அனஸ்தீஸ்யா கொடுத்த பிறகு இதெல்லாம் நடக்கும் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

சமீப காலங்களாக பெரும்பாலானோருக்கு சர்வ சாதரணமாக சிசேரியன் அறுவை சிகிச்சையின் மூலமே குழந்தை பிறக்கிறது. பிரசவ வலியே தெரியாமல் இருக்கவும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் கர்பிணிகளுக்கு அனஸ்தீஸ்யா கொடுக்கப்படும். Epidural எனப்படும் அனஸ்தீஸ்யா தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இது உடலில் செலுத்தப்பட்ட சில மணி நேரங்களுக்கு மதமதப்பான உணர்வைத் தருகிறது.

Side effects of anesthesia

இதனைப் பற்றி இன்னும் விவரமாகவும் அதன் விளைவுகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அனஸ்தீஸ்யா என்ன செய்யும் :

அனஸ்தீஸ்யா என்ன செய்யும் :

இது உடலில் செலுத்தப்பட்டால் அந்த குறிப்பிட்ட பகுதியை மட்டும் மதமதப்பாகச் செய்திடும் இதனால் வலியை நம்மால் உணர முடியாது. இதன் முக்கிய நோக்கமே வலியை உணரச் செய்யக்கூடாது என்பது தான்.

முதுகுத்தண்டில் இருக்கும் நரம்பில் இந்த அனஸ்தீஸ்யா ஊசி போடப்படும். கீழ் முதுகில் இந்த ஊசி போடப்படுவதால் அரை மணி நேரத்தில் இடுப்பிலிருந்து கால் வரை மதமதப்பாக இருக்கும். அப்போது வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே எடுத்து விடுவார்கள்.

நான்கு முதல் எட்டு மணி நேரத்திற்குள் அன்ஸ்தீஸ்யா குறைந்த மெல்ல மெல்ல அந்த வலியை உணர ஆரம்பிப்பீர்கள்.

கவனிக்க :

கவனிக்க :

bupivacaine, chloroprocaine,lidocaine ஆகியவற்றை சரியான விகிதத்தில் சேர்த்து கொடுக்க வேண்டும். முறையான மருத்துவ ஆலோசனையுடன் மட்டுமே இதனை மேற்கொள்ள வேண்டும். இது உடலில் செலுத்தியவுடன் பிரசர் சரிபார்க்க வேண்டும்.

இந்த ஊசி கொடுத்தவுடன் லோ பிரசர் ஆகும் என்பதால் ட்ரிப்ஸ் ஏற்றப்படும். இது போடப்படும் போது ஒரேயிடத்தில் குத்துகிற மாதிரியான வலி ஏற்பட்டாலோ அல்லது ஷாக் அடிப்பது போல உணர்ந்தாலோ உடனடியாக மருத்துவரிடம் சொல்ல வேண்டும். எபிடியூரல் ஸ்பேஸில் தான் ஊசி போடப்பட வேண்டும். அதிலிருந்து சற்று விலகி ஊசி போடப்பட்டால் மேற்சொன்ன விளைவுகள் ஏற்படும்.

இதனால் ஏற்படும் பின் விளைவுகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். இடது பக்கமாக திரும்பி முதுகை முடிந்தளவு வளைத்தோ அல்லது உட்காரச் சொல்லி முன்பக்கமாக குனியச் சொல்லியோ தான் இந்த அனஸ்தீஸ்யா போடப்படும். இப்படிச் செய்வதால் இதன் தீவிரம் இருக்கும்.

Regular Epidural மற்றும் Combined Spinal-Epidural (CSE) என இன்றைக்கு இரண்டு வகையான அனஸ்தீஸ்யா பயன்படுத்தப்படுகிறது.

சிறுநீர் :

சிறுநீர் :

இது இடுப்பிலிருந்து கால் முழுமைக்கும் மதமதப்பு உணர்வை ஏற்படுத்தி விடுவதால் சிறுநீர் பைக்கும் மதமதப்பு உணர்வே இருக்கும். சிறுநீர் பை எப்போது நிரம்பியது, எப்போது சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற உணர்வு உங்களுக்கு தோன்றாது. மதமதப்பு குறைந்தவுடன் இது நார்மலாகிடும்.

குறைந்த ரத்த அழுத்தம் :

குறைந்த ரத்த அழுத்தம் :

ரத்த அழுத்தம் குறைவது சாதரணமாக எல்லாருக்கும் இருக்கும். இந்த ஊசி நரம்பில் போடப்படுவதால் ரத்த வோட்டம் குறையும். உங்களின் ரத்த அழுத்தம் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

சருமம் :

சருமம் :

அனஸ்தீஸ்யா கொடுப்பதால் சிலருக்கு சருமத்தில் அலர்ஜி ஏற்படவும் வாய்புண்டு.ஆரம்ப காலத்திலேயே மருத்துவரிடம் காண்பித்தால் எளிதாக தீர்த்திடலாம்.

முதுகு வலி :

முதுகு வலி :

முதுகில் இந்த ஊசி போடப்பட்டு கிட்டதட்ட எட்டு மணி நேரம் வரை மதமதப்பாக இருக்கச் செய்து பின்னர் சீராவதால் பலருக்கும் முதுகு வலி ஏற்படும் . கடினமான பொருட்களை தூக்குவதாலும் பெரும்பாலானோருக்கு முதுகு வலி ஏற்படும்.

தலைவலி :

தலைவலி :

முதுகுத்தண்டில் போடப்படும் அனஸ்தீஸ்யா ஊசியினால் போடப்படுவதால் சிலருக்கு தலைவலி ஏற்படும். post-dural puncture headache என்றும் இதனை சொல்வார்கள்.

சிசேரியன் செய்யப்படுகிற பெண்களில் ஒரு சதவீதத்தினருக்கு தலைவலி ஏற்படுகிறது. முதுகுத்தண்டில் ஸ்பைனல் ஃப்ளூயிட் லீக் ஆவதால் தலைவலி ஏற்படுகிறது.

பொது :

பொது :

இதைத் தவிர, ஃபிட்ஸ், நரம்பு கோளாறு ஏற்படும் . இது மிகவும் அரிதான ஒன்றுதான். ஆனாலும் முறையான மருத்துவ ஆலோசனையுடன் மட்டுமே அனஸ்தீஸ்யா கொடுக்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Side effects of anesthesia

Side effects of anesthesia
Story first published: Saturday, November 4, 2017, 17:38 [IST]
Subscribe Newsletter