விரைவாக கருத்தரிக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய 7 விஷயங்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

திருமணம் ஆனவுடன் கருத்தரிக்க விரும்புவோரை விட, ஒருசில மாதங்கள் கழித்து கருத்தரிக்க விரும்புவோர் தான் அதிகம். இதற்கு, புரிதல், நாட்களை ரசிப்பது, கொஞ்சம் நாள் இல்லறத்தில் இனிமை காண்பது என பல காரணங்கள் இருக்கின்றன.

இப்படி இவர்கள் முன்பு கருத்தடை உபகரணங்கள் உபயோகம் செய்த பிறகு, கருத்தரிக்க முயலும் போது, சிலரால் நினைத்தவுடன் கருத்தரிக்க முடியாது. இதனால் மன சோர்வு அடைபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆயினும், நீங்கள் சீக்கிரம் கருத்தரிக்க விரும்புகிறீர்கள் எனில் இந்த ஏழு நடவடிக்கைகள் முறையை பின்பற்றுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருத்தடையை தவிர்க்கவும்

கருத்தடையை தவிர்க்கவும்

நீங்கள் கருத்தரிக்க விரும்புகிறீர்கள் எனில், ஓரிரு மாதங்களுக்கு முன்னதாகவே கருத்தடை மாத்திரை மற்றும் உபகரணங்களை பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள். ஏனெனில், கருத்தடை மாத்திரைகளின் தாக்கம் ஓரிரு மாதங்கள் வரை கூட தொடரலாம் என்று கூறப்படுகிறது.

சரியான நாளை தேர்வு செய்யுங்கள்

சரியான நாளை தேர்வு செய்யுங்கள்

மாதவிடாய் சுழற்சியில் 10 - 20 ஆம் நாள் இடைவேளையில் பொதுவாக கரு நல்ல திறனுடன் இருக்குமாம். எனவே இந்நாட்களில் உடலுறவில் ஈடுபடுவது கருத்தரிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

உடலுறவுக் கொண்டவுடன் சுத்தம் செய்ய வேண்டாம்

உடலுறவுக் கொண்டவுடன் சுத்தம் செய்ய வேண்டாம்

சிலர் உடலுறவில் ஈடுபட்டவுடனே அவர்களது பெண்ணுறுப்பை சுத்தம் செய்து விடுவார்கள். இது தவறான அணுகுமுறை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். சுத்தம் செய்ய வேண்டியது அவசியம் தான். ஆனால், உடனே வேண்டாம் என்கிறார்கள். உடலுறவில் ஈடுபட்டு சிறிது நேரம் கழித்து சுத்தம் செய்தால் போதுமானது.

அதிகாலை உடலுறவு

அதிகாலை உடலுறவு

ஆண்களுக்கு அதிகாலையில் தான் விந்து எண்ணிக்கை அதிகமாகவும், நல்ல திறனுடம் இருக்கிறதாம். எனவே, அதிகாலையில் உடலுறவில் ஈடுபடுவதால் கருத்தரிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.

சாதாரணமாக ஈடுபடுங்கள்

சாதாரணமாக ஈடுபடுங்கள்

உடலுறவில் ஈடுபட நிறைய நிலைகள் (Position) இருக்கின்றன. ஆனால், சாதாரண நிலையில் ஈடுபடுவது தான் விந்து நல்ல வேகத்தில் உட்செல்ல உதவுவதாக கூறுகிறார்கள்.

ஓர் நாள் மட்டும் போதாது

ஓர் நாள் மட்டும் போதாது

கருத்தரிக்க வேண்டும் என்று விரும்புவோர் ஓர் நாள் மட்டும் உடலுறவில் ஈடுபடுவது போதாது. ஓரிரு நாட்கள் தொடர்ந்து உடலுறவில் ஈடுபட்டால் தான் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

மீண்டும் முயற்சிக்கவும்

மீண்டும் முயற்சிக்கவும்

இவ்வாறு எல்லாம் செய்தாலும் கூட ஒரே மாதத்தில் கருத்தரிப்பது நடக்காமல் போகலாம், நெகட்டிவ் ரிசல்ட் வரலாம். இது சாதாரணம் தான். எனவே, மீண்டும் முயற்சி செய்யுங்கள், இதில் எந்த தவறும் இல்லை, இது இயற்கையானது தான் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Follow This Seven Step Plan To Get Pregnant Faster

Do you want to get pregnant faster, then follow this 7 step plan. Take a look.
Subscribe Newsletter