Latest Updates
-
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்
July Born Personality: ஜூலை மாதம் பிறந்தவங்களோட குணாதிசயம் உண்மையில் எப்படி இருக்கும் தெரியுமா?
July Born Personality Traits In Tamil: ஒருவர் பிறந்த மாதமானது அந்த நபரின் குணாதிசயங்கள், சிந்திக்கும் முறை மற்றும் வாழ்க்கையை அணுகும் முறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதாக பலர் நம்புகின்றனர். அந்த வகையில் ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் தனித்துவமான குணாதியங்களை கொண்டவர்களாக கருதப்படுகின்றனர். அதுவும் இவர்கள் அன்பானவர்கள், குடும்ப பாசம் அதிகம் கொண்டவர்கள் மற்றும் உறுதியான மனநிலை கொண்டவர்களாக கருதப்படுகின்றனர்.

முக்கியமாக ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் பார்க்க அமைதியவர்களாக காணப்பட்டாலும், உள்ளத்தில் ஆழமான சிந்தனைகளும் வலுவான உணர்வுகளும் நிறைந்திருக்கும். பிறரின் உணர்வுகளை மதிக்கும் குணம் கொண்ட இவர்களிடம் மக்கள் எளிதில் நம்பிக்கை வைப்பார்கள். இதனால் அனைவராலும் மிகவும் விரும்பப்படும் நபர்களாக அவர்கள் திகழ்வார்கள்.
குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம்
ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்டிருப்பார்கள். பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகள் மீது அதிக அக்கறையை கொண்டிருப்பார்கள். குடும்பத்தில் பிரச்சனை என்றால், அதை தீர்க்க முன்வருபவர்களாக இருப்பார்கள்.
அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவர்
ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். மற்றவர்கள் சற்று கோபமாக பேசினாலோ, மனதை புண்படுத்தும்படி பேசினாலோ, அதை மறக்காமல் மனதில் வைத்துக் கொள்வார்கள். முக்கியமாக இவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் மனதிற்குள்ளேயே வைத்துக் கொள்வார்கள்.
நம்பிக்கைக்குரியவர்கள்
ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள். ஒரு ரகசியத்தை பாதுகாக்க நினைத்தால், ஜூலை மாதத்தில் பிறந்தவர்களை நம்பலாம். ஏனெனில் இவர்கள் தங்களிடம் சொல்லும் விஷயங்களை யாரிடமும் எளிதில் வெளியே சொல்லமாட்டார்கள். மிகவும் விசுவாசமானவர்கள். தன்மீது நம்பிக்கை வைத்தவர்களை ஒருபோதும் ஏமாற்றமாட்டார்கள்.
உதவும் மனப்பான்மை
ஜூலை மாதத்தில் பிறந்தவர்களிடம் கருணை உணர்வு அதிகமாக இருக்கும். மற்றவர்கள் கஷ்டப்பட்டால், அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உடனே எழும். நண்பர்கள் அல்லது உறவினர்கள் பிரச்சினையில் இருந்தால், அவர்களுக்கு ஆதரவாக நிற்பார்கள். இந்த குணமே அவர்களை நல்ல நண்பர்களாக மாற்றுகிறது.
அமைதியானவர்கள்
ஜூலையில் பிறந்தவர்கள் பார்க்க மிகவும் அமைதியானவர்களாக காட்சியளிப்பார்கள். தேவையில்லாமல் யாருடனும் சண்டையில் ஈடுபடமாட்டார்கள். அதனால் பலரும் இவர்களை பலவீனமானவர்களாக நினைக்கலாம். ஆனால் உண்மையில் இவர்கள் அதிக மன வலிமை கொண்டவர்கள் எப்பேற்பட்ட சவாலான சூழ்நிலைகளையும் எளிதில் சமாளிக்கும் திறன் கொண்டவர்கள்.
பொறுப்பானவர்கள்
ஜூலையில் பிறந்தவர்கள் பண விஷயத்தில் கவனமாக இருப்பார்கள். தேவையில்லாமல் செலவு செய்யமாட்டார்கள். பணத்தை அதிகம் சேமிப்பார்கள். இவர்களுக்கு நிதி பாதுகாப்பு முக்கியமான ஒன்றாக இருக்கம். இதனால் முதலீடு மற்றும் சேமிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
சிந்தித்து முடிவெடுப்பார்கள்
ஜூலை மாதத்தில் சிறந்தவர்கள் எந்த ஒரு முடிவையும் அவசரப்பட்டு எடுக்காமல் நன்கு யோசித்த பின்னரே எடுப்பார்கள். இதனால் இவர்கள் எடுக்கும் பல முடிவுகள் சரியாக இருக்கும்.
காதலில் உண்மையாக இருப்பார்கள்
ஜூலையில் பிறந்தவர்கள் காதல் விஷயத்தில் உண்மையாக இருப்பார்கள். ஒருவரை நேசித்தால் மனதார நேசிப்பார்கள். மேலும் உறவில் நேர்மை, நம்பிக்கை மற்றும் உணர்ச்சி பிணைப்பை அதிகம் எதிர்பார்ப்பார்கள். எப்பேற்பட்ட மோசமான சூழ்நிலைகளிலும் தனது துணைக்கு உறுதுணையாக, ஆதரவாக இருப்பார்கள். அதே சமயம், தங்கள் அன்பை புரிந்து கொள்ளாதவர்களிடம் இருந்து மெதுவாக விலகி செல்லும் குணமும் இவர்களிடம் உள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications