Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
புதிதாக பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை ஏற்படாமல் எப்படி தடுக்கலாம் தெரியுமா?
புதிதாகப் பிறந்த குழந்தைகளில் மஞ்சள் காமாலைக்கான அறிகுறி தோல் மஞ்சள் நிறமாக இருக்கும். இது முகத்திலிருந்து மார்பு, வயிறு மற்றும் கால்களில் தோன்றத் தொடங்குகிறது.
புதிதாகப் பிறந்த குழந்தைகளைப் பாதிக்கும் பொதுவான உடல்நலப் பிரச்சினைகளில் மஞ்சள் காமாலை ஒன்றாகும். இது குழந்தையின் தோல் மற்றும் கண்களின் மஞ்சள் நிறம் இருப்பதை வைத்து வகைப்படுத்தப்படுகிறது. மஞ்சள் காமாலை குழந்தையின் இரத்தத்தில் பிலிரூபின் அதிகமாக இருக்கும்போது ஏற்படுகிறது. யுகே நேஷனல் ஹெல்த் சர்வீசஸ் (என்ஹெச்எஸ்) படி, ஒவ்வொரு 10 குழந்தைகளில் 6 பேருக்கு மஞ்சள் காமாலை உருவாகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் 10 குழந்தைகளில் 8 பேர் கர்ப்பத்தின் 37வது வாரத்திற்கு முன் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள்.

இருப்பினும், 20 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு மட்டுமே சிகிச்சை தேவைப்படும் என சுகாதார அமைப்பு கூறுகிறது. புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் மஞ்சள் காமாலை அபாயத்தை எவ்வாறு குறைக்கலாம் என இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பிறந்த குழந்தைகளுக்கு ஏன் ஏற்படுகிறது?
ஒரு ஆய்வின் கூற்றுப்படி, புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு பொதுவாக உடலியல் மஞ்சள் காமாலை உள்ளது. ஏனெனில் அவர்கள் வயது வந்தவர்களை விட அதிக இரத்த அணுக்களுடன் பிறக்கிறார்கள். இரத்த அணுக்கள் நீண்ட காலம் உயிர்வாழாமல் உடைந்து உடலில் அதிக பிலிரூபினை உண்டாக்குகிறது. குழந்தை பிறந்து 2-4 நாட்களுக்குப் பிறகு இந்த வகையான மஞ்சள் காமாலை உருவாகலாம். இருப்பினும், இரண்டு வாரங்கள் கழித்து குழந்தை குணமடைந்துவிடுவார்கள். ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், குழந்தைகள் முன்கூட்டியே பிறந்தாலோ அல்லது தாய்ப்பால் கொடுக்காமல் இருந்தாலோ அவர்களுக்கு மஞ்சள் காமாலை உருவாக வாய்ப்புள்ளது.

இரத்த வகை
குழந்தையின் இரத்த வகை தாயின் இரத்த வகையுடன் ஒன்றாக பொருந்தவில்லை என்றால் கூட மஞ்சள் காமாலை ஏற்படலாம். கூடுதலாக, குழந்தைக்கு மரபணு பிரச்சனை இருந்தால், அது இரத்த சிவப்பணுக்களை மிகவும் உடையக்கூடியதாக மாற்றுகிறது அல்லது அதிக சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையுடன் பிறந்தாலும் இது ஏற்படுத்துகிறது.

கவனிக்க வேண்டிய அறிகுறிகள்
புதிதாகப் பிறந்த குழந்தைகளில் மஞ்சள் காமாலைக்கான அறிகுறி தோல் மஞ்சள் நிறமாக இருக்கும். இது முகத்திலிருந்து மார்பு, வயிறு மற்றும் கால்களில் தோன்றத் தொடங்குகிறது. தோலைத் தவிர, குழந்தையின் கண்களின் வெள்ளைப் பகுதியும் மஞ்சள் நிறமாக மாறும். உடலில் பிலிரூபின் அளவு அதிகரிப்பது குழந்தைக்கு தூக்கம் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும். கருமையான தோலில் மஞ்சள் காமாலை அடையாளம் காண்பது கடினம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பெற்றோர்கள் செய்யக்கூடியது குழந்தையின் தோலை அழுத்தி, நீங்கள் விரலை உயர்த்தும்போது அந்த பகுதி மஞ்சள் நிறமாக இருக்கிறதா என்று சரிபார்க்கவும். மஞ்சள் நிறமாக இருந்தால் மஞ்சள் காமாலையாக இருக்கலாம்.

எப்போது மருத்துவரை சந்திக்க வேண்டும்?
புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை ஏற்படுவது மிகவும் கவலைக்குரிய விஷயம் அல்ல. அது தானாகவே மறைந்துவிடும். இருப்பினும், உங்கள் குழந்தை மிகவும் நோய்வாய்ப்பட்டதாகத் தோன்றினால், பால் அருந்தவில்லை என்றால், எல்லா நேரத்திலும் தூக்கிக்கொண்டே இருந்தால் மஞ்சள் காமாலை அதிகரித்து இருக்கலாம். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே குழந்தை மருத்துவரை அணுகுவது நல்லது.

மஞ்சள் காமாலை அபாயத்தை எவ்வாறு தடுப்பது?
ஆய்வின் படி, குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை ஏற்படாமல் தடுப்பதற்கான சிறந்த வழி உணவு. ஆதாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு வாழ்க்கையின் முதல் சில நாட்களுக்கு ஒரு நாளைக்கு எட்டு முதல் 12 தடவை உணவு கொடுக்கப்பட வேண்டும். ஃபார்முலா மில்க் ஊட்டப்பட்ட குழந்தைகளுக்கு வழக்கமாக முதல் வாரத்தில் ஒவ்வொரு இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கும் 1 முதல் 2 அவுன்ஸ் (சுமார் 30 முதல் 60 மில்லிலிட்டர்கள்) ஃபார்முலா மில்க் கொடுக்க வேண்டும் என்று சுகாதார அமைப்பு விளக்குகிறது.

சிகிச்சை
உங்கள் குழந்தைக்கு ஏற்கனவே மஞ்சள் காமாலை ஏற்பட்டிருந்தால், மருத்துவ உதவியை பெறுங்கள். அடிக்கடி தாய்ப்பால் கொடுங்கள். நீல பச்சை நிறமாலையில் ஒளியை வெளியிடும் சிறப்பு விளக்கின் கீழ் குழந்தையை வைப்பதை உள்ளடக்கிய ஒளி சிகிச்சை போன்றவற்றை செய்யப்படலாம். கடுமையான ஆனால் அரிதான சந்தர்ப்பங்களில், குழந்தைக்கு இரத்த பரிமாற்றம் தேவைப்படலாம். இதைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.



Click it and Unblock the Notifications