கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய காய்கறி மற்றும் பழங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

திருமணமான பெண்கள் மற்றும் அவரது குடும்பத்தினரின் பெருங்கனவாக இருப்பது அந்த குழந்தைப் பேறு தான். குழந்தைப் பேறு என்பது ஒவ்வொரு பெண்ணுமே தன் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாக இருக்கும்.

நிச்சயமாக வாழ்க்கையில் மறக்கவே முடியாத அந்த சம்பவம் சிறந்த முறையில் இருக்க வேண்டும் என்றால் பெண்களே... நீங்கள் கொஞ்சம் ஜாக்கிறதையாக இருக்க வேண்டியது அவசியம். பிற நாட்களில் எப்படி இருக்கிறீர்களோ கவலை இல்லை ஆனால் கர்ப்பத்தின் போதாவது மட்டும் நீங்கள் உங்களையும் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் ஆரோக்கியத்துடன் பராமரிப்பது மிகவும் அவசியமாகும்.

நீங்கள் ஆரோக்கியத்துடன் இருக்க உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியமாகும். உணவுக்கட்டுப்பாடு என்றதும். மிகத்தீவிரமான டயட் என்று நினைத்து யாரும் பயப்பட வேண்டாம். இது மிகவும் எளிமையானது தான்.

Avoid these fruits and vegetables during pregnancy

முதலில் நீங்கள் எப்படியிருந்தீர்கள், உங்களுக்கு பிடித்தமான உணவு என்றெல்லாம் கவலைப்படாதீர்கள். கர்ப்பமானதும், நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று உறுதி செய்யப்பட்டதும் இதையெல்லாம் சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பப்பாளி :

பப்பாளி :

இது அனைவருக்கும் தெரிந்ததே. கர்ப்பமாக இருக்கும் போது பாப்பாளிப் பழம் சாப்பிடவே கூடாது என்று மிரட்டி வைத்திருப்பார்கள். அது ஏன் தெரியுமா? பப்பாளியை நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டால் உங்களின் டெலிவரி தேதிக்கு முன்னரே பிரசவம் நடப்பதற்கான அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

இது குழந்தைக்கு நல்லதல்ல. கர்ப்பமான மூன்று மாதத்திற்குள்ளும், கடைசி மாதத்திலும் பப்பாளியை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

அன்னாசிப்பழம் :

அன்னாசிப்பழம் :

அன்னாசிப்பழத்தில் அதிகப்படியான ப்ரோமிலைன் இருக்கும். இவை கர்ப்பிணிகளுக்கு நல்லதல்ல. முதல் ட்ரைம்ஸ்டரில் அன்னாசிப்பழம் கண்டிப்பாக தவிர்த்திட வேண்டும். ஆரம்ப கட்டத்தில் அன்னாசிப்பழ சாப்பிட்டால் கருக் கலைந்திடும்.

திராட்சை :

திராட்சை :

கர்ப்பமான பெண்களுக்கு ரத்த சோகையை தடுக்க பழங்களை நிறைய சாப்பிடச்சொல்வார்கள். அப்படி சாப்பிடும் போது கண்டிப்பாக திராட்சையை நீங்கள் தேர்ந்தெடுத்தால் அதனை இன்றோடு விட்டு விடுங்கள்.

ஆம், கர்ப்பிணிப்பெண்கள் திராட்சை சாப்பிடக்கூடாது.அதில் ஏராளமான ரசாயனங்கள் தெளிக்கப்பட்டிருக்கும் என்பதை விட, திராட்சையில் இருக்கும் அதிக அமிலத்தன்மை உங்களை பாதித்திடும்.

கத்திரிக்காய் :

கத்திரிக்காய் :

நம் வீடுகளில் அடிக்கடி பயன்படுத்தும் காய் இது. தினமும் அரை கத்திரிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் அது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஆபத்து. அதோடு கத்திரிக்காயில் இருக்கும் சத்து, மாதவிடாயை வரச் செய்திடும். இதனால் கர்ப்பத்தின் போது இந்தக்காய் சாப்பிடக்கூடாது.

பெருஞ்சீரகம் :

பெருஞ்சீரகம் :

கர்ப்பிணிகள் பெருஞ்சீரகம் மற்றும் மல்லி விதைகளை தவிர்ப்பது நல்லது. இவை அதிகமானால் ஆபத்தையே ஏற்படுத்திடும். இது நம் உடலில் ஃபைட்டோ ஈஸ்ட்ரஜனை அதிகப்படுத்திடும். இதனால் கர்பப்பை வலுவிழக்க வாய்ப்புகள் உண்டு.

குழந்தை பிறந்த பிறகு இதனை நீங்கள் தாரளமாக எடுத்துக் கொள்ளலாம். அதன் பிறகு இது உங்கள் கர்பப்பையை சுத்தப்படுத்திடும்.

எள் விதைகள் :

எள் விதைகள் :

ரத்த சோகை இருப்பவர்களுக்கான மருந்து எள். அதனை கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது. சிலருக்கு இது கருக்கலைப்பை ஏற்படுத்திடும். கர்பப்பையின் தசைகளை தளர்த்திடும். முதல் ட்ரைம்ஸ்டரில் இதனை நீங்கள் முற்றிலுமாக தவிர்த்திடல் வேண்டும்.

கர்ப்பமாக இருக்கும் போது நீங்கள் தாரளமாக நட்ஸ் மற்றும் உலர் பழங்களை சாப்பிடலாம்.

வெந்தயம் :

வெந்தயம் :

அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களில் ஒன்று. வெந்தயத்தில் இருக்கும் தாது, நம் கர்பப்பையை வலுவிலக்கச் செய்திடும். அதனால் குழந்தை தங்காது. கர்ப்பமாக இருக்கும் போது இதனை தொடர்ந்தால் உங்கள் குழந்தை ப்ரீமெச்சூர் பேபியாக பிறக்க அதிக வாய்ப்புகள் உண்டு.

சில நேரங்களில் கர்ப்பிணிகளுக்கு இது அலர்ஜியைக்கூட ஏற்படுத்திடும்.

முட்டை :

முட்டை :

சமைக்காத பச்சை முட்டை, ஆஃப் பாயில் போன்றவற்றை சாப்பிடாதீர்கள். அதில் இருக்கும் salmonella என்ற பாக்டீரியா நீங்கள் சாப்பிடும் உணவை விஷமாக்கிடும். சில நேரத்தில் வயிற்றுப்போக்கு, வாந்தி, தலைவலி, வயிற்று வலி போன்றவற்றை ஏற்படுத்தும்.

இது குழந்தைக்கு ஆபத்து ஆதோடு உங்களின் நோயெதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்திடும். நீர்ச்சத்தும் குறையும் என்பதால் உங்களுக்கு பிற உபாதைகள் ஏற்படுத்திடும்.

முட்டை கொண்டு தயாரிக்கப்படும் மயோனைஸ் ஆகியவற்றையும் நீங்கள் சாப்பிடாதீர்கள்.

முளைகட்டிய பயிறு :

முளைகட்டிய பயிறு :

பயிறு மற்றும் தானிய வகைகள் சத்தானது என்று எடுத்துக் கொள்ளப்படுவது வழக்கம். ஆனால் முளைகட்டிய பயிறு வகைகளை பச்சையாக அப்படியே சாப்பிடாதீர்கள். அதிலிருக்கும் பாக்டீரிட்யா பிறத்தொல்லைகளை ஏற்படுத்திடும்.

 முழு தானியங்கள் :

முழு தானியங்கள் :

முழு தானியங்கள் என்றால் அதிகம் பாலிஷ் போடாத கோதுமை மற்றும் அரிசி சாதம், கஞ்சி போன்றவை நல்லது. புழுங்கலரிசி உபயோகிப்பது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. பச்சரிசி சாதம், சத்தில்லாத சக்கைதான்.

அதிக refine செய்யப்பட்ட ஆட்டா, மைதா போன்றவற்றில் இயற்கையான நார்ச்சத்து இருக்காது.

பழங்கள் :

பழங்கள் :

அதிக காரம், மசாலா பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. கருவுற்ற தாய் நிறையப் பழங்கள் சாப்பிட வேண்டும். இது மலச்சிக்கலைத் தவிர்க்கும்.

குழந்தையின் எலும்பு :

குழந்தையின் எலும்பு :

தினமும் அரை லிட்டர் அளவு பால் குடிப்பது கருவில் உள்ள குழந்தையின் எலும்புகளுக்கு கால்ஷிய சத்தை சேர்த்து அவற்றை உறுதிப்படுத்தும். கருவுற்ற முதல் சில மாதங்களுக்கு வாந்தி, மயக்கம் இருக்கலாம். சிலருக்கு அதிகமாக இருக்கும். அச்சமயம் பழ ஜூஸ், வேகவைத்த காய்கறிகள், கஞ்சி வகைகளை அடிக்கடி சாப்பிடலாம்.

நாக்கில் ருசி :

நாக்கில் ருசி :

கருவுற்ற தாய்க்கு நாக்கில் ருசி மாறும். அதனால்தான் சாம்பல் ருசிக்கிறது. மனத்துக்குப் பிடித்த உணவுகளை வீட்டிலேயே தயாரித்துச் சாப்பிடலாம். கடலை உருண்டை, பொட்டுக் கடலை உருண்டை போன்றவற்றில் உள்ள வெல்லம் இரும்புச் சத்தை தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Avoid these fruits and vegetables during pregnancy

Avoid these fruits and vegetables during pregnancy
Story first published: Wednesday, November 29, 2017, 10:00 [IST]