மாலை அல்லது இரவில் கர்ப்ப பரிசோதனை செய்யலாமா?

Written By:
Subscribe to Boldsky

குழந்தை என்பது ஒவ்வொரு தம்பதிகளுக்கும் கிடைக்கும் ஒரு மிகப்பெரிய வரம்.. என்ன தான் ஒருவர் மீது கோபம் என்ற ஒன்று இருந்தாலும், அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தியை கேட்ட உடன் இருந்த கோபங்கள் எல்லாம் மறைந்து அவர் மீது பாசமும் அக்கறையும் பிறக்கும்..! குழந்தை என்ற ஒன்று வந்த உடன் தம்பதிகள் இன்னும் நெருக்கமாகின்றனர்.. பெண்களுக்கான கவனிப்பும் அதிகரிக்கிறது...!

நாட்கள் தள்ளி போனதும், முன்னரை போல மருத்துவ மனைக்கு சென்று பெரும்பாலோனோர் பரிசோதனை எடுத்துக் கொள்வதில்லை.. மாறாக வீட்டிலேயே செய்யக் கூடிய கர்ப்ப பரிசோதனை சாதனம் மூலமாக, எளிதாகவும், விரைவாகவும், நினைத்த நேரத்தில் உடனடியாக அதிக செலவு மற்றும் அலைச்சல் இல்லாமல் பரிசோதனை எடுத்துக் கொள்கிறோம்...! இந்த பரிசோதனையை காலையில் எடுப்பது மிகவும் துல்லியமானது தான்.. ஆனால் கட்டாயமாக இந்த பரிசோதனையை காலையில் தான் எடுக்க வேண்டுமா? என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாலையிலும் எடுக்கலாம்!

மாலையிலும் எடுக்கலாம்!

கர்ப்ப பரிசோதனையை மாலையிலும் கூட எடுக்கலாம்.. உங்களுக்கு நாட்கள் தள்ளி போனதால், உடனடியாக கர்ப்ப பரிசோதனையை எடுத்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால், நீங்கள் மாலையில் கூட இந்த கர்ப்ப பரிசோதனையை எடுக்கலாம்..!

மாலை பரிசோதனை பாசிடிவ்?

மாலை பரிசோதனை பாசிடிவ்?

நீங்கள் மாலையில் இந்த சிறுநீர் கர்ப்ப பரிசோதனையினை செய்து உங்களது கர்ப்பமானது பாசிடிவ்வாக வந்தால், உங்களது கர்ப்பம் நிச்சயமாக பாசிடிவ்வாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே உங்களது கர்ப்பம் உறுதி என்று கூட வைத்துக் கொள்ளலாம்..! உங்களது கர்ப்பத்திற்கான ஹார்மோன் அதிகமாக இருப்பதனால் தான் உங்களுக்கு மாலையில் கூட பாசிடிவ் ரிசல்ட் கிடைத்துள்ளது..

நெகட்டிவ்?

நெகட்டிவ்?

உங்களுக்கு மாலையில் செய்த கர்ப்ப பரிசோதனையில் ரிசல்ட் நெகட்டிவ் ஆக வந்துள்ளது என்றால் நீங்கள் கர்ப்ப பரிசோதனையை காலையில் செய்து கொள்ளலாம்.

காலை பரிசோதனை

காலை பரிசோதனை

இரவு தூங்குவதில் இருந்து, காலை எழுகின்ற வரை சிறுநீரானது உங்களது சிறுநீர் பாதையில் தேங்கி இருக்கும். இதனால், உங்களது கர்ப்பத்திற்கான ஹார்மோன்கள் அதில் அதிகம் இருக்கும். எனவே காலையில் எழுந்த உடன் செய்யும் கர்ப்ப பரிசோதனையானது மிகவும் துல்லியமானதாக இருக்கும்.

ஏதாவது குடிக்கலாமா?

ஏதாவது குடிக்கலாமா?

கர்ப்ப பரிசோதனைக்காக சிறுநீரை சேகரிக்கும் முன்னர் ஏதாவது ஜூஸ் அல்லது பானங்களை பருகலாமா என்பது பலருடைய கேள்வியாக உள்ளது.. ஆனால் சிறுநீரை சேகரிக்கும் முன்னர் ஜூஸ் அல்லது சில வகை திரவ ஆகாரங்களை பருகுவதால் ஒருவேளை டெஸ்ட் ரிசல்ட் மாறுபடலாம். அதற்காக உங்களது உடலை வறட்சியாகவும் வைத்திருக்க கூடாது. எனவே குறிப்பிட்ட அளவு நீர் அருந்தலாம்.

எப்படி டெஸ்ட் செய்வது?

எப்படி டெஸ்ட் செய்வது?

காலையில் முதன் முதலில் வரும் சிறுநீரை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் கர்ப்ப பரிசோதனை கருவியில் சிறுநீரை ஊற்றுவதற்காக கொடுக்கப்பட்டுள்ள பகுதியில் சில துளிகள் சிறுநீரை விட வேண்டும். இதன் பின்னர், இரண்டு கோடுகள் வந்தால், நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தமாகும். ஒரே ஒரு கோடு வந்தால், நீங்கள் கர்ப்பமாக இல்லை என்று அர்த்தமாகும்.

எவ்வளவு உறுதியானது?

எவ்வளவு உறுதியானது?

கர்ப்ப பரிசோதனையானது மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்ததாகும். நீங்கள் இதனை சரியான முறையில் பயன்படுத்தினால், இது 100 க்கு 99 சதவீதம் உண்மையானதாக இருக்கும். இந்த கர்ப்ப பரிசோதனையானது, உங்களது சிறுநீரை கொண்டு பரிசோதனை செய்யப்படுவதாகும். இந்த ஹார்மோன் HCG என்று அழைக்கப்படுகிறது. இதனை கொண்டு நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா, இல்லையா என்பதை கண்டறியலாம்.

கவனம் தேவை

கவனம் தேவை

நீங்கள் பயன்படுத்தும் கர்ப்ப பரிசோதனை கருவியானது, காலாவதியானதாக இருந்தால் அது தவறான ரிசல்ட்டை உங்களுக்கு தரலாம். எனவே காலாவதியான கர்ப்ப பரிசோதனை கருவியை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. எனவே எப்போதும் காலாவதி தேதி எப்போது என்று கண்டறிந்து கர்ப்ப பரிசோதனை கருவியை வாங்குவது நல்லது.

எங்கு கிடைக்கும்?

எங்கு கிடைக்கும்?

இந்த கர்ப்ப பரிசோதனை கருவியானது, உங்களது அருகில் உள்ள மருந்து கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் போன்ற இடங்களில் கிடைக்கும். இவை மிக குறைந்த விலையிலேயே கிடைக்க கூடியது தான்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can We Take Pregnancy Test At Night or Evening

Can We Take Pregnancy Test At Night or Evening
Story first published: Tuesday, January 2, 2018, 11:00 [IST]