18 வயதிலேயே ஆண்கள் விந்தணுவை சேமித்து வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்!!!

By: John
Subscribe to Boldsky

ஆண்மை குறித்து கடந்த சில வருடங்களில் நடத்திய பெரும்பாலான ஆய்வுகளில் ஆண்களின் ஆண்மை தன்மை பொதுவாகவே குறைந்து வருவதாக முடிவுகள் கூறுகின்றன. இதற்கு, புகை, மது, எலெக்ட்ரிக் சாதனங்களின் பயன்பாடு, கதிர்வீச்சுகள், உணவுமுறையில் மாற்றம், உணவுப் பொருட்களில் இரசாயனங்களின் கலப்பு என பல காரணங்கள் கூறப்படுகிறது.

விந்தணு உற்பத்தி அதிகரிக்க வேண்டுமா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க!

ஆனால், இதற்கான தீர்வு என்ன என்பது தான் பெரிய கேள்விக் குறி? பொதுவாகவே, பெண்களை பருவமெய்துவதை போல, ஆண்களுக்கும் 15 வயது காலகட்டத்தில் விந்தணு உற்பத்தி ஆரம்பித்துவிடும். ஓரிரு ஆண்டுகளில், அதாவது 18வயதை நெருங்கும் போது, நல்ல சக்தியுள்ள வலுமையான விந்து உற்பத்தி ஆக ஆரம்பிக்கும்.

ஆண்மைக் குறைவுப் பற்றி கவலைப்பட வேண்டாம், இதைப் பற்றி முதலில் தெரிந்துக்கொள்ளுங்கள்!!!

இந்த காலக்கட்டத்தில் உற்பத்தியாகும் விந்தினை சேமித்து வைக்க கூறுகின்றனர் ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள்....

விந்தணுவிற்காக ஓர் ஆண் மகனை கடத்தி கற்பழித்த மூன்று இளம் பெண்கள் - அதிர்ச்சி!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஐரோப்பிய உயிர் நெறியியலாளர் கருத்து

ஐரோப்பிய உயிர் நெறியியலாளர் கருத்து

ஐரோப்பாவை சேர்ந்த ஓர் உயிர் நெறியியலாளர், எதிர்காலத்தில் அப்பா ஆவதில் குறைபாடு ஆகாமல் இருக்க பதினெட்டு வயது ஆண்கள் அவர்களது விந்தினை சேமிக்க வேண்டியது பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் என கூறியிருக்கிறார்.

உலகளவில் வளர்ந்து வரும் பிரச்சனை

உலகளவில் வளர்ந்து வரும் பிரச்சனை

உலகளவில் ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது, இதோடு இது நிற்காமல் பெரும்பாலானோருக்கு மனநில பதிப்புகள், மன அழுத்தம், பை-போலார் குறைபாடு போன்றவை எழ காரணமாக இருக்கிறதாம்.

சீரான நிலையின்மை

சீரான நிலையின்மை

நாம் மேற்கூறிய பல காரணங்களினால் ஆண்களின் விந்தணு திறன் மிக விரைவாக குறைந்துவிடுகிறது என கூறப்படுகிறது. இதனால், அவரவர் விந்தினை சேமித்து வைத்தாலே இதற்கான நல்ல தீர்வுக் காண முடியும் என்றும் கூறுகின்றனர்.

இதற்கான தீர்வு

இதற்கான தீர்வு

இப்போதே பல நாடுகளில் இரத்த வங்கியை போல, விந்தணு சேமிப்பு வங்கிகள் துவங்கப்பட்டுள்ளன. இதனால், விந்தணு குறைபாடு உள்ளவர்கள் குழந்தை பேரு அடைய வாய்ப்புகள் இருக்கின்றன. இதை, உலகம் முழுக்க அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். வரும் நாட்களில் இந்த பிரச்சனை பெரிதாக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தன்னார்வம் அதிகரிக்க வேண்டும்

தன்னார்வம் அதிகரிக்க வேண்டும்

முக்கியமாக ஆண்கள் மத்தியில் இதைப் பற்றிய தன்னார்வம் அதிகரிக்க வேண்டும். முக்கியமாக 18-24 வயதுடைய ஆண்கள் அவர்களது விந்தணுவை சேமிப்பது அவசியம் என்று கூறுகிறார்கள். ஏனெனில் இந்த காலகட்டத்தில் தான் ஆண்களின் விந்து நல்ல திறனுடன் இருக்கும்.

தந்தையாக உதவும்

தந்தையாக உதவும்

தாமதமாக திருமணம் செய்பவர்களோ அல்லது தாமதமாக குழந்தைப் பெற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கோ இது நல்ல தீர்வளிக்கும். ஏனெனில், பெரும்பாலும் தாமதமாக குழந்தைப் பெற்றுக்கொள்ள விரும்பும் பலருக்கு தந்தை ஆகும் கொடுப்பினை அமைவதில்லை. அதற்கு காரணம் அவர்களது விந்து அதற்குள் திறன் குறைந்துவிடுகிறது.

பழைய முறை தான்

பழைய முறை தான்

முன்பு, பெண்களுக்கு அவர்களது கரு வலுவின்றி அல்லது கருப்பை வலுவின்றி இருந்தால் வேறொரு பெண்ணின் கருவோடு விந்தணுவை இணைத்து கருத்தரிக்க செய்தது, வாடகை தாய் போன்றவற்றை போல தான் இதுவும். ஆண்களுக்கு புதிது என்பதால் சிலர் இதை ஏற்க மறுக்கின்றனர்.

மாற்று முறை...

மாற்று முறை...

இதை விட்டால் செயற்கையாக விந்தணு உற்பத்தி / தயாரிக்கும் முறையை தான் பின்பற்ற வேண்டும். ஆனால், அது இப்போதைக்கு சாத்தியம் இல்லை என்றும் கூறுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Should 18-Year-Olds Freeze Their Sperm

Do you know why should 18 years olds freeze their sperm? read here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter