For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களுக்கான, கர்ப்ப சோதனைக் கருவியைப் பற்றிய சில தகவல்கள்!!!

By Maha
|

இன்றைய நவீன உலகில் கர்ப்பமாக இருப்பதை எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது. அதிலும் வீட்டிலேயே கர்ப்பத்தை சோதனை செய்யும் வகையில், அதற்கான கர்ப்ப சோதனைக் கருவியானது (pregnancy strips) மருந்து கடைகளில் கிடைப்பதால், பெண்கள் கர்ப்பமாக இருப்பதை தற்காலிகமாக உறுதி செய்து கொண்டு, பின் மருத்துவரிடம் சென்று முறையான பரிசோதனையை மேற்கொண்டு, வீட்டில் உள்ளோரிடம் சந்தோஷமாக சொல்கின்றனர்.

சோதனை கருவி என்றதும் கஷ்டமான சோதனையாக இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். இது மிகவும் எளிதானது. மேலும் பெண்கள் பலருக்கு இது பற்றி சரியாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே அத்தகையவர்களுக்கா அந்த சோதனைக் கருவியைப் பற்றிய சில தகவல்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

All About The Home Pregnancy Test

கர்ப்ப சோதனை கருவியை எப்படி பயன்படுத்துவது?

கர்ப்ப சோதனைக் கருவியானது அனைத்து மருந்து கடைகளிலும் கிடைக்கும். இந்த கருவி சிறுநீரில் எவ்வளவு எச்.சி.ஜி உள்ளது என்பதை கொண்டு கர்ப்பமாக உள்ளோமா, இல்லையா என்பதை சொல்லும். பொதுவாக திருமணமான பின் மாதவிடாய் தவறும் போது, சிறுநீரில் எச்.சி.ஜி-யானது அதிகரிக்கும். எனவே மாதவிடாய் தவறினால், அப்போது இநத் கருவியைக் கொண்டு சோதனையை மேற்கொள்ளலாம்.

அதிலும் இந்த சோதனையை காலையில் எழுந்ததும் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் தான், சரியான எச்.சி.ஜி-யின் அளவானது சரியாக காண்பிக்கப்படும். மேலும் இநத் சோதனை மேற்கொள்ளும் முன், தண்ணீர் குடிக்கவே கூடாது. இல்லையெனில் அவை எச்.சி.ஜி-யின் அளவில் இடையூறை ஏற்படுத்தி, தவறான முடிவை காட்டும். வேண்டுமெனில் இந்த சோதனையை மாதவிடாய் தவறிய முதல் நாளே மேற்கொள்ளலாம். தீர்வானது சரியாக தெரிய வேண்டுமெனில், அந்த கருவியில் கொடுத்துள்ளபடி பின்பற்ற வேண்டும்.

சோதனையின் முடிவு தெரிய எவ்வளவு நேரம் ஆகும்?

இந்த சோதனையின் முடிவானது, 5 நிமிடங்களிலேயே தெரிந்துவிடும். அதிலும் சில கருவிகள், சிவப்பு, பிங்க் அல்லது ப்ளூ போன்ற நிறங்களில் தீர்வை சொல்லும். மேலும் சில கருவிகள் 'கர்ப்பம்' அல்லது 'கர்ப்பமில்லை' என்று காட்டும்.

இந்த சோதனைக் கருவி சரியான தீர்வைக் கொடுக்குமா?

நிச்சயம், இந்த கேள்வியை அனைத்து பெண்களும் கேட்பார்கள். உண்மையில், இந்த கருவியில் கொடுத்துள்ள படி பின்பற்றினால், சரியான தீர்வு கிடைக்கும். அதிலும் 97% சரியான பதிலையே கொடுக்கும். அதுவும் சூழ்நிலையைப் பொறுத்தது. உதாரணமாக, மாதவிடாய் சுழற்சிக்கான நாள் வருவதற்கு முன்பே, இந்த சோதனையை மேற்கொண்டால், சரியான தீர்வு கிடைக்காது. ஒருவேளை கருவியானது எதிர்மறையான முடிவைக் கொடுத்தால், அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. அவை கர்ப்பமாக இல்லை அல்லது உடலில் போதிய எச்.சி.ஜி இல்லை என்பது தான்.

மேலும் முறையற்ற மாதவிடாய் சுழற்சி இருந்தாலோ அல்லது தற்போது தான் கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வதை நிறுத்தியிருந்தாலோ, சரியான சோதனை முடிவைப் பெறுவது கடினம். இந்த மாதிரியான சூழ்நிலையில் 3-4 நாட்கள் கழித்து சோதனையை மேற்கொள்ள வேண்டும். அதிலும் சில பாதிப்படைந்த கருவிகளை பயன்படுத்தினால், தவறான தீர்வே கிடைக்கும். எனவே கர்ப்பத்திற்கான அறிகுறிகள் இருந்து, இந்த சோதனையை மேற்கொண்டும் சரியான பதில் கிடைக்காவிட்டால், மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது நல்லது.

English summary

All About The Home Pregnancy Test

Detecting pregnancy is easier these days. You can get a home pregnancy test done within minutes to know if you have conceived or not. Now, you don't need to take doctor's appointment just to check if you are pregnant or not.
Story first published: Wednesday, June 19, 2013, 17:48 [IST]
Desktop Bottom Promotion