அவசர கருத்தடை மாத்திரையால் உண்டாகும் பக்க விளைவுகள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

அவசர கருத்தடை மாத்திரையை "தி மார்னிங் ஆஃப்டர் பில்" என கூறுவது பலருக்கும் தெரிவதில்லை. மருத்துவ சொற்கூற்றில், இந்த மாத்திரைகளை லெவோனெல் மற்றும் எல்லாஒன் என அழைக்கின்றனர். பாதுகாப்பு இல்லாமல் உடலுறவு கொண்ட பிறகு கர்ப்பமாவதை தடுக்கவும், கருத்தடை கருவிகள் தோல்வியில் முடிவதால் கர்ப்பமாவதை தடுக்கவும், இந்த அவசர கருத்தடையை சிறந்த மாற்றாகப் பயன்படுத்தலாம்.

கர்ப்பத்தை தடுப்பதற்கு பல பெண்கள் இந்த அவசர கருத்தடை மாத்திரைகளை விரும்புகின்றனர். ஆனால் பாதுகாப்பற்ற உடலுறவு கொண்ட கொஞ்ச நேரத்திலேயே இதனை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. உடலுறவில் ஈடுபடும் போது ஆணுறை கிழிந்து விட்டாலும் கூட, இந்த அவசர கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.

Side Effects When Off The Morning Pill

ஆனால் பால்வினை நோய்களில் இருந்து எந்த ஒரு பாதுகாப்பையும் இது அளிக்காததால், நிஜத்தில் இந்த அவசர கருத்தடை மாத்திரைகள் முழுமையான பயனை அளிப்பதில்லை. பாதுகாப்பற்ற உடலுறவினால் ஐந்தில் ஒரு பெண் கர்ப்பமாகிறார் என கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பாக இந்த கருத்தடை மாத்திரையை உட்கொள்ளாமல் இருக்கும் போது இந்த இடர்பாடு அதிகமாக உள்ளது.

இப்போதெல்லாம் கருத்தடை மாத்திரைகளில் அதிகளவிலான புரோஜெஸ்டின் உள்ளது. அதில் சில்ச் புரோஜெஸ்டின் அடங்கியுள்ளதால், பக்க விளைவுகளும் குறைவாகவே இருக்கும். பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட்ட 72 மணிநேரத்திற்குள் இந்த அவசர கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். அப்படி உண்ணும் மாத்திரையால் சிலருக்கு பக்க விளைவுகளும் ஏற்படுகிறது. இது லெவோனெல் மற்றும் எல்லாஒன் என இரண்டு மாத்திரைகளுக்கும் பொருந்தும். அவசர கருத்தடை மாத்திரையால் உண்டாகும் சில பொதுவான பக்க விளைவுகள் இதோ!

கர்ப்பம்

அவசர கருத்தடை மாத்திரை பயன்படுத்துவதால் உண்டாகும் முக்கிய பக்க விளைவு - கர்ப்பமாவது. மருத்துவ அறிவுரையை பெற்றிட நீங்கள் 24 மணிநேரத்திற்கு அதிகமாக காத்திருக்காமல் போனாலும் அல்லது ஒரு முறைக்கு மேல் உடலுறவில் ஈடுபட்டாலும் கர்ப்பமாகும் வாய்ப்பு உள்ளது. உடலுறவில் ஈடுபட்ட 72 மணி நேரத்திற்குள் அவசர கருத்தடை மாத்திரை எடுத்திருந்தால், கர்ப்பமாகும் இடர்பாட்டை 89% குறைக்கலாம். அக்யூட் போர்ஃபியாஸ் என அழைக்கப்படும் அரிய பரம்பரை ரீதியான இரத்த கோளாறு இருக்கும் பட்சத்தில் அவசர கருத்தடை மாத்திரையை தவிர்க்க வேண்டும். கர்ப்பமாக ஆசைப்படும் பெண்களும் இந்த அவசர கருத்தடை மாத்திரையை தவிர்க்க வேண்டும்.

பெண்ணுறுப்பில் இரத்தப்போக்கு

புரோஜெஸ்டின் மட்டும் இருக்கும் அவசர கருத்தடை மாத்திரையை உட்கொள்ளும் பெண்கள் சீரற்ற மாத விடாயால் அவதிப்படுவார்கள் என ஆய்வுகள் கூறுகிறது. இதனால் மாதவிடாய் சுழற்சியும் சீரற்ற முறையில் நடைபெறும். மாதாந்திர மாதவிடாய் சுழற்சியின் முதல் மூன்று வாரத்தின் போது அவசர கருத்தடை மாத்திரையை எடுத்துக் கொண்டால், எதிர்பார்த்ததை விட விரைவிலேயே மாத விடாய் வந்து விடும்.

இருப்பினும் கருத்தடை மாத்திரையை கருமுட்டை வெளிப்படும் தேதியில் இருந்து மூன்று அல்லது அதற்கு மேலான நாட்கள் கழித்து எடுத்துக் கொண்டால், மாத விடாய் தாமதமாக வரும். இரத்த போக்கு ஏற்படுவதால், கருமுட்டை வெளிப்பட போகும் காலத்தில் அவசர கருத்தடை மாத்திரையை தவிர்க்கலாம்.

குமட்டல் அல்லது வாந்தி

Side Effects When Off The Morning Pill

லெவோனெல் ஒன் ஸ்டெப் மாத்திரையில் லேவோனோர்ஜெஸ்ட்ரல் என்ற ஹார்மோன் உள்ளது. இது இயற்கையான புரோஜெஸ்டிரோன் ஹார்மோனின் செயற்கை வடிவமாகும். இது பலருக்கும் பக்க விளைவை உண்டாக்கும். இந்த அவசர கருத்தடை மாத்திரையால் குமட்டல் மற்றும் வாந்தி உண்டாகும். இந்த மாத்திரையை எடுத்துக் கொண்ட இரண்டு மணி நேரத்திற்குள் நீங்கள் தொடர்ச்சியாக வாந்தி எடுத்து வந்தால், இதனை நிறுத்துவதற்கு பதிலாக இன்னொரு மாத்திரையையும் சேர்த்து போட்டுக் கொள்ளலாம். எல்லாஒன் மாத்திரையை எடுத்துக் கொண்டவருக்கு தலைவலி, குமட்டல், வாயிற்று வலி, தசை வலி மற்றும் முதுகு வலி போன்ற பக்க விளைவுகள் உண்டாகலாம். உங்கள் உடல் நலத்திற்காக வேறு சில மாத்திரைகளை உட்கொண்டு வரும் நேரங்களில் இந்த அவசர கருத்தடை மாத்திரைகளை தவிர்ப்பது நல்லது.

English summary

Side Effects When Off The Morning Pill

Here are some of the more common side effects of the morning pill.
Subscribe Newsletter