Latest Updates
-
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
விண்வெளியில் செக்ஸ் சாத்தியமா? நீங்கள் அறிந்திராத வியப்பூட்டும் உண்மைகள்!
விண்வெளியில் வாழ வேண்டும் என்ற ஆசை மற்றும் அவசியம் இயற்கை பேரழிவுகள் போதே மனித மனங்களில் நீங்காத நினைவாக மாறுகிறது. இந்த நிலையில், விண்வெளியில் வாழும் நிலை ஏற்பட்டால், அங்கு மனிதர்களால் உடலுறவு கொண்டு
பூமியில் எப்பொழுதெல்லாம் ஏதேனும் இயற்கை பேரழிவுகள் நிகழ்கிறதோ அப்பொழுதெல்லாம் மனிதர்களின் கவனம் விண்வெளியில் வாழ்க்கை நடத்துவதை பற்றி சிந்திக்க தவறுவதில்லை. ஏன் மற்றைய நாட்களில் விண்வெளி நினைவு வருவதில்லையா என்றால், கட்டாயமாக எண்ணுகிறோம், ஆனால் அது கிரகணங்கள் நிகழும் பொழுது, கலாம் ஐயாவின் நினைவு உண்டாகும் பொழுது என்று ஏதேனும் ஒரு சில நாட்களில் அதுவும் அந்த நிகழ்வின் தன்மையை பற்றி மட்டுமே எண்ணிப் பார்க்கிறோம்.

Image Source: tvtropes.org
விண்வெளியில் வாழ வேண்டும் என்ற ஆசை மற்றும் அவசியம் இயற்கை பேரழிவுகள் போதே மனித மனங்களில் நீங்காத நினைவாக மாறுகிறது. இந்த நிலையில், விண்வெளியில் வாழும் நிலை ஏற்பட்டால், அங்கு மனிதர்களால் உடலுறவு கொண்டு தங்கள் சந்ததியை - வம்சத்தை வளர்த்து விட முடியுமா? ஸ்பேஸில் உடலுறவு கொள்ள முடியுமா? அங்கு குழந்தை பிறக்குமா? பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும் போன்ற அனைத்து கேள்விகளுக்கும் மொத்தமாக விடை அளிக்கும் இந்த பதிப்பு! எனவே, இப்பதிப்பு உங்கள் ஆர்வப்பசிக்கு சுவையான உணவாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் வாருங்கள் பதிப்பிற்குள் செல்வோம்!

வாழ முடியுமா?
முதலில் மனிதர்கள் விண்வெளியில் சாதாரணமாக வாழ்க்கை நடத்த அவசியத் தேவையாக இருக்கும் விஷயங்கள் உணவு, நீர், காற்று. இம்மூன்றில் காற்றும் நீரும் கண்டுபிடிக்கப்பட்டதாக பல ஆராய்ச்சி அறிக்கைகள் தகவல்கள் வெளியிட்டுள்ளன. இந்நிலையில் மிச்சம் இருப்பது உணவு, விண்வெளியில் உணவை தயாரிக்கவும் மனித மூளை கட்டாயம் ஒரு யுக்தியை கண்டுபிடித்து, அதை அங்கு செயல்படுத்திவிடும். எனவே, இப்பொழுது விண்வெளி மனிதர்கள் வாழத் தகுதியானதாகிவிட்டது என்று வைத்துக் கொள்வோம்.
அங்கு வாழ்ந்தால் மனிதர்களால் உடலுறவு கொள்ளுதல், குழந்தை பெற்றுக் கொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபட முடியுமா என்று அடுத்து பார்க்கலாம்.

உடலுறவு கொள்ள முடியுமா?
நாசாவின் விண்வெளி ஆராய்ச்சியாளர்களில், ஒரு சிலர் ஸ்பேஸ் செட்டிலில் விண்வெளிக்கு பயணம் செய்யும் பொழுது, அந்த மிகச்சிறிய இடத்தில் உடலுறவு கொண்டதாக கூறப்படுகிறது; இந்த நிலையில் புவி ஈர்ப்பு விசை சுழியமாக இருப்பதால், உடலின் இரத்த அழுத்தம் மிகவும் குறைவாக இருக்கும்; மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உடல் செயல்பாடுகள் சாதாரணமாக இருக்காது.
இம்மாதிரியான அசாதாரண நிலையில் உடலுறவு கொள்வது என்பது மிகவும் கடினமான விஷயமாக தான் இருக்கும். விண்வெளியில் உடலுவு கொள்ள முடியும்; ஆனால், உடலுறவின் பொழுது கிட்டும் இன்பம், உச்சகட்ட உணர்வு போன்றவை மிகக்குறைவாக மட்டுமே ஏற்படும். ஏனெனில் விண்வெளியில் உடலுறவு கொள்ளும் பொழுது, பிறப்புறுப்பு ஈரமோ, மகிழ்ச்சியான உணர்வோ அந்தளவுக்கு ஏற்படவில்லை; ஈரம் இல்லாது உடலுறவில் ஈடுபடுவதால், மிகுந்த வலி ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கருத்தரிக்க முடியுமா?
உடலுறவு கொள்வதே மிகக் கடினமான விஷயமாக இருக்கும் பொழுது கருத்தரிப்பு நிகழ்வது என்பது யோசிக்க வேண்டிய விஷயமே! எல்லாவித எதிர்ப்பு சூழல்களையும் மீறி, தம்பதியர் தங்கள் தாம்பத்யத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டால், பெண்ணின் உடல் ஆரோக்கியம் கொண்டு இருந்தால் கட்டாயம் கருத்தரிப்பு நடக்கும். உடலுறவு பல போராட்டங்களுக்கு பின்னர் நடந்து முடிவதால், இந்த கருத்தரிப்பு நிகழ்வதில் காலதாமதம் நிகழலாம்.

குழந்தை பிறக்குமா?
என்னதான் வெற்றிகரமாக கருத்தரிப்பு நிகழ்ந்து, அன்னையின் கருப்பையில் குழந்தை வளரத் தொடங்கினாலும், மாறுபட்ட சூழ்நிலை காரணமாக வயிற்றில் வளரும் கருவின் வளர்ச்சியில் குறைபாடு அல்லது வளர்ச்சி தாமதமாதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறலாம் என்று கருத்து தெரிவிக்கப்படுகிறது. ஆனால், பூமியில் எப்படி கர்ப்ப காலம் முடிந்து குழந்தை பிறப்பு நிகழ்கிறதோ, அதேபோல் அங்கும் சரியான வளர்ச்சியை குழந்தை அடைந்த பின் குழந்தை பிறப்பு நிகழும்.

கர்ப்பிணியின் நிலை எப்படி இருக்கும்?
பூமியில் இருக்கும் கர்ப்பிணிகளின் நிலையே கர்ப்பகால உடல் பலவீனங்களால், உடலின் ஹார்மோன் மாற்றத்தால் சற்று பாவமாக தான் இருக்கும். இந்நிலையில் விண்வெளியில் கர்ப்பமடைந்த பெண்களின் நிலை யோசனைக்கும் எட்டாத கொடூரமான நிலையாக தான் இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஏனெனில், விண்வெளியில் உள்ள ஆச்சிஜன் பற்றாக்குறை, புவிஈர்ப்பு விசை குறைவு இந்த மாற்றங்கள் சாதாரண உடல் நலம் கொண்ட மனிதர்களுக்கே வாந்தி, மயக்கம், பலவீனம் போன்ற குறைப்பாடுகளை ஏற்படுத்தும். இதில் கர்ப்பிணிகளின் உடல் நிலையை பற்றி சொல்லவே வேண்டியதில்லை; சிந்தனைக்கும் எட்டாத உடல் சித்திரவதைகள் அவர்களுள் ஏற்படும்.

பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும்?
விண்வெளியில், வேறுபட்ட சூழலில் வளர்ந்து பிறக்கும் குழந்தை, பூமியில் பிறக்கும் குழந்தையை விட மிகவும் மெலிந்த தேகம், குன்றிய உடல் உறுப்புகள் வளர்ச்சி, மனவளர்ச்சி குன்றி பிறக்கும் வாய்ப்புகள் உண்டு; சாதாரணமான குழந்தை பிறப்பு நிகழ்வது மிகவும் அரிது என்று கூறப்படுகிறது. பிறந்த குழந்தைகளின் பார்க்கும், கேட்கும், மூளையின் அறிவுத்திறன் என அனைத்து விதமான திறன்களிலும் சற்று பின்தங்கல் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு கர்ப்பம் அடைந்த எலிகளை விண்வெளிக்கு அனுப்பி, நடத்தப்பட்ட சோதனை முடிவுகள் மூலம் மனிதர்களுக்கு இவ்வாறு நிகழலாம் என்று கணக்கிடப்பட்ட ஆய்வு முடிவுகள் ஆகும். அனுப்பப்பட்ட எலிகளில் ஒருசில எலிகளுக்கு பூமியில் பிறந்த குழந்தைகளை போன்றே குழந்தைகள் பிறந்ததாகவும், பெரும்பாலான எலிகளுக்கு மேற்கூறிய குறைபாடுகளுடன் குழந்தை பிறந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

தாயின் நிலை என்ன?
மேற்கண்ட எலிகளின் ஆய்வில் மிகவும் ஆரோக்கியமாக இருந்த கர்ப்பிணி எலிகள் மட்டுமே விண்வெளிக்கு அனுப்பப்பட்டன. ஆனால், பெரும்பாலான எலிகள் குறைபாடு கொண்ட குழந்தையை பெற்று எடுத்து, முன்பிருந்த உடல் எடையில் இருந்து பாதியாக இளைத்து, மிகவும் நலிந்த உடலமைப்பை பெற்று விட்டதாக கண்டறியப்பட்டுள்ளது; ஆரோக்கியமான குழந்தைகளை பெற்று எடுத்த அன்னை எலிகளின் நிலையும் ஓரளவிற்கு இப்படியே!
இம்மாதிரியான உடல் நலம் கொண்ட தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டி அவர்களை வளர்ப்பது என்பது மிகவும் கஷ்டமான காரியம். குழந்தைகளுக்கு ஊட்டி, தன் உடல் நலனையும் பார்த்துக் கொள்வது என்பது மிகவும் கடினமான காரியமே! தாய்மார்கள் உடல் நலத்தை இழப்பதினால், அவர்களின் மனநலம் மற்றும் அன்றாட செயல்பாடுகளும் பாதிக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications











