உப்பு சேர்த்து, அவ்வப்போது கிளறிவிட்டவாறே மிதமான தீயில் சமைக்கவும்.

- சிக்கன் மிகவும் வறண்டு போவது போல் தோன்றினால், சிறிது தண்ணீர் சேர்த்து கிளறவும்.

- சிக்கன் முக்கால் பாகம் வெந்ததும், முந்திரி விழுது மற்றும் ப்ரெஷாக அரைத்த மிளகுத்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும்.

- அனைத்தையும் நன்றாகக் கலந்து, கால் கப் வெதுவெதுப்பான நீரைச் சேர்க்கவும். வாணலியை மூடி வைத்து, அவ்வப்போது கிளறிவிட்டவாறே, சிக்கன் முழுமையாக வேகும் வரை மிதமான தீயில் சமைக்கவும்.

- சிக்கன் நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்து கொத்தமல்லி தூவி கிளறினால் சுவையான பெங்காலி ஸ்டைல் பெப்பர் சிக்கன் ரெடி!

[ of 5 - Users]
Story first published: Sunday, June 28, 2026, 11:08 [IST]
Desktop Bottom Promotion