உடலுறவின் போது ஆண்கள் இதை சுத்தமாக கண்டுகொள்ள மாட்டார்கள்! வருந்தும் பெண்கள்!

Written By:
Subscribe to Boldsky

பெண்கள் தங்களது அழகு மற்றும் பிற விஷயங்கள் பற்றி அதிகமாக கவலைப்படுகிறார்கள். உடலுறவின் போதும் கூட நாம் அழகாக தான் இருக்கிறோமா? என்று தான் பெரும்பான்மையான பெண்கள் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் பொதுவாக ஆண்கள் இது பற்றி எல்லாம் உடலுறவின் போது நினைப்பது கூட இல்லை. பெண்கள் தான் தனது மார்பகத்தின் அளவு மற்றும் மேக்கப் குறித்து தனது துணை என்ன நினைப்பாரோ என்று கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெண் உறுப்பு நாற்றம்

பெண் உறுப்பு நாற்றம்

ஆண்கள் பொதுவாக உடலுறவின் போது பெண் உறுப்பில் உள்ள நாற்றம் குறித்து அதிகம் கவலைப்படுவதில்லை. ஆனால் பெண்கள் தான் இது குறித்து அவர் ஏதாவது தவறாக நினைத்துவிடுவாரோ என்று பெரும் கவலை அடைகிறார்கள்.

உடலில் உள்ள முடிகள்

உடலில் உள்ள முடிகள்

பெண்கள் தங்களது அக்குள் பகுதிகள், கால்கள், மற்றும் கைகளில் உள்ள முடிகளை கண்டால் அவர் என்ன நினைப்பார் என்று வருத்தம் அடைகிறார்கள். ஆனால் ஆண்கள் உடலுறவின் போது இதை எல்லாம் கவனிப்பது கிடையாது.

உடலுறவுக்கு பின்னால் வேண்டும் என்றால், இதனை கவனித்து தேவையற்ற முடிகளை அகற்ற கூறுவார்கள். அதற்காக உடலில் கரடியை போல பெண்கள் முடிகளை வளர்த்து வைத்துக்கொள்ள கூடாது. அதே சமயம் சிறிய முடிக்கு எல்லாம் கவலை பட தேவையில்லை.

உடலுறவின் போது சப்தம்

உடலுறவின் போது சப்தம்

உடலுறவின் போது சத்தம் போடுவது ஆண்களை மகிழ்ச்சியடைய செய்யும் என்று சில பெண்கள் பொய்யாக சத்தம் போடுவார்கள். ஆனால் ஆண்கள் இதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அதே சமயம் அந்த சப்தம் அவர்களுக்கு பிடிக்கும் என்றாலும் நீங்கள் படத்தில் வருவது போல் கத்த வேண்டும் என்ற அவசியம் எல்லாம் கிடையாது.

ஹேர் ஸ்டைல் பற்றி கவலையா?

ஹேர் ஸ்டைல் பற்றி கவலையா?

உடலுறவின் போது ஒரு ஆண் உங்களது முடி இப்படி இருக்கா, அப்படி இருக்கா என்று எல்லாம் பார்க்கமாட்டார். உங்கள் முகத்தில் இருக்கும் மேக்கப் பற்றியும் அவருக்கு கவலை இருக்காது. நீங்கள் அழகாக தோன்ற வேண்டும் என்பதற்காக, காஜல், லிப்ஸ்டிக், லிப்கிளாஸ் எல்லாம் போட்டு கொண்டால், அந்த சமயத்தில் அது அவருக்கு அசௌகரியமாக இருக்கும்.

உடலில் உள்ள குறைகள்

உடலில் உள்ள குறைகள்

உங்களது முகத்தில் இருக்கும் பருக்கள், உடலில் உள்ள காயங்கள், தழும்புகள் எல்லாம் ஆண்களை எந்த விதத்திலும் உடலுறவின் போது திசை திருப்பாது. எனவே அவை குறித்து நீங்கள் அதிகமாக வருத்தம் கொள்ள தேவையில்லை.

முகத்தில் இருக்கும் மகிழ்ச்சி

முகத்தில் இருக்கும் மகிழ்ச்சி

ஆண் உங்களது முகத்தில் எவ்வளவு மேக்கப் உள்ளது, ஹேர் ஸ்டைல் எப்படி உள்ளது என்பதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டார். உங்களது முக பாவனைகள் எப்படி இருக்கிறது, உங்களது வெட்கம் போன்றவை தான் ஒரு ஆணை உணர்ச்சி வயப்ப்பட செய்யும். எனவே நீங்கள் நடிக்காமல், உங்களது உணர்வுகளை வெளிப்படையாக வெளிப்படுத்தினாலே போதுமானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

men do not think about this during love making

men do not think about this during love making
Story first published: Thursday, August 17, 2017, 17:33 [IST]
Subscribe Newsletter