Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள் பற்றி உங்களுக்கு தெரியாத சில விஷயங்கள்!
அக்காலத்தில் நம் தாத்தா பாட்டிகள் 8 குழந்தைகளைப் பெற்றெடுத்து எப்படியே வளர்த்து ஆளாக்கிவிட்டனர். ஆனால் இன்றைய காலத்தில் 2 குழந்தைகளைப் பெற்றெடுத்து வளர்த்தாலே அது பெரிய சாதனையாகும். அதிலும் 2 குழந்தைகளின் தேவையை பூர்த்தி செய்வதற்கு தாய், தந்தை இருவருமே வேலைக்கு செல்ல வேண்டியிருக்கும்.
பிறப்பு கட்டுப்பாடு முறையினால் எதிர்கொள்ளக்கூடிய பக்க விளைவுகள்!!!
அதற்காக இரண்டு குழந்தைகளுக்கு மேல் கணவன் மனைவி உடலுறவில் ஈடுபடாமல் இருக்க முடியுமா என்ன? அப்படி ஈடுபட்டாலும் கருத்தரிக்காமல் இருப்பதற்கு, தற்போது ஏராளமான வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள் அல்லது கருத்தடை மாத்திரைகளை எடுப்பது.
பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 5 உண்மைகள்!!!
இது கருத்தரிக்காமல் இருப்பதற்கு பெண்கள் எடுக்கும் மாத்திரைகளாகும். மேலும் இது பல்வேறு பக்கவிளைவுகளையும் உண்டாக்கக்கூடியது. இங்கு கருத்தடை மாத்திரைகள் பற்றி உங்களுக்குத் தெரியாத சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

விஷயம் #1
உலகில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் மாத்திரையில் ஒன்று பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளாகும். ஆய்வு ஒன்றில் சுமார் 100 மில்லியன் மக்கள் கருத்தரிக்காமல் இருப்பதற்கு பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளை எடுத்து வருவது தெரிய வந்துள்ளது.

விஷயம் #2
பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள் கருப்பை வேலை செய்வது போல உடலை ஏமாற செய்து, கருத்தரிக்க முடியாமல் செய்கிறது.

விஷயம் #3
பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரையை பெண்கள் உட்கொண்ட பின், அவர்களது உடலால் குறிப்பிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான வைட்டமின் சி, வைட்டமின் பி, ஜிங்க், மக்னீசியம், பொட்டாசியம் போன்றவற்றை உறிஞ்ச முடியாமல் போல், இந்த ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் அவஸ்தைப்படக்கூடும்.

விஷயம் #4
பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள் பெண்களின் உடலில் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைத்து, உடலுறவில் ஈடுபடும் ஆசையைக் குறைக்கும்.

விஷயம் #5
பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள் சிஸ்டிக் முகப்பரு மற்றும் ஹார்மோன் கோளாறுகளான PCOD போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது.

விஷயம் #6
நீண்ட நாட்களாக பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளை எடுத்து வரும் பெண்களுக்கு மன இறுக்கம், மிகுதியான சோர்வு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. சொல்லப்போனால், மன நிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு மாதிரி நடக்கக்கூடும்.

விஷயம் #7
தொடர்ச்சியாக பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளை எடுத்து வருவது தீவிர நோய்களான மார்பக புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், பக்கவாதம் மற்றும் மலட்டுத்தன்மையுடன் தொடர்பு கொண்டுள்ளது.



Click it and Unblock the Notifications