For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருத்தடை மாத்திரை எடுக்கும் போது மாதவிடாய் சுழற்சி தடைபடுகிறதா?

By Maha
|

பொதுவாக கருத்தடை மாத்திரை எடுத்தால், மாதவிடாய் சுழற்சிக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது. இவை கருத்தரிப்பதை மட்டும் தான் தடை செய்யும். இருப்பினும் சிலருக்கு கருத்தடை மாத்திரை எடுத்து வரும் போது, மாவிடாய் சுழற்சியானது தடைப்படும். இதனால் கருத்தரித்துவிட்டோமோ என்று அஞ்சுவார்கள். ஏனெனில் கருத்தரிக்கும் போது கூட மாதவிடாய் சுழற்சியானது நிற்கும்.

எனவே இதுவரை சீராக இருந்த மாதவிடாய் சுழற்சியானது கருத்தடை மாத்திரை எடுக்கும் போது திடீரென்று நின்றுவிட்டால், கருத்தரித்துவிட்டோம் என்று நினைக்காமல், அதற்கான உண்மையான காரணம் என்னவென்று முதலில் யோசித்துப் பாருங்கள். ஏனெனில் மாதவிடாய் சுழற்சியானது உடலில் ஏற்படும் மற்ற பிரச்சனைகளாலும் வரும். குறிப்பாக வாழ்க்கை முறை மாற்றத்தினால் கூட தடைப்படும். ஆகவே கருத்த

இங்கு கருத்தடை மாத்திரை எடுத்துக் கொண்டிருக்கும் போது மாதவிடாய் சுழற்சி எந்த காரணங்களால் நிற்கும் என்று சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எத்தனை நாட்கள் தவறியுள்ளது?

எத்தனை நாட்கள் தவறியுள்ளது?

மாதவிடாய் சுழற்சியானது 2 நாட்கள் தவறியிருந்தால் எவ்வித அச்சமும் கொள்ள வேண்டாம். ஆனால் உங்கள் மாதவிடாயானது 6 வாரத்திற்கு மேலேயும் தள்ளிப் போனால், பயப்பட வேண்டும். ஆகவே பயப்படாமல் இருங்கள்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

மன அழுத்தம் அதிக அளவில் இருந்தால் கூட மாதவிடாய் சுழற்சியானது தள்ளிப் போகும். எனவே மன அழுத்தம் இருந்தால், அதனைப் போக்க யோகா போன்றவற்றை மேற்கொள்ளுங்கள்.

இரும்புச்சத்து குறைபாடு

இரும்புச்சத்து குறைபாடு

உடலில் போதிய அளவு இரத்தம் இல்லாவிட்டாலும் மாதவிடாய் சுழற்சியானது தடைப்படும். அதிலும் பெரும்பாலும் இந்த பெண்கள் தான் இரத்தசோகையினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே இரும்புச்சத்தின் அளவை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள் உட்கொள்ளுங்கள்.

நீண்ட நாட்களாக மாத்திரை எடுப்பது

நீண்ட நாட்களாக மாத்திரை எடுப்பது

நீண்ட நாட்களாக அதாவது தொடர்ந்து ஒரு வருட காலமாக கருத்தடை மாத்திரைகளை எடுத்து வந்தாலும், மாதவிடாய் சுழற்சியானது நிற்கும். எனவே ஆறு மாதத்திற்கு ஒருமுறை சீரான இடைவெளி கொடுக்க வேண்டும். மேலும் ஒரு வருடம் எடுத்து வந்திருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

மாத்திரைகளை மாற்றுவது

மாத்திரைகளை மாற்றுவது

ஒரு மாதம் ஒரு கம்பெனியின் மாத்திரைகளை எடுத்து வந்து, மற்றொரு மாதம் வேறொரு கம்பெனி மாத்திரைகளை எடுத்து வந்தாலும், மாதவிடாய் தடைப்படும்.

பயணம்

பயணம்

கருத்தடை மாத்திரையை எடுத்துக் கொண்டிருக்கும் போது, பயணம் மேற்கொண்டால், சில நேரங்களில் உடலின் உயிரியல் கடிகாரமானது குழப்பமடைந்து, மாதவிடாய் சுழற்சியை சற்று தள்ளிப் போடும். அதிலும் விமானத்தில் பயணிக்கும் போது இதுப்போன்று நடைபெற வாய்ப்புள்ளது.

இறுதி மாதவிடாய்

இறுதி மாதவிடாய்

தற்போதைய காலத்தில் 40 வயதிற்கு மேல் நடக்கக்கூடிய இறுதி மாதவிடாயானது, 30 வயதிலயே சிலருக்கு ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த நிலையில் கருத்தடை மாத்திரைகளை எடுக்கும் போது, ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு, மாதவிடாய் சுழற்சியில் தடை ஏற்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Missed Period On The Pill? Find Out Why

Having a missed pill while on the pill can be scary. But you can have a missed period when you are not pregnant. Find out the causes a missed period.
Story first published: Friday, June 6, 2014, 15:28 [IST]
Desktop Bottom Promotion