சுகப்பிரசவத்திற்குப் பின் பெண்ணின் யோனிப் பகுதி தளர்ந்து போகுமா?

Posted By:
Subscribe to Boldsky

பல பெண்களுக்கும் சுகப்பிரசவத்திற்குப் பின் யோனிப் பகுதி தளர்ந்து போகுமா என்ற சந்தேகம் எழும். ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உடலளவில் மட்டுமின்றி, மனதளவிலும் மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக வயிற்றில் குழந்தை வளர வளர பெண்களின் உடலில் தொடர்ச்சியாக மாற்றங்கள் மற்றும் குழந்தை இருப்பதற்கு ஏற்ற அளவும் கருப்பை மற்றும் வயிறு விரிவடையும்.

Does The Vagina Lose Its Tightness After Normal Delivery?

கர்ப்பமாக இருக்கும் போது மில்லியன் கணக்கிலான கேள்விகள் பெண்களின் மனதில் எழும். அதில் சில கேள்விகள் குழந்தைப் பேற்றிற்குப் பின் அவர்களது உடல்நலம் சம்பந்தப்பட்டதாக இருக்கும். மேலும் சிசேரியன் பிரசவத்தை விட சுகப்பிரசவம் மிகவும் ஆரோக்கியமானதாகவும் கருதப்படுகிறது. இதனால் பல பெண்களும் சுகப்பிரசவத்தையே விரும்புகின்றனர்.

சுகப்பிரசவத்தை விரும்பும் பெண்களின் மனதில் எழும் கேள்வி, பிரசவத்திற்கு பின் யோனிப் பகுதி தளர்ந்து விடுமா என்பது தான். இப்போது அதுக் குறித்து காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுகப்பிரசவத்தின் போது என்ன நடைபெறும்?

சுகப்பிரசவத்தின் போது என்ன நடைபெறும்?

சுகப்பிரசவத்தின் போது, குழந்தை யோனியில் உள்ள கருப்பை வாயின் வழியே வெளிவரும். இப்படி குழந்தை வெளிவரும் போது, கருப்பையின் வாயானது 5 செ.மீ வரை விரிவடையும்.

பிரசவம் முடிந்த பின்...

பிரசவம் முடிந்த பின்...

பிரசவத்திற்கு பின், யோனிப் பகுதிய தற்காலிகமாக தளர்ந்து இருக்கும். சில பெண்கள் யோனிப்பகுதி பல காலம் தளர்ந்து இருக்கும். இது அப்பெண்ணின் வயது, பிறந்திருக்கும் குழந்தைகளைப் பொறுத்தது.

பாலியல் வாழ்க்கை பாழாகுமா?

பாலியல் வாழ்க்கை பாழாகுமா?

சுகப்பிரசவத்தினால் பாலியல் வாழ்க்கை பாழாகுமோ என்ற அச்சம் பல பெண்களுக்கும் இருக்கும். மேலும் பல பெண்களும், சுகப்பிரசவத்திற்குப் பின், யோனி தளர்ந்து இருப்பதால், தங்களது துணை பாலியல் இன்பத்தை அடைவதில்லை என்றும் புகார் கூறுகின்றனர்.

சர்வே

சர்வே

சர்வேக்களிலும் பல ஆண்கள் சுகப்பிரசவம் மூலம் குழந்தைப் பெற்ற துணையுடன் உடலுறவில் ஈடுபடும் போது திருப்தி அடைவதில்லை என்று, பெண்கள் கூறுவதைப் போன்றே ஆண்களும் கூறினர்.

முடிவு

முடிவு

சுகப்பிரசவத்திற்கு பின் பல பெண்களின் யோனிப் பகுதி இறுக்கமடையாமல் தளர்ந்தே இருப்பதால், சுகப்பிரசவம் மூலம் குழந்தைப் பெற்றெடுத்த பெண்கள் யோனியை இறுக்கமடையச் செய்யும் உடற்பயிற்சிகளை தினமும் செய்து வந்தால் யோனிப்பகுதியை இறுக்கமடையச் செய்யலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Does The Vagina Lose Its Tightness After Normal Delivery?

Many women fear that their vagina can lose its tightness after a normal delivery.
Story first published: Friday, December 2, 2016, 13:43 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter