இது போன்று ஒரு தாய்ப்பால் கொடுக்கும் முறையை நீங்கள் இதுவரை கண்டிருக்க முடியாது!

Written By:
Subscribe to Boldsky

பெண்கள் இளம் வயதில் இருக்கும் வரை நல்ல உடல்வாகுடனும், கட்டுக்கோப்பான உடலமைப்புடன் ஆரோக்கியமாகவும் தங்களுக்கு விருப்பமானதை செய்து கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் திருமணம் ஆன உடன் பல பெண்கள் தங்களது உடல் நலத்தில் அக்கறை காட்டுவது இல்லை...

உணவு மீதமாக கூடாது என்று தன் பசிக்கு மேல் உணவை மிக சிரமப்பட்டு சாப்பிடுகிறார்கள், சிலரோ சரியான நேரத்திற்கு சாப்பிடுவதே கிடையாது. அதுவே குழந்தை பிறந்துவிட்டால் பெண்களின் உடல் எடை அதிகரித்துவிடுகிறது. இதுவும் இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டால் போதும், உடல் எடை நன்றாகவே அதிகரித்துவிடும். அதன் பின் பெண்கள் பெரும்பாலும் அதை குறைக்க நினைத்தாலும் கூட, அதற்கான நேரம் கிடைப்பதில்லை..

இவ்வாறு இருக்கும் பெண்களுக்கு உதாரணமாக தான் சார்லீ பேனர் என்ற வெளிநாட்டு பெண் தனது உடல் ஆரோக்கியத்தையும், தனது மூன்று குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் வேலையையும் ஒரே நேரத்தில் செய்கிறார். அப்படி இவர் என்ன யுக்தி கையால்கிறார் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல் எடை அதிகரிப்பு

உடல் எடை அதிகரிப்பு

சார்லீ பேனர் என்பவர் தற்போது மூன்று குழந்தைகளுக்கு தாய். இவர் தனது முதல் கர்ப்பத்தின் போது 80 பவுண்ட் உடல் எடை அதிகரித்தார். அதன் பின் இரண்டாவது பிரசவத்தின் போது, 60 பவுண்டுகள் எடை அதிகரித்தார். ஆனால் அவர் மூன்றாவது பிரசவத்தின் போது 25 பவுண்டுகள் மட்டுமே உடல் எடை அதிகரித்தார். அவர் மூன்றாவது குழந்தை பிறந்த போது யோகவை நம்ப தொடங்கினார்.

யோகா

யோகா

தாய்ப்பால் கொடுக்கும் யோகாவானது தாய்ப்பால் கொடுக்கும் முறையை எளிமையாக்குகிறது என்றும் இது ஒவ்வொரு தாய்க்கும் மிகவும் சிறப்பான தீர்வாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

29 வயது!

29 வயது!

இவருக்கு இப்போது 29 வயதாகிறது. இவர் தற்போது நல்ல உடல்வாகுடன் இருக்கிறாராம். தன் உடலையும் ஆரோக்கியத்தையும் சிறப்பாக்கிய யோகாவிற்கு இவர் தனது நன்றியை தெரிவிக்கிறார். மேலும், இந்த யோகாவை செய்வதற்கு உதவிய தனது கணவர் மற்றும் யோகா ஆசிரியான தனது அத்தைக்கும் இவர் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

மூன்று குழந்தைகள்

மூன்று குழந்தைகள்

இவருக்கு அழகான 5 வயது, இரண்டு வயது மற்றும் ஒரு வயது என மொத்தம் மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த மூன்று குழந்தைகளையும் இவர் தனி ஆளாக கவனித்துக் கொள்கிறார். இவர் யோகாவுடனும் தன் குழந்தைகளுடனும் நாள் முழுவதும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

மூன்றாவது குழந்தை

மூன்றாவது குழந்தை

எனது மூன்றாவது குழந்தை பிறப்பதற்கு இரண்டு வருடங்கள் முன்னர் இருந்தே நான் எனது யோக பயணத்தை ஆரம்பித்து விட்டேன் என்றும் இவர் தெரிவித்துள்ளார். மேலும் இவர் கூறும் போது நான் இது போன்று யோகா செய்வதை மிகவும் விரும்புகிறேன்.. எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என்றும் கூறியுள்ளார்.

மறுமலர்ச்சி

மறுமலர்ச்சி

இவர் தனக்கு கிடைத்துள்ள இந்த வாழ்க்கைப்பாதையை என்றுமே கைவிடபோவதில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த யோகா எனக்குள் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.. மேலும் இது போன்ற சாதனைகள் புரிய நான் முயற்சி செய்து கொண்டே இருப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

குழந்தைகளுடன் நேரம் செலவிடுதல்

குழந்தைகளுடன் நேரம் செலவிடுதல்

பிறந்த குழந்தையை தாய் தான் எப்போதும் அரவணைத்து பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். இதனை சார்லீ யோகாவுடன் சேர்ந்து வெகு சிறப்பாக செய்கிறார். தனது அன்றாட வேலைகளையும் இவரால் யோகா செய்வதால் சிறப்பாக செய்ய முடிகிறதாம். அதுமட்டுமின்றி தனது மூன்று குழந்தைகளுடனும் நல்ல முறையில் தனது முழு நாளையும் இவரால் கழிக்க முடிகிறது.

இடை நிறுத்தம்

இடை நிறுத்தம்

ஆரம்பத்தில் என்னுடைய சொந்த முயற்சியால் தான் யோகா செய்ய தொடங்கினேன். அதன் பின் இடையில் கொஞ்ச நாட்கள் இதனை இடை நிறுத்தம் செய்து விட்டு, என் அழகான குழந்தையை கவனித்துக்கொண்டேன். என் குழந்தைகளுடன் நேரம் செலவளிப்பது மட்டுமே எனக்கு பெரியதாக தெரிந்தது...!

புதியமுறையில் யோகா

புதியமுறையில் யோகா

யோகா செய்யாததால் எனக்கு உடல் எடை கூடியது. அப்போது தான் நான் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டே யோகா செய்யும் முறையை பற்றி கேள்விப்பட்டேன்.. அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பின் கொஞ்சம் கொஞ்சமாக அதை முயற்சி செய்ய ஆரம்பித்தேன். எனது அத்தை எனக்கு யோகா பயிற்சிகளை முறையாக கற்றுக்கொடுத்தார்..!

குழந்தையுடன் தொடர்பு

குழந்தையுடன் தொடர்பு

குழந்தையுடன் தாய்க்கு அதிக நெருக்கத்தை கொடுப்பது, சரும தொடர்பும், தாய்ப்பால் கொடுப்பதும் தான்.. என்னால் இந்த தாய்ப்பால் கொடுக்கும் யோகாவை செய்வதால், முன்பை விட மிக நெருக்கமாக என் குழந்தையுடன் இணைக்கமாக முடிகிறது. பார்வை பரிமாற்றங்கள் உண்டாகின்றன. இந்த கலை ஒரு அற்புதமானது மற்றும் சக்தி வாய்ந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Image courtesy

பெண்களின் உதாரணம்

பெண்களின் உதாரணம்

பெண்களுக்கு சார்லீ ஒரு முன் உதாரணமாக விளங்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தாய்மை அடைந்ததும் நமக்கு என எந்த ஒரு வாழ்க்கையும் இல்லை என்று பெண்கள் நினைத்து விட கூடாது. உங்களது ஆரோக்கியத்தையும் குழந்தைகளையும் மேம்படுத்த இந்த யோகா ஒரு மிகச்சிறந்த வழியாக உள்ளது.

முடியாதது ஒன்றும் இல்லை

முடியாதது ஒன்றும் இல்லை

இந்த உலகில் முடியாதது என்று எதுவுமே கிடையாது. நாம் நினைத்தால் எதை வேண்டுமானலும் சாதிக்கலாம். நான் எனது சாதனையை நோக்கி தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

never seen breastfeeding positions like this

ever seen breastfeeding positions like this