Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
இந்தியாவில் குழந்தைகளை தத்தெடுக்க உதவும் சில வித்தியாசமான வழிகள்! அறியாத தகவல்கள்!
நம் நாடான இந்தியாவில் குழந்தைகளை தத்து எடுக்க பல வழிகள் உள்ளன; ஆனால் அவற்றை பற்றிய விழிப்புணர்வு நம்மிடையே குறைவாகவே உள்ளது. ஆகையால், தத்து எடுப்பதில் காணப்படும் பலவிதமான வழிமுறைகளை பற்றி விழிப்புணர்
வாழ்க்கையை நிம்மதியாக நிறைவாக வாழ்ந்து முடித்தோம் என்பதற்கு அடையாளமே நாம் என்ன வேலை செய்தோம், எத்தனை குழந்தைகளை பெரும், எப்படி வளர்த்தோம், அவர்கள் இப்பொழுது என்ன செய்கிறார்கள் என்பது தான்! தம்பதியரின் வாழ்க்கையை முழுமையாக்குவது, அவர்தம் காதலுக்கு அடையாளமாக மாறுவது அவர்கள் பெற்று எடுத்த குழந்தைகள் தான்!

ஆனால், துரதிர்ஷ்டவசமாக சில தம்பதியர்களின் வாழ்வு முழுமை அடைவதில்லை; அவர்தம் வாழ்வு முழுமையடைவதில் கடவுள் உடல் குறைபாடு, விதி என சில சோதனைகளை வைத்து விடுகிறான்; அதாவது அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காமல் போய் விடுகிறது. அப்படிப்பட்ட தம்பதியருக்கு உதவிடவே இந்த பதிப்பை சமர்ப்பிக்கிறேன்! படித்து பயனடையவும்.!

தத்து எடுத்தல்
குழந்தைகள் இல்லாமல் வாழ்க்கையில் சந்தோஷத்தை இழக்கும் தம்பதியர்கள் பற்பல மருத்துவ வழிகளின் மூலம் குழந்தையை கருத்தரித்து பெற்று எடுக்கலாம். ஆனால், எந்த வழியிலும் குழந்தை பிறப்பு ஏற்படாத, சமுதாயத்தில் உயர்ந்து கொண்டிருக்கும் மக்கள் தொகையை குறைக்க எண்ணும் - சேவை மனப்பான்மை கொண்ட தம்பதியர்கள் தங்கள் வாழ்வில் குழந்தையோடு மகிழ்ச்சியாக, வாழ்க்கையை நிறைவாக வாழ உதவும் ஒரு சிறந்த வழி தத்து எடுத்தல்.

விழிப்புணர்வு
நம் நாடான இந்தியாவில் குழந்தைகளை தத்து எடுக்க பல வழிகள் உள்ளன; ஆனால் அவற்றை பற்றிய விழிப்புணர்வு நம்மிடையே குறைவாகவே உள்ளது. ஆகையால், தத்து எடுப்பதில் காணப்படும் பலவிதமான வழிமுறைகளை பற்றி விழிப்புணர்வு அளிக்கும் வகையில், பல தம்பதியர்களுக்கு உதவும் நோக்கத்தோடு இந்த பதிப்பு வழங்கப்படுகிறது. இது பயனுள்ளது என்று கருதினால், மற்றவர்கள் அறிய பதிப்பை பகிர்ந்து உதவலாம்.
இப்பொழுது இந்தியாவில் காணப்படும் குழந்தை தத்து எடுப்பு முறைகள் பற்றி பார்க்கலாம்.

ஓப்பன் அடாப்சன்
ஓப்பன் அடாப்சன் என்பது திறந்த முறை தத்து எடுத்தால் முறை என்று அழைக்கப்படுகிறது. இந்த முறையில் தாங்கள் பெற்று எடுத்த குழந்தையை வறுமையின் காரணமாக அல்லது வேறு காரணமாக தத்து கொடுக்க விரும்பும் பெற்றோர்கள், தங்கள் குழந்தையை யார் தத்து எடுத்து வளர்க்க வேண்டும், குழந்தை யார் வீட்டில் வளர வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்யலாம்.
குழந்தையை தத்து கேட்டு வரும் தம்பதியர்களிடம் நேரடியாக கலந்துரையாடி, தங்களுக்கு வேண்டிய உதவியை பெற்றுக்கொண்டோ அல்லது குழந்தையை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி தத்து கொடுக்கலாம். இந்த இரண்டு விதமான தம்பதியர்களும் யாருடைய உதவியாலும், தூண்டுதலும் இன்றி எதிர்பாராத விதமாக சந்தித்து அல்லது தெரிந்தவர்கள் மூலமாக ஒருவரை ஒருவர் அறிந்து தத்து எடுப்பு முறையை மேற்கொள்வர்.

நன்மை - தீமைகள்!
இந்த முறையில் தத்துக்கொடுத்த பெற்றோர்கள் தங்கள் யார் என்ற உண்மையை சொல்லாமல், ஒரு உறவினர் போல குழந்தையை வந்து பார்க்கலாம், பேசலாம், விளையாடலாம். குழந்தை தத்து எடுக்கப்பட்டது என்றோ, அதன் உண்மையான பெற்றோர் குறித்த விஷயமோ குழந்தையிடம் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே சொல்லப்படும்.
இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், தத்து எடுத்த பெற்றோருக்கு குழந்தை எங்கே உண்மையை உணர்வுகளால், முகச்சாயல் மூலம் அறிந்து கொள்ளுமோ என்ற பயம் இருக்கும்; மேலும் தத்துக் கொடுத்த பெற்றோர் உண்மையை கூறி விடுவரோ என்ற அச்சம் மனதில் இருந்து கொண்டே இருக்கும். தத்துக் கொடுத்த பெற்றோருக்கும் குழந்தையை பார்த்து, அதன் மேல் பாசம் வந்து குழந்தையை பிரித்து அழைத்து செல்ல நேரிடலாம்; மேலும் குழந்தைக்கு அதை வாங்கி தருவது, இதை செய்யுங்கள் என்று தத்து அடுத்தவருக்கு அறிவுரை வழங்குவது போன்ற நிகழ்வுகள் நடைபெறலாம்.

செமி ஓப்பன் அடாப்சன்
செமி ஓப்பன் அடாப்சன் இந்த முறை மேற்கூறிய முறை போலத்தான். இந்த முறையில் தரகர் என்று கூறப்படும் ஒருவர் மூலம் தத்து எடுக்க போகும் மற்றும் தத்துக் கொடுக்க போகும் நபர்கள் அறியப்படுவார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் நேரடியாக சந்திக்காமல், அனைத்து விஷயங்களும் தரகர் மூலமே நடக்கும்.
இதில் தத்துக் கொடுத்த பெற்றோர் தனது குழந்தையை நேரடியாக வந்து கண்டு பேசுவது, போனில் பேசுவது, லெட்டர் போடுவது போன்றவை கண்டிப்பாக தடுத்து நிறுத்தப்படும். இந்த முறையில் தத்துக் கொடுத்த பெற்றோர் தத்து எடுத்த பெற்றோருடன் தரகர் மூலமாக தகவல் சொல்லி பேசலாம், தரகர் மற்றும் தத்து எடுத்த தம்பதியர் சம்மதித்தால், அவர்களை சந்திக்கலாம், அவர்கள் மூலமாக குழந்தை எப்படி உள்ளது என்று அறிந்து கொள்ளலாம்.

நன்மை - தீமைகள்!
இந்த முறையில் கூட அவசியம் ஏற்பட்டால் மட்டுமே குழந்தையிடம் உண்மை சொல்லப்படும்; ஆனால், குழந்தைக்கு தானாக தத்து எடுத்து வளர்க்கப்படுகிறோம் என்று தெரிந்தால் அது சிக்கலை ஏற்படுத்தும்; குழந்தை தனது பெற்றோர் யார் எவர் என்று கேட்கும், அவர்களை காண முற்படலாம்.
ஆனால், இதில் உள்ள முக்கிய நன்மை தத்து எடுத்த பெற்றோர் குழந்தையை யாருடைய தலையீடலும் இன்றி குழந்தையை தங்கள் சுதந்திரமாக, தங்களுக்கு பிடித்த வகையில் வளர்க்கலாம். தத்துக் கொடுத்த பெற்றோருக்கு என்ன தகவலை சொல்ல வேண்டுமோ அதை மட்டும் சொல்லி அவர்களை ஒரு எல்லைக்கோட்டுடன் நிறுத்தலாம்.

குளோஸ்ட்டு அடாப்சன்
குளோஸ்ட்டு அடாப்சன் என்பது தத்து எடுக்கும் மற்றும் தத்துக் கொடுத்த நபர்கள் யாரென்று யாருக்கும் தெரியாது; தரகரும் இந்த முறையில் கிடையாது. பின் எப்படி தத்தெடுப்பு நடக்கிறது என்ற சந்தேகமா? இந்த முறையில் அனாதையாக விடப்பட்ட குழந்தைகள், குப்பை தொட்டியில், ரயிலில், பேருந்தில், ரோடில் தனித்து விடப்பட்ட குழந்தைகளை, குழந்தை வரம் இல்லாத தம்பதியர் எடுத்துச் சென்று தங்கள் குழந்தையாக பாவித்து வளர்க்கலாம்.

நன்மை - தீமைகள்
இந்த முறையில் ஆடஹரன்கள் தயார் செய்வது, அதாவது யாரோ ஒரு குழந்தையை தான் பெற்று எடுத்த குழந்தையாக சட்ட சாசனங்கள் அனைத்தும் தயார் செய்து, உண்மையை போல மாற்றுவது மட்டுமே ஒரு சிக்கல். மற்றபடி இது ஒரு மிகவும் பாதுகாப்பான - சேவை மனப்பான்மை மிகுந்த முறை. குழந்தைக்கு தான் தத்து எடுக்கப்பட்டோம், அனாதையாக விடப்பட்டோம் என்ற உண்மை அறிந்தால், குழந்தை தன் உண்மை பெற்றோரை தேடிச்செல்லும் அபாயமும், தத்து எடுத்த பெற்றோரின் மீது உண்மையை மறைத்துவிட்டார்களே என்ற ஒருவித மனக்குறையும் ஏற்படலாம்.

குடும்ப அடாப்சன்
குடும்பத்தில் குழந்தையின் தாய் மற்றும் தந்தை எதிர்பாராத விதமாக இறந்து விட்டால், அல்லது இயற்கை பேரழிவால் எல்லாம் அழிந்து குழந்தையின் பெற்றோர் இறந்து குழந்தை மட்டும் உயிரோடு இருந்தால், அவர்கள் குடும்பத்தை சார்ந்த யாரேனும் ஒருவர் அந்த குழந்தையை தத்து எடுத்து வளர்க்கலாம். இது குழந்தையின் குடும்ப பின்னணி மாறுபடாத, நன்கு அறிந்த குழந்தையை தத்து எடுப்பதாகும்.

நன்மை - தீமைகள்!
குழந்தையை தத்து எடுத்த பின், குழந்தையுடன் உறவினராக தனக்கு இருந்த உறவு முறை மாறி, புதிய உறவு ஏற்படும். இந்த புது உறவை ஏற்றுக்கொள்ள குழந்தைக்கும் தத்து எடுத்த நபருக்கும் சில கால அவகாசம் ஏற்படலாம். ஒருவித வெறுமை உணர்வு, விலகிய உணர்வு, இவர் நம் உறவினர் என்ற உணர்வு மனதின் ஓர் ஓரத்தில் இருந்து கொண்டே இருக்கும்; முழுமையான பாசம் ஏற்படுவது மிகவும் அரிது.

உள்நாட்டு தத்தெடுப்பு
நம் நாட்டின் அந்த மாநிலத்திலும் வாழும் தம்பதியர் எந்த மாநிலத்தை சேர்ந்த குழந்தையை வேண்டுமானாலும் சட்டப்படி, குழந்தையின் பெற்றோர், குழந்தை இவர்களின் விருப்பப்படி தத்து எடுத்து வளர்க்கலாம். இதற்கு இந்திய அரசியல் அமைப்பு முழு ஆதரவும் முழு உரிமையும் அளிக்கிறது. இது குழந்தைகள் இல்லாமல் வாழும் தம்பதியருக்காக நம் நாடு அளிக்கும் ஒரு சலுகை ஆகும்.

வெளிநாட்டு தத்தெடுப்பு
இந்த முறையில் நம் நாட்டில் உள்ள ஒருவர் வெளிநாட்டில் பிறந்த பிவெளிநாட்டை சேர்ந்த குழந்தையை தத்து எடுக்க முடியும்; அதே போல், வெளிநாட்டை சேர்ந்த பெற்றோர் நம் நாட்டு குழந்தையை தத்து எடுத்து வளர்க்க முடியும். இந்த மாதிரியான தத்து இடுப்பை பெரும்பாலான நாடுகளின் அரசியல் அமைப்பு சட்டங்கள் ஆதரவு அளித்து வரவேற்கின்றன. ஏனெனில் அனாதை என்ற பெயரே இருக்கக்கூடாது, குழந்தையின்றி - அர்த்தமற்ற வாழ்வு யாரும் வாழக்கூடாது என்பதற்காக தான்!

முக்கிய விதி
எந்த முறையில் குழந்தையை தத்து எடுத்தாலும், குழந்தைக்கு உண்மையை, தகவல்களை 18 வயது ஆனதற்கு பின்பு தான் சொல்ல வேண்டும். அதுவரை குழந்தையின் குழந்தை பருவத்தை யாரும் எந்த வகையிலும் தொந்தரவு செய்தல் கூடாது. இது அரசு அனைத்து தத்து எடுக்கும் பெற்றோருக்கும் விதிக்கும் முக்கிய விதி முறையாகும்.



Click it and Unblock the Notifications











